Sunday 20 April 2008

ANZAC தினம்

"Lest we forget"

அவுஸ்திரேலிய-நியுசிலாந்து நாட்டுப் படைகளின் கூட்டாக 1915ம் ஆண்டு அமைக்கப்பட்ட படைய
ணியின் பெயரே அன்ஸாக். (Australia and New Zealand Army Corps) 1915ம் ஆண்டு கலிபொலி மீட்பு வெளியேற்றத்துக்கும் பிறகு இப்படையணி கலைக்கப்பட்டாலும் ANZAC என்ற பெயர் நிலைத்தது. இந்தப் படையணியின் முதலாவது போரின்/தாக்குதலின் ஞாபகார்த்தமாகத்தான் அன்ஸாக் தினம் அனுஷ்டிக்கப் படுகிறது. அவுஸ்திரேலியாவிலும் நியுஸிலாந்திலும் முக்கிய (விடுமுறை) தினம். 1914ம் ஆண்டு முதலாம் உலகப் போர் தொடங்கிய போது கலிப்பொலி குடாநாட்டைக் கைப்பற்றி நேச நாட்டுப் படைகளுக்கு கருங்கடற் பிரதேசத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக நேச நாடுகளின் கூட்டணிப் படையில் ஒரு பகுதியாக அன்சாக் படையினர் அமைந்தனர். இஸ்தான்புல்லைப் பிடிப்பதும் ஒரு திட்டமாக இருந்தது. ஜேர்மனிக்கு ஆதரவாக இருந்த துருக்கியின் படையினரின் தாக்குதலுக்கு மத்தியில் 1915ம் ஆண்டு ஏப்ரல் 25ம் திகதி கடல் வழியாக அன்ஸாக் படையணியினர் பிழையான கடற்கரையில் கரையிறங்கினர். வேறு சில பகுதிகளிலும் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டிருந்தன. அன்சாக் படையினரின் கலிப்பொலி தாக்குதல் பற்றி ஏலவே தகவல் கிடைத்து துருக்கப்படையினர் ஆயத்தமாக இருந்தமையால் இத்தாக்குதல் பலனளிக்காமல் கிட்டத்தட்ட 8 மாதங்கள் நீடித்தது. 8000 அவுஸ்திரேலிய மற்றும் 2000 நியுஸிலாந்து வீரர்களும் சாவைத் தழுவினர்.

(படம்:கலிபொலியிலுள்ள லோன் பைன் இடுகாடு)
இவ்வீரர்களின் உயிரிழப்புப் பற்றிய செய்தி முதல் முறையாகக் கிடைத்ததும் ஏப்ரல் 30ம் திகதி அரைநாள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. 1916ம் ஆண்டு முதல் ஏப்ரல் 25 அவர்களது உயிர்த்தியாகத்தை ஞாபகிக்கிற நாளாக அறிவிக்கப்பட்டு அனுஷ்டிக்கும் வழக்கம் அவுஸ்திரேலியா-நியுஸிலாந்தில் உருவானது. அதிகாலை நேரத்து விழித்திருப்புகளும் சடங்குகளும் அணிவகுப்புகளும், reunionsகள், பிரார்த்தனைக் கூட்டங்கள் என்பனவும் two-up விளையாட்டும் அன்ஸாக் தினத்துக் கலாச்சாரக்கூறுகளாகும். (two-up என்பது இரு நாணயங்களை மேலெறிந்து தலையா பூவா என அவற்றின் முடிவின் மேல் பந்தயம் கட்டுவது)

















படங்கள்: சிட்னியிலுள்ள அன்ஸாக் நினைவாலயம் & அதனுள்ளிருக்கும் வாள் மீது உயிர் துறந்த வீரன் சிலை

அவுஸ்திரேலியா-நியுஸிலாந்து பங்கு கொண்ட பிற்காலப் போர்களில் போரிட்ட வீரர்களையும் உள்வாங்கி கொண்டாடும் முகமாக அன்ஸாக் தினம் மாறியுள்ளது. அன்ஸாக் தினத்தைக் கொண்டாடும் வகையில் கலிப்பொலிக்குச் செல்வதும் அங்கு நடக்கும் அதிகாலைப் பிரார்த்தனையில் கலந்து கொளவதும் வழக்கமாக இருக்கிறது.

அன்ஸாக் தினத்தன்று கடைப்பிடிக்கப்படும் மௌன நிமிடங்க
ளின் இறுதியில் பின்வரும் அஞ்சலிக் கவிதை கூறப்படும்:
They shall not grow old as we are left that grow old
Age shall not weary them,
Nor the years condemn
At the going down of the sun
and in the morning
we will remember them.
"Lest we forget"


---------------------------------------
விக்கிபீடியாவில்

(சிட்னியில் நடைபெறும் அணிவகுப்பின் படங்கள் கைக்குக் கிடைத்தவுடன் வலையேற்றப்படும்.)

6 comments:

கானா பிரபா said...

விரிவான விளக்கத்தோடு சிறப்பான பதிவாக அமைந்திருக்கின்றது. இந்த நாட்டில் வாழ்ந்தாலும் பலருக்கு பொது விடுமுறை என்ற அளவில் தான் தெரியும், இக்கட்டுரை பல விளக்கங்களைக் கொடுக்கும்.

மிக்க நன்றி ஷ்ரேயா,

கானா பிரபா said...

கடந்த வாரம் நமது அவுஸ்திரேலிய ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் "அறிவுக்களஞ்சியம்" நிகழ்ச்சியில் அன்ஸாக் தினம் குறித்த கேள்வி பதில் தயாரித்திருந்தேன். அதையும் இங்கே இடுகின்றேன்.


1. ANZAC day ஏன் ஏப்ரல் 25கொண்டாடப்படுகின்றது?
அவுஸ்திரேலிய, நியூசிலாந்து துருப்புக்கள் முதன் முதலில் Gallipoli இல் இறங்கிய நாள்
First landing of the Anzacs at Gallipoli (Turkey) 1915

2. ANZAC இதன் விரிவாக்கம் என்ன?
Australian and New Zealand Army Corps

3. ANZAC Cove என்பது எங்கே இருக்கின்றது? வெளிநாடு ஒன்றில் இருக்கின்றது அது எங்கே?
Gallipoli (Turkey)
ANZAC Cove (in Turkish language 'Anzak Koyu') is a small cove on the Gallipoli peninsula in Turkey

4. ANZAC day, Tonga நாட்டிலும் பொது விடுமுறையாக ஆக்கப்பட்டு நினைவு கூரப்படும் நாடுகளில் ஒன்று?
சரியா தவறா? சரி
Anzac Day is also a public holiday in the Cook Islands, Niue, Samoa and Tonga.

5. Gallipoli இல் அவுஸ்திரேலிய , நியூசிலாந்து துருப்புக்கள் இறங்கிய 75 ஆண்டு நினைவுகூரல் எத்தனையாம் ஆண்டு நடைபெற்றது?
1990

6. இந்த நாளுக்கான அடையாளமாக ஒதுக்கப்பட்ட மலர் எது? (ஆங்கிலத்திலேயே சொல்லலாம்)
Red poppies

7. குறித்த இந்த நாள் காலை உணவு ஒரு குறித்த அடையாளப் பெயர் கொண்டு அழைக்கப்படும், அதன் பெயர்?
Gunfire Breakfast’
'gunfire breakfast' (coffee with rum added) which occurs shortly after many dawn ceremonies

8. இந்த ANZAC day எத்தனையாவது உலகப்போர் சம்பந்தப்பட்டது?
1வது

9. ANZAC day உத்தியோகபூர்வமாக அவுஸ்திரேலியாவில் எத்தனையாம் ஆண்டு முதல் நினைவுகூரல்
நிகழ்வாக நடக்கின்றது?
1937

10)AIF இதன் விரிவாக்கம் என்ன?
Australian Imperial Force

நெல்லைக் கிறுக்கன் said...

ஷ்ரேயா,
நான் சிட்னி வந்திருந்த போது, இந்த ANZAC நினைவாலயத்துக்குப தனியாப் போயிருந்தேன். அப்ப எனக்குத் தெரியாத பல செய்திகள உங்க கட்டுரை தெளிவு படுத்தியது.

கூடுதல் செய்திகள் கொடுத்த தல பிரபாவிற்கு நன்றி...

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

நன்றி பிரபா(எழுதச் சொன்னதுக்கும் சேர்த்து)

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

படம் பிடிக்கிற வேலை குடுத்த ஆள் அன்டைக்கு அணிவகுப்புப் பார்க்கப் போகல்லயாம், அதால படங்கள் இல்ல. :O(

Kanags said...

படங்களுடன் நல்ல கட்டுரை. இதையும் பாருங்கள்:
விக்கிபீடியாவில் அன்சாக் நாள் கட்டுரை.