சிட்னி சாம்பார் - யூன் 13 வரை
நீண்ட நாட்களாக இந்த வலைப்பதிவில் ஒன்றும் எழுதாமல் புல் பூண்டு முளைச்சிருக்கு ;-)
எனவே முடிந்தவரை வாராந்த அவுஸ்திரேலிய நடப்பு செய்திகளைப் பதிவோம் என்றிருக்கிறேன்.
யூன் 8 ஞாயிற்றுக்கிழமை யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் சிட்னிக் கிளையால் நடத்தப்பட்ட இசைநிகழ்ச்சிக்குப் போனேன். நான் யாழ் இந்து இல்லை, என்னைப் போலவே பலரும் அப்படியே. கலாசூரி அருந்ததி சிறீரங்க நாதனின் மகன் சாரங்கனின் இசை நெறியாள்கையில் இந்த வருசத்தோடு மூன்றாவது தடவையாக "கீதவாணி" விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விண்ணப்பித்த பலரில் வடிகட்டி மூன்று வகையான வயதுப் பிரிவினரை உள்ளடக்கிய போட்டி இருந்தது. ஒவ்வொரு பிரிவிலும் ஆண், பெண் என்று பிரிக்காமலே தேர்வு இருந்தது. சும்மா சொல்லக்கூடாது சோக்கான நிகழ்ச்சி அது. மேலும் விபரங்களும் படங்களும் தமிழ் சிட்னி இணையத்தில்
ரிக்கற் விலை $25 ஏன் உந்த விலை எண்டு கேட்ட கொக்குவில் இந்துக்காரருக்கு
"அது பிராண்ட் நேமுக்கு (Brand name) விலை கூட "
என்றார் யாழ் இந்துக்காரர். (ஸ்ஸ்ஸ்யப்பா.... இப்பவே கண்ணக் கட்டுதே)
கூட்டம் ஆயிரத்தை தொட்டு மண்டபத்துக்கு வெளியிலும் நின்றது. தாமதமாக வந்து இருக்கை இல்லாமல் வெளியில் குளிரில் நின்றவர் தனக்கு ரிக்கற் விற்றவரைத் தேடிக் கொண்டிருந்தார்.
*************************************************************
இந்த வார முற்பகுதியே விடுமுறை நாளாக இருந்ததால் கடந்த வாரம் ஒரு நீண்ட வாரமாக இருந்தது. இங்கிலாந்து மகாராணியாரின் பிறந்த நாளைக்கு இங்கே விடுமுறை. நிறையப் பேருக்கு எதற்காக விடுமுறை கிடைத்ததென்றே தெரியாது. வாகனங்களில் குறித்த எல்லைக்கு மேல் ஓடுபவர்களுக்கு இரட்டிப்பு மடங்கு புள்ளிகளை லைசன்ஸில் இருந்து இழக்கும் தற்காலிக நடைமுறை கடந்த வியாழனில் இருந்து திங்கள் வரை அமுலில் இருந்தது. அப்படியும் வீதி விபத்துக்களும், மரணங்களும் நிகழ்ந்தன.
******************************************************************
கடந்த வெள்ளிக்கிழமை நியூசவுத்வேல்ஸ் மாநில கல்வி அமைச்சர் Della Bosca வும் அவர் மனைவி Belinda Neal (இவர் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்) நண்பர்கள் சகிதம் சிட்னியில் உள்ள Iguanas Waterfront restaurant என்ற களிப்புறும் உணவகம் சென்று Belinda Neal அங்குள்ள ஓட்டல் சிப்பந்திகளுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கின்றனர். மாநிலக் கல்வி அமைச்சர் பொறுப்பில் இருந்து Della Bosca வை தற்காலிகமாக இடை நிறுத்தி பொலிஸ் விசாரணைகளுக்கு ஒத்துள்ளைக்க நியூசவுத்வேல்ஸ் மாநில முதல்வர் Morris Iemma கட்டளை இட்டிருக்கிறார். பத்திரிகை, வானொலி,தொலைக்காட்சி, எதிர்க்கட்சி எல்லாவற்றுக்குமே அவல், சுண்டல் கிடைத்த திருப்தியில் இந்த அமைச்சரையும் பாரியாரையும் வெளுத்து வாங்குகிறார்கள். இதுபோதாதென்று இவர்களின் பக்கத்து வீட்டுக்காரர்களும் இந்த அமைச்சரும் மனைவியும் அடிக்கடி சண்டைபோடுவதாக புகார் கொடுத்து விட்டார்கள். எல்லா நாட்டிலும் மேர்வின் சில்வா மாதிரி அமைச்சர் இருக்க முடியுமே?
*****************************************************
Toyota கார் நிறுவனம் 35 மில்லியன் டொலர்களை அரச உதவிப்பணமாகப் பெற்று இங்கே hybrid car என்னும் கார்களை 2010 இலிருந்து தயாரிக்கவுள்ளது. அதிகரித்த பெற்றோல் விலையை சமாளிக்கும் ஒரு உபாயமாக அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட் கொண்டு வந்த திட்டம் இது. இவர் ஏற்கனவெ கன்னாபின்னாவென்று ஓவ்வொரு நாளும் விலையை ஏற்றும் பெற்றோலிய நிறுவனங்களைக் கண்காணிக்கும் குழுவொன்றை ஒரு சில மாதம் முன்னர் அமைத்தார். சீமான் ஆரம்பிச்ச நேரமோ தெரியவில்லை பெற்றோலிய விலை முன்பை விட சுனாமியாக ஏறிவிடவும், எதிர்க்கட்சிகளின் கத்தலில் இருந்து தப்பவே இப்போது ஹைபிரைட் கார் ஓட்டிக் காட்டுகிறார்.
******************************************************
தசாவதாரம் படக் காய்ச்சல் இங்கேயும் கடந்த வாரம் முதல் அடிக்கத் தொடங்கிவிட்டது. மூன்று டொலருக்கு மூன்று படம் உள்ள டிவிடி வாங்கிப் பார்த்தால் போதும் என்கிறவையும் படம் பார்க்கவேணும் எண்டு முந்தியடிக்கினம். ஒரு ரிக்கெட் 18 டொலர் போகுது. இன்றிலிருந்து வார இறுதி முழுதுமே எல்லாக் காட்சியுமே பதிவு செய்யப்பட்டுட்டுதாம், கலரியில் முதல் வரிசை உட்பட.
*******************************************************
முகப்புப் படம் நன்றி: Reuters and AFP
9 comments:
"அது பிராண்ட் நேமுக்கு (Brand name) விலை கூட " //
பின்னே.. இருபத்தைந்தே குறைச்சல்..
ராய்ட்டருக்கும் AFP க்கும் நன்றி சொல்லும் உம்ம நேர்மைக்கு அளவேயில்லையா
//இரட்டிப்பு மடங்கு புள்ளிகளை லைசன்ஸில் இருந்து இழக்கும் தற்காலிக நடைமுறை கடந்த வியாழனில் இருந்து திங்கள் வரை அமுலில் இருந்தது. அப்படியும் வீதி விபத்துக்களும், மரணங்களும் நிகழ்ந்தன.
///
எல்லா நாடுகளிலுமே இதே நிலைமைதானா??
இங்கு கத்தாரிலும் கூட கடுமையான சட்டங்கள் இருந்தாலும் கூட விபத்துக்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது மக்கள் சட்டங்களை மதிக்காமல்தான் பிரயாணிக்கிறார்கள் !
//சயந்தன் said...
ராய்ட்டருக்கும் AFP க்கும் நன்றி சொல்லும் உம்ம நேர்மைக்கு அளவேயில்லையா//
நன்றி மறக்கக்கூடாதப்பா ;-)
// ஆயில்யன் said...
//இரட்டிப்பு மடங்கு புள்ளிகளை லைசன்ஸில் இருந்து இழக்கும் தற்காலிக நடைமுறை கடந்த வியாழனில் இருந்து திங்கள் வரை அமுலில் இருந்தது. அப்படியும் வீதி விபத்துக்களும், மரணங்களும் நிகழ்ந்தன.
///
எல்லா நாடுகளிலுமே இதே நிலைமைதானா??//
வாங்க ஆயில்யன்
நீண்ட வார இறுதி என்றால் போதையில் காரே தள்ளாடும் இங்கே ;-)
//"அது பிராண்ட் நேமுக்கு (Brand name) விலை கூட "//
உண்மைதானே..!
//இந்த வார முற்பகுதியே விடுமுறை நாளாக இருந்ததால் கடந்த வாரம் ஒரு நீண்ட வாரமாக இருந்தது. இங்கிலாந்து மகாராணியாரின் பிறந்த நாளைக்கு இங்கே விடுமுறை. நிறையப் பேருக்கு எதற்காக விடுமுறை கிடைத்ததென்றே தெரியாது. வாகனங்களில் குறித்த எல்லைக்கு மேல் ஓடுபவர்களுக்கு இரட்டிப்பு மடங்கு புள்ளிகளை லைசன்ஸில் இருந்து இழக்கும் தற்காலிக நடைமுறை கடந்த வியாழனில் இருந்து திங்கள் வரை அமுலில் இருந்தது. அப்படியும் வீதி விபத்துக்களும், மரணங்களும் நிகழ்ந்தன.//
அதெல்லாம் நகரங்களில் மட்டும் தான் இரட்டை டிமெரிட்ஸ் கானா. இங்கே டவுன்சுவில்லில் அதெல்லாம் கிடையாது. ஆனால் கண்காணிப்பு அதிகமாக இருக்கும். விபத்துக்களும் இருக்கும்.
//சீமான் ஆரம்பிச்ச நேரமோ தெரியவில்லை பெற்றோலிய விலை முன்பை விட சுனாமியாக ஏறிவிடவும், எதிர்க்கட்சிகளின் கத்தலில் இருந்து தப்பவே இப்போது ஹைபிரைட் கார் ஓட்டிக் காட்டுகிறார்.//
அதென்னவோ உண்மை தான். உலகில் வலதுசாரிகள் என்ன செய்தாலும் எதிர்ப்பு குரல்கள் குறைவாகவே இருக்கும். இடதுசாரிகள் என்ன தான் நல்லது செய்தாலும் நாடே அலுறும். ஏ பி சி யில் லேற்லைனில் ஒரு நாள் இரவு டோனி அப்போட் பயன்படுத்திய வார்த்தை பிரயோகம் முகங்சுளிக்க வைத்தது.
//கடந்த வெள்ளிக்கிழமை நியூசவுத்வேல்ஸ் மாநில கல்வி அமைச்சர் Della Bosca வும் அவர் மனைவி Belinda Neal (இவர் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்) நண்பர்கள் சகிதம் சிட்னியில் உள்ள Iguanas Waterfront restaurant என்ற களிப்புறும் உணவகம் சென்று Belinda Neal அங்குள்ள ஓட்டல் சிப்பந்திகளுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கின்றனர். மாநிலக் கல்வி அமைச்சர் பொறுப்பில் இருந்து Della Bosca வை தற்காலிகமாக இடை நிறுத்தி பொலிஸ் விசாரணைகளுக்கு ஒத்துள்ளைக்க நியூசவுத்வேல்ஸ் மாநில முதல்வர் Morris Iemma கட்டளை இட்டிருக்கிறார். ///
இந்த so called Power couple ன் அட்டகாசம் கொஞ்சம் ஓவர் தான். இன்று இங்கொயரரில் ஒரு கட்டுரை பார்த்தேன். இன்னும் படிக்கவில்லை.
அப்புறம் கானா, அந்த State Of Origin -2, Blues forward Greg Bird ன் Big disgrace பத்தியும் எழுதியிருக்கலாம்ல. ஆனாலும் 30 - 0 கொஞ்சம் கேவலம் தான்ல. அதுவும் கேன் டோட்ஸ் கிட்ட ...
Go Maroons...
// ஆ.கோகுலன் said...
//"அது பிராண்ட் நேமுக்கு (Brand name) விலை கூட "//
உண்மைதானே..!//
ஓமோம் யாழ் இந்துக்காரரே ;-)
வாங்க சத்யா
விளையாட்டில் எனக்கு பெரிதாக ஆர்வம் இல்லை என்பதால் விளையாட்டாக விட்டுட்டேன் ;-)
உங்க பின்னூட்டமே இந்த நாட்டின் நிலமைகளை நன்றாக அவதானிக்கும் பண்பை காட்டுகிறது. நீங்களும் இது போல் சாம்பார் வைக்க அன்புக் கட்டளை இடுகின்றேன்.
ஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.
"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்
போராளியின் வெற்றிப்பேரிகை"
http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_3130.html
அன்புடன்,
விஜய்
கோவை
Post a Comment