Tuesday, 12 February 2008

திருடப்பட்ட தலைமுறை (Stolen Generation)..!


ஓவ்வொரு பூர்வீக குடிமக்களுக்கும் நேரும் அவலம் தான் அவுஸ்திரேலிய ஆதிப்பழங்குடியினரைப்(Aborigines) பொறுத்தவரை அப்போது நிகழ்ந்தது. தாமுண்டு தம் வாழ்வுண்டு என்று இயறகையோடு இயற்கையாக வாழ்ந்தவர்களை காடுகளை அழிப்பது போல வந்தேறு குடிகளான காலனித்துவ ஆதிக்கம் கொண்ட வெள்ளையர்கள் வேட்டையாடிது மாறாவடு கொண்ட வரலாறு.

சுமார் 70 ஆயிரம் வருடங்கள் தொன்மை வரலாற்றைக் கொண்ட இந்தப் பூர்வகுடிகளுக்கு நிரந்தரச் சனி தொற்றியது 1788 ஆம் ஆண்டில் பிரித்தானிய காலனித்துவமாக மாறும் நாளில் இருந்து தொடங்கியது. ஆரம்பத்தில் கொடும் கொள்ளைக்கார, கொலையாளிக் கைதிகளை பிரிட்டனில் இருந்து நாடு கடத்தும் திறந்த வெளிச்சிறையாகவே இந்த நாடு பயன்பட்டது. தமக்கென்று வாழ்வை நதிக்கரையோரங்களிலும், உணவுப் பயிர்களை அண்டிய பகுதிகளிலும் அமைத்துக் கொண்ட பூர்வகுடிகளைப் பலவந்த வெளியேற்றல்கள் துப்பாக்கி முனையில் தான் நடாத்த வேண்டி ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான பூர்வகுடிகள் கங்காருக்கள் போல வேட்டையாடப்பட்டனர். இந்தக் காலனித்துவம் நிகழ்ந்த காலகட்டத்தில் மட்டும் சுமார் 750,000 பூர்வ குடிகள் வாழ்ந்திருந்தார்கள் என்பது காலக் கணக்கெடுப்பு சொல்லும் செய்தி.


ஜனவரி 1, 1901 ஆம் ஆண்டு பொதுநலவாய அமைப்பு சார்ந்த அவுஸ்திரேலியா (Commonwealth of Australia) என்று இந்த நாடு மாற்றப்பட்டபோதும் கூட இந்தப் பூர்வகுடிகள் தேசிய கணக்கெடுப்பில் அடங்காதவாறு சட்டம் இயற்றப்பட்டதோடு இவர்களை Fauna (நாட்டின் பூர்வ பிராணிகள்) என்ற வகையிலேயே அடக்கினார்கள்.


1910 ஆம் ஆண்டிலிருந்து 1970 ஆம் ஆண்டு வரை சுமார் 100,000 வரையிலான சிறுவர்கள் பொலிசாரினாலும், சமூக நலசேவையாளர்கள் என்று சொல்லப்படுபவர்களாலும் தம் குடும்பங்களில் இருந்து பலவந்தமாகப் பிரித்தெடுக்கப்பட்டனர். இச்சிறுவர்களில் பெரும்பான்மையோர் ஐந்து வயதுக்குக் கீழேயானவர்கள். அப்போது இந்தக் கொடு செயலைத் தடுக்க சட்டமேதும் கிடையாது. அவுஸ்திரேலிய பூர்வ குடி என்ற முகவரி மட்டும் இருந்தால் போதும், மற்றதெல்லாம் தானாக நடக்கும்.

இவ்வாறு தம் குடும்பங்களில் இருந்தும் நிரந்தரமாக, பலவந்தமாகப் பிரித்தெடுக்கப்பட சிறுவர்கள் கிறீஸ்தவ தேவாலயங்களிலும், சமூக நல அமைப்பு என்று சொல்லப்படும் அமைப்புக்களிலும் அடைத்து வைக்கப்பட்டனர். சிலர் வெள்ளையின மக்களின் தத்தெடுப்புக்கு ஆளானார்கள். இதுவரை இயற்கையோடு வாழ்ந்து தமக்குப் பிடித்த உணவை மட்டும் உண்டு வந்த இவர்களுக்கு அட்டவணைப் பிரகாரம் உணவு என்னும் பெயரில் ஏதோவெல்லாம் கிடைத்தது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அபலைகள் கூட உண்டு. அடிப்படைக் கல்வியாவது கிடைக்குமென்றால் அதுவும் இல்லை. காடு, கழனிகளுக்கான வேலையாட்கள் தான் உற்பத்தியாயினர்.

இவர்களைத் தான் ‘Stolen Generations’ அதாவது திருடப்பட்ட தலைமுறை என்று அடையாளம் இட்டு இன்று வரை அல்ல என்றுமே மாறா வடு முத்திரை பதிக்கப்பட்டுவிட்டது.

அடுத்ததாக ஆதிப்பழங்குடியோடு கலந்து பிறப்பெடுத்த ஐரோப்பிய கலவைக் குழந்தைகள் தான் அதிகளவு இலக்கு வைக்கப்பட்டனர். 1937 ஆம் ஆண்டளவில் அவுஸ்திரேலிய பூர்வகுடிகளோடு கலந்து பிறந்த ஐரோப்பியக் கலப்பினக் குழந்தைகளைப் பலவந்தமாகப் பிரித்தெடுத்து அரசின் மேற்பார்வையில் வாழவைக்கும் நடைமுறையும் பாய்ந்தது. இந்தக் கொடூரம் 1970 ஆம் ஆண்டு வரை பூர்வகுடிச்சனத்தொகையில் 10% இலிருந்து 30% வீதமாக இருந்திருக்கின்றது.

இதன்மூலம் இந்த நாட்டுக்கு வந்து காலனித்துவ அரசு அமைத்துக்கொண்டவர்கள் சாதிக்க நினைத்தது இது தான்:

1. இரண்டு மூன்று தலைமுறைக்கு தொடரும் இவ்வாறான பிரித்தெடுத்து வளர்த்தல் என்னும் முறைமை "பூர்வ குடிகள்" என்ற சமுதாயமே இல்லை என்ற நிலைக்கு மாற்றமுடியும்.

2. பூர்வகுடிகளின் பேச்சு வழக்கையும், சடங்குகளையும் இல்லாதொழித்தல்

இந்த நோக்கங்களை அமுல்படுத்த அப்போதிருந்த ஆட்சியாளர்கள் பகீரதப்பிரயத்தனம் கொண்டு உழைத்தார்கள். பிள்ளைகளைத் தேடி ஓடி வரும் பெற்றோர்கள் அடித்துத் துரத்தப்பட்டார்கள். சில பிள்ளைகள் இந்த நாட்டிலேயே இல்லாமல் எங்கோ ஒரு இன்னொரு காலணி நாட்டுக்குத் தொலைந்து போயினர். இதை Rabbit-Proof Fence என்ற ஆங்கிலப் படமும் காட்சிப்படுத்தியிருக்கின்றது.


இன்று வரை தமது கலாச்சார வேர்களைத் தொலைத்தும், இயல்பு வாழ்வைத் தொலைத்தும் தற்கொலை, போதைக்கு அடிமையாதல் மன அழுத்தம், சட்டவிரோத நடவடிக்கைகள், என்று திசைமாறிய கங்காருக்கள் ஆகிவிட்டனர் இந்தச் சமுதாயத்தவர்.


காலம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை அல்லவா? தொடர்ந்த நூற்றாண்டுக் கொடுமைகளுக்கு எல்லை போடுமாற் போல மனித உரிமைவாதிகள், மற்றும் பூர்வகுடிகளில் நன்கு படித்துத் தேறிய புலமையாளர்களின் தொடர்ந்த கண்டனக் குரல் வேகவேகமாக, இன்னும் பலமாக ஒலிக்கத் தொடங்கியது.அதன் பலனாகத் தோன்றியதே 1995 ஆம் ஆண்டில் நிகழ்ந்த Bringing them Home’ என்ற விசாரணை நிகழ்வு.Federal Attorney-General, Michael Lavarch என்பவரின் மேற்பார்வையில் மே 11, 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் பூர்வகுடிகளைப் பிரித்தெடுத்துச் சின்னாபின்னப்படுத்திய வரலாற்றின் சாட்சியமாக 700 பக்க அறிக்கையில் 26 மே 1997 ஆம் ஆண்டு தேசிய பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த விசாரணை அறிக்கை பூர்வகுடித் தலைமுறை ஒன்றுக்கு நிகழ்ந்த பல கோரமான உண்மைகளை ஆவணப்படுத்தியது. இந்த ஆவணப்பிரகாரம் 54 பரிந்துரைகளை வழங்கியிருந்ததும் அதில் மூன்று முக்கிய பரிந்துரைகளாவன:

1. அவுஸ்திரேலிய பூர்வீகச் சமூகத்துக்கான வாழ்வைச் சீரமைக்கும் நிதிக்கொடுப்பனவு முறைமையை ஏற்படுத்தல்.

2. பலவந்தமான பிரித்தெடுப்புக்கு ஆளான தலைமுறைக்கு Van Boven பரிந்துரைத்த மனித நேயச் செயற் திட்டப்பரிந்துரைகளின் படி புனர்வாழ்வு அமைப்பை ஏற்படுத்தல். ( Wikipedia: Theo van Boven (born 1934) is a Dutch jurist and professor emeritus in international law.In 1977 he was appointed director of the United Nations' Division for Human Rights. From 1986 to 1991, he was the UN's Special Rapporteur on the Right to Reparation to Victims of Gross Violations of Human Rights and, from 2001 to 2004, Special Rapporteur on Torture)

3. அவுஸ்திரேலிய தேசிய மற்றும் மாநிலப்பாராளுமன்றுகள் தமது முன்னோர்கள் சட்ட ரீதியாகவும், கட்டளைப் பிரகாரமும் செய்த இப்படியான வரலாற்றுத் தவறுகளை ஏற்று அதிகாரபூர்வமான மன்னிப்பைப் பகிர்தல்.

இந்தப் பரிந்துரை குறித்த மேலதிக வாசிப்புக்கு Bringing them Home

இதன் பிரகாரம் அவுஸ்திரேலிய மாநிலப் பாராளுமன்ற முதல்வர்கள் இவ்வாறு தம் அனுதாபத்தையும், பொதுமன்னிப்பையும் விடுத்திருந்தனர்.

நியூ சவுத் வேல்ஸ்

"apologises unreservedly to the Aboriginal people of Australia for the systematic separation of generations of Aboriginal children from their parents, families and communities" - Mr Bob Carr, Premier of New South Wales, 18 June 1997

விக்டோரியா

"That this House apologises to the Aboriginal people on behalf of all Victorians for the past policies under which Aboriginal children were removed from their families and expresses deep regret at the hurt and distress this has caused and reaffirms its support for reconciliation between all Australians" - Mr Jeff Kennett, Premier of Victoria, 17 September 1997

மேற்குறித்த மாநிலங்கள் உட்பட அவுஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலப் பாராளுமன்றுகள் தமது முந்திய வழித்தோன்றல்களின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்றன.

ஆனால் அப்போது பிரதமராக இருந்த Mr John Howard, 26 August 1999 Motion of Reconciliation என்ற அடிப்படையில்
"deep and sincere regret that indigenous Australians suffered injustices under the practices of past generations, and for the hurt and trauma that many indigenous people continue to feel as a consequence of those practices." என்று தமது அரசின் சார்பிலான அறிக்கையை விடுத்திருந்தார். இந்த வார்த்தைப் பிரயோகம் "unreserved apology" அதாவது எல்லை கடந்த மன்னிப்பாக இருக்க வேண்டும் என்று அப்போதய எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருந்த தொழிற்கட்சித் தலைவர் Kim Beazley இன் எண்ணம் அப்போது நிறைவேறாது போயிற்று.


கடந்த 24 நவம்பர் 2007 நீண்டதொரு வனவாசத்தின் பின் தேர்ந்தெடுக்கப்பட்ட Kevin Rudd தலைமையிலான தொழிற்கட்சி அரசாங்கம் தனது தேர்தல் வாக்குறுதியாக "சம்பிரதாயபூர்வமான பொது மன்னிப்பை" இந்தத் திருடப்பட்ட சமுதாயத்துக்குக் கொடுப்பது என்று வாக்களித்தது. தற்போதய அவுஸ்திரேலியப் பிரதமர் Kevin Rudd இந்தச் சம்பிரதாயபூர்வமான பொது மன்னிப்பு எப்படி அமையவேண்டும் என்று பூர்வகுடிகளின் தலைவர்களிடம் கலந்தாலோசித்து முடிவெடுத்திருப்பதாகக் கூறியிருக்கின்றார்.
இவ்வாரம் பெப்ரவரி 13 ஆம் திகதி, புதன் கிழமை, அவுஸ்திரேலிய தேசிய பாராளுமன்றில் வைத்து காலை 9 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறவிருக்கின்றது.

இந்த அரசு இப்படியானதொரு செயற்பாட்டில் இறங்கியிருப்பது உண்மையில் பாராட்டப்படவேண்டிய விடயம். ஆனால் வெறும் வெற்றுக் காகித மன்னிப்புக்கள் அடுத்த தேர்தலுக்கான வாக்கு வங்கிக்கான முதலீடாக மட்டுமே அமையும். உளப்பூர்வமான, நேர்மையான அரசாக இருக்கும் பட்சத்தில் இந்தத் தொலைந்த தலைமுறைக்கு நிரந்தரமான இழப்பீட்டுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். கூடவே அமெரிக்காவின் அடியாளாக இருந்து மற்றைய நாடுகளின் இறைமைக்குள் மூக்கை நுளைத்து அவுஸ்திரேலியா எல்லை கடந்த நாடுகள் மீதான எல்லை கடந்த பயங்கரவாதத்தை நிறுத்தி அந்தந்த நாடுகளில் நிமிஷத்துக்கு நிமிஷம் திருடப்பட்டு வரும் மனித உரிமைகளையும் காக்க முன்வர வேண்டும். இவையெல்லாம் செய்தால் மன்னிப்பே தேவையில்லை, மண்டியிட்டு வணங்குவார்கள் அம்மக்கள்.


அவுஸ்திரேலியப் பிரதமர் Kevin Rudd இன்று பாராளுமன்றத்தில் கோரிய பொதுமன்னிப்பின் ஒளிப்பகிர்வு


பிரதமரின் இந்தச் சம்பிரதாயபூர்வ மன்னிப்புக் கேட்டலில் அடங்கியிருக்கும் அம்சங்கள் இவை தான்:

"Today we honour the Indigenous peoples of this land, the oldest continuing cultures in human history.

"We reflect on their past mistreatment.

"We reflect in particular on the mistreatment of those who were stolen generations - this blemished chapter in our nation's history.

"The time has now come for the nation to turn a new page in Australia's history by righting the wrongs of the past and so moving forward with confidence to the future.

"We apologise for the laws and policies of successive Parliaments and governments that have inflicted profound grief, suffering and loss on these our fellow Australians.

"We apologise especially for the removal of Aboriginal and Torres Strait Islander children from their families, their communities and their country.

"For the pain, suffering and hurt of these stolen generations, their descendants and for their families left behind, we say sorry.

"To the mothers and the fathers, the brothers and the sisters, for the breaking up of families and communities, we say sorry.

"And for the indignity and degradation thus inflicted on a proud people and a proud culture, we say sorry.

"We the Parliament of Australia respectfully request that this apology be received in the spirit in which it is offered as part of the healing of the nation.

"For the future we take heart; resolving that this new page in the history of our great continent can now be written.

"We today take this first step by acknowledging the past and laying claim to a future that embraces all Australians.

"A future where this Parliament resolves that the injustices of the past must never, never happen again.

"A future where we harness the determination of all Australians, Indigenous and non-Indigenous, to close the gap that lies between us in life expectancy, educational achievement and economic opportunity.

"A future where we embrace the possibility of new solutions to enduring problems where old approaches have failed.peA future based on mutual respect, mutual resolve and mutual responsibility.

"A future where all Australians, whatever their origins, are truly equal partners, with equal opportunities and with an equal stake in shaping the next chapter in the history of this great country, Australia."
உசாத்துணை மற்றும் படங்கள்:
International Herald Tribune: www.iht.com
Wikipedia: www.wikipedia.org
European Network for Australian rights: www.eniar.org
www.news.com.au/

37 comments:

மாயா said...

பூர்வீகக்குடிகளை வேட்டையாடும் பழக்கம் வெள்ளைக்காரர்களுக்கு கைவந்த கலையாச்சே :(

அப்போ இப்போ அவர்கள்[ பூர்வீகக்குடிகள் ] அதிகளவில் எப்பிராந்தியத்தில் வாழ்கின்றனர் அண்ணா ?

கானா பிரபா said...

வணக்கம் மாயா

இந்தப் பூர்வகுடிகள் அவுஸ்திரேலியா எங்கும் பரவலாக வாழ்ந்தாலும், வட மாநிலத்தில் (Northern Territory) தான் அதிக அளவு பேர் வாழ்கின்றார்கள். காரணம் கடும் கோடை வருடம் முழுதும் நிலவும் பிரதேசம், நகரத்தின் சுவடுகள் அதிகம் ஆக்கிரமிக்கப்படாத பிரதேசம் கூட. அங்கிருந்து தான் எங்களுக்கு சமையலுக்கு முருங்கைக் காய் எல்லாம் வரும்.

மாயா said...

நன்றி அண்ணா தகவலுக்கு

கோபிநாத் said...

தல

தகவலுக்கு நன்றி...உங்கள் எழுத்து நடையும், விரிவான செய்திகளும் அருமை ;)

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி தல

நாளை நடைபெறும் இந்த முக்கிய நிகழ்வை சுடச்சுடச் சொல்லலாமே என்பதற்காகத்தான் இப்பதிவு

கொழுவி said...

//நாளை நடைபெறும் இந்த முக்கிய நிகழ்வை சுடச்சுடச் சொல்லலாமே என்பதற்காகத்தான் இப்பதிவு//

ஏற்கனவே சுட்டதற்குத்தான் மன்னிப்பு கேக்கிறாங்கள். திரும்ப நாளைக்கும் சுடுவாங்களா..

சுட்டால்த்தானே சுடச்சுட பதிவிட முடியும்..

குழம்பும் கொழுவி

கானா பிரபா said...

வாங்கோ கொழுவி

//ஏற்கனவே சுட்டதற்குத்தான் மன்னிப்பு கேக்கிறாங்கள். திரும்ப நாளைக்கும் சுடுவாங்களா.. //

எங்கையாவது நாட்டில சுட்டுக் கொண்டு மன்னிப்புக் கேட்பினம். உமது சந்தேகம் தீர்ந்ததா ;-)

தெமுஜின்/Temujin said...

'Rabbit-proof Fence' என்னை மிகவும் பாதித்த ஒரு படம். 'Stolen Generation' பற்றி மிகவும் விபரமாக சொல்லியிருக்கிறார்கள் அதில். அதன்பிறகு நான் வலையில் படித்ததில் Aborigines பற்றி ஒரு சுவாரசியமான தகவல். வெளிநாட்டுக்கு Tour செய்த முதல் ஆஸி கிரிகெட் அணி முழுக்க Aborigines வீரர்கள்தான் இருந்தனராம்!

இதைப்பற்றிய சுட்டி:
Wikipedia

கானா பிரபா said...

வணக்கம் நண்பரே

வருகைக்கும் மேலதிக தகவல்களுக்கும் நன்றி.

அவுஸ்திரேலிய பழங்குடி மொழியில் வந்த திரைபடமான Ten Canoes

மழை ஷ்ரேயாவின் விமர்சனம் இங்கே
http://2cinaustralia.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88

மற்றும் The Tracker படமும் பார்க்கவேண்டியவையே.

வடுவூர் குமார் said...

கொஞ்ச நேரத்துக்கு முன்பு இங்குள்ள தமிழ் செய்திகளில் காட்டினார்கள்.

இப்பவாது மன்னிப்பு கேட்கனும் என்று தோனியதே.

கானா பிரபா said...

இதுதான் இப்போது இங்கு சூடான செய்தி

வருகைக்கு நன்றி வடுவூர் குமார்

Sri Rangan said...

கானா பிரபா,வணக்கம்!

அவுஸ்த்திரேலியாவிலில் இருந்து இத்தகைய பதிவைத்தராது போனால் தப்பு!

இது குறித்து நான் எழுதுவதாக இருந்தேன்.

நீங்கள் மிக அழகாக எழுதியுள்ளீர்கள்.

இது முத்திரைப் பதிவு!

அந்த மக்கள் போலத்தாம் நாமும் இலங்கையில் மாறப் போகிறோமா என்பது நமது கைகளிலேதாம் இருக்கிறது!

இது குறித்து நிறைய எழுதணும்.

நேரமில்லை.

நாளை, துருக்கிய பிரதமரின் ஜேர்மன் வருகையோடு சர்ச்சைக்குள்ளான அவரது உரை(Assimilierung als "Verbrechen gegen die Menschlichkeit".ஒன்று கலத்தல் மனிதத்தன்மைக்கு எதிரான கிரிமனல் தன்மையிலானது என்ற அவரது உரை.இப்படிக்கூறும் இனவாதியான துருக்கியப் பிரதமர் தனது நாட்டில் குர்த்தீஸ் மக்களை துருக்கிய இனத்துடன் கலப்படைய வைத்தலுக்கான ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடுகிறார்! ) குறித்தும் ஒரு கட்டுரை எழுத விருப்பம் முயற்சிக்கிறேன்.

இது எமக்கு அவசியமானது!

நாம்,நமக்கென்றொரு தேசத்தை உருவாக்காது அந்நியர்களுக்கு வால்பிடிப்போமானால் நமது நிலையும் இதுவேதாம்!

இது கொழுவிக்கு:BILLIGE ENTSCHULDIGUNG

"Wir entschuldigen uns für den Schmerz, das Leid und die Kränkung dieser Gestohlenen Generationen." Diese Erklärung wird Australiens Premierminister Kevin Rudd am Mittwoch im Parlament verlesen. Die Entschuldigung bei den Ureinwohnern ist eine wichtige, aber nur symbolische Geste. Rudd wehrt sich strikt gegen Forderungen nach finanzieller Kompensation. Er will in erster Linie mit praktischen Maßnahmen die Probleme angehen, unter den die rund 500.000 Aborigines unter den 21 Millionen Australiern leiden. Die Ureinwohner sind in fast allen Bereichen des Alltags benachteiligt. Aborigines sterben im Durchschnitt 17 Jahre früher als nichtindigene Australier. Alkohol, Arbeitslosigkeit und Krankheiten, die sonst nur in Entwicklungsländern vorkommen, sind unter Aborigines weit verbreitet. Experten sagen: Das ist eine Folge der kulturellen Entwurzelung durch Kinderdiebstahl.

EIN SORRY, DAS SPALTET

Die historische Geste der Versöhnung wird keineswegs von der ganzen Bevölkerung Australiens unterstützt. Laut Umfrage stimmen nur 55 Prozent der AustralierInnen einem "Sorry" zu. Jüngere Befragte sagen häufiger Ja als jene, die vor 1970 geboren wurden. Die Politik der forcierten Entfernung von Kindern endete Anfang der 70er-Jahre. Die "Sorry"-Frage spaltet auch die Opposition im Parlament. Die konservative Koalition lehnte bisher strikt jede Entschuldigung ab, jetzt stimmen verschiedene Politiker zu. Der frühere konservative Premierminister John Howard meinte, die heutige Generation von Australiern sei nicht für die Politik der Vorväter verantwortlich. Tatsächlich sind viele Australier noch immer der Meinung, die Praxis der Kindsentfernung sei angebracht gewesen. Viele Konservative stören sich am Begriff "Gestohlene Generationen", sie sagen "Gerettete Generationen".


Australien entschuldigt sich

Albtraum der Aborigines

Zwischen 1900 und 1973 entriss die australische Regierung 100.000 Aborigine-Kinder ihren Eltern. Die kulturelle Entwurzelung wirkt sich bis heute aus. VON URS WÄLTERLIN
SYDNEY taz Im Hintergrund strahlt das weiße Segeldach des Opernhauses von Sydney im Glanz der Nachmittagssonne. Davor sitzt Mary Hooker und erzählt ein brutales Kapitel der australischen Geschichte. Es war im Frühjahr 1970, Mary Hooker war gerade 12 Jahre alt, als eines Morgens ein Polizeiauto vor der Schule ihrer Ureinwohnersiedlung hielt. "Sieben meiner Geschwister saßen bereits im Wagen. Die Beamten sagten, wir würden unsere Mutter im Krankenhaus besuchen gehen", erinnert sich die heute 50-Jährige. Stattdessen fuhren die Polizisten die Kinder zum Gericht. Dort entzog man den Eltern das Sorgerecht - in Abwesenheit. Offizieller Grund: "Vernachlässigung der Aufsichtspflicht"."Ich saß nur da und verstand überhaupt nichts", sagt Hooker heute. Die Beamten waren freundlich. "Jetzt dürft ihr zwei Wochen in die Ferien." In Wahrheit fuhren die Kinder nach Sydney, von wo aus sie in verschiedene Heime gebracht wurden. Aus zwei Wochen Urlaub wurden sechs Jahre Albtraum.

Mary Hooker ist eines von zehntausenden Mitgliedern der sogenannten Gestohlenen Generationen Australiens. Die Ureinwohner sind Opfer einer Politik verschiedener australischer Regierungen, die von 1900 bis etwa 1973 zur Zersplitterung unzähliger Familien geführt hat. Mindestens 100.000 Kinder der heute knapp 500.000 zählenden Ureinwohner, der Aborigines, wurden von ihren Eltern entfernt. So steht es in der Studie "Bringt sie nach Hause" der australischen Menschenrechtskommission (1997). Die Kinderdiebstahlspolitik hatte offiziell den Namen "Wohlfahrtssystem für Ureinwohner". Sie endete erst in den 1970er-Jahren, als Australien den Aborigines zögerlich Rechte einräumte.

Dennoch leiden noch heute zehntausende von indigenen Australiern unter den Folgen - als Betroffene oder Nachkommen von Opfern. Depressionen, Identitätsprobleme, soziale Verwahrlosung und Selbstmorde sind unter den Mitgliedern der Gestohlenen Generationen weit verbreitet. Das sind die Folgen einer systematischen Entwurzelung durch den Staat. Manchmal stimmten die Ureinwohnereltern auch zu - weil sie sich nicht in der Lage fühlten, für ihre Kinder zu sorgen. Meist aber wurden die Kinder mit Zwang von den Eltern getrennt. Oft waren die Kirchen involviert - als Betreiberinnen der Schulen und Heime, in denen die Kinder untergebracht wurden.


100 Jahre nach der Invasion des Kontinents durch britische Strafgefangene und Siedler gab es damals eine grausame ideologische Grundlage für diese Politik. Die Weißen waren der Ansicht, die durch Verfolgung, Mord und Vergewaltigung bereits dezimierten Ureinwohner Australiens hätten als Rasse keine Überlebenschance. Vollblut-Aborigines galten als "Steinzeitmenschen" und zum Aussterben verurteilt. So konzentrierte sich die Regierung auf die "Rettung" von Mischlingskindern. Sie wollte mit deren forcierten Einfügung in die weiße Gesellschaft die "Aboriginalität" von Generation zu Generation reduzieren - und schließlich ganz ausradieren. "Auszüchten" hieß das in damaliger Terminologie. A. O. Neville, Chef der Aborigines-Aufsichtbehörde in Westaustralien, prophezeite 1937: "In 100 Jahren wird der reinrassige Schwarze ausgestorben sein - aber das Problem der Halbblüter nimmt mit jedem Jahr zu." Deshalb sei es notwendig, die "Vollblut-Aborigines" zu separieren und "die Mischlinge in die weiße Bevölkerung zu absorbieren". Neville war, wie viele seiner Zeitgenossen, der festen Überzeugung, die Praxis diene der Wohlfahrt der Kinder.

Sorge um die Wohlfahrt der Kinder - für Mary Hooker tönt dieses Argument wie blanker Hohn. "Die wussten ganz genau, was in diesen Heimen vor sich geht. Zu Hause bin ich jedenfalls nie missbraucht worden", sagt sie. Getrennt vom Rest der Familie, isoliert von ihren Eltern, wurden das Mädchen und seine ein Jahr jüngere Schwester nach ein paar Monaten von Sydney in eine Kleinstadt gebracht. In einem Kinderheim, in dem sie die einzigen Farbigen unter 20 Mädchen waren, begann, was tausende ihrer Leidensgenossinnen erfahren mussten. "Am Abend kam der Hausvater zum 'Gute-Nacht-Sagen'. Erst deckte er mich zu, dann vergewaltigte er mich. Wenn ich mich wehrte, gab es Prügel."

Der Aufenthalt im Heim war begleitet von brutalen Bestrafungsmethoden, vor allem nach Fluchtversuchen. "Er sperrte mich Tage lang in Isolationshaft, wo er jederzeit Zugang zu mir hatte", sagt Hooker. Essensentzug war eine weitere Methode, mit dem der Willen der Kinder gebrochen werden sollte. Für Mary Hooker aber war die soziale Isolation fast die schlimmste Strafe. Wenn sie aß, musste sie sich mit dem Rücken zu den weißen Mädchen setzen. "Ich war zwar anwesend, aber niemand durfte mit mir sprechen oder auch nur meine Präsenz anerkennen."
Während der Heimleiter den Mädchen das Leben zur Hölle machte, führte er nach außen ein biederes Leben mit Frau und zwei Kindern. Mary Hooker fällt das Erzählen ihrer Geschichte auch nach all den Jahren nicht leicht. Ihre Stimme stockt, als sie sich an das nächste Heim erinnert, eines für "schwierige" Kinder. "Die fünf Heimleiter lösten sich ab. Jeder von ihnen vergewaltigte uns - je nachdem, wer gerade Schicht hatte." Die sexuellen Verbrechen hatten oft Folgen: Mädchen wurden schwanger. "Einige meiner Freundinnen hatten Kinder", berichtet Hooker. "Doch die Babys wurden sofort nach der Geburt entfernt und zur Adoption freigegeben. Sie hatten nicht einmal einen Namen."

Die 50-jährige Hooker ist eine der vielen Zeuginnen, die vor zehn Jahren ihre Geschichte der Untersuchungskommission zu Protokoll gegeben haben. Die meisten erzählen dasselbe: Die "Absorbierung" in die weiße Gesellschaft bedeutete in der Realität ein Leben als billige Dienstbotin in Nobelhaushalten. Nach Aufenthalten in verschiedenen Heimen wurde auch Hooker Dienstmädchen im Haus einer weißen Familie in einem Edelquartier von Sydney. "Ich war erst 14 und musste von morgens sechs Uhr bis abends um halb zwölf arbeiten." Als sie von Ausbeutung und Missbrauch genug hatte, rannte sie davon. Sie ist beschämt, als sie erzählt, wie sie als Prostituierte im Rotlichtquartier von Sydney endete. Nur der Hilfe eines Straßenpriesters ist es zu verdanken, dass sie überlebte - und der Erkenntnis, "dass ich nur mittels Ausbildung einen Ausweg aus diesem Leben finde". Inzwischen 18 Jahre alt, ließ sie sich zur Sekretärin ausbilden. Das brachte die Wende. Mary Hooker heiratete. Sie hat heute zwei Kinder und zwei Enkel.


Im Hintergrund gleitet eine Fähre durch den Hafen von Sydney, voll beladen mit Touristen. Mary Hooker schaut aus dem Fenster und schluchzt leise. Der Gedanke an die Vergangenheit bereitet ihr beinahe physische Schmerzen. Mit Tränen in den Augen sagt sie: "Man hat mir meine Jugend gestohlen, ich habe den Kontakt zu den Eltern verloren, man hat mir meine Geschichte als Ureinwohnerin geraubt. Als Christin muss ich meinen Feinden vergeben. Vergessen jedoch kann ich nicht."


Für die Frau ist die Entschuldigung, die Premierminister Kevin Rudd am Mittwoch in Canberra aussprechen wird, mehr als nur ein Symbol, wie seine Kritiker meinen. "Zum ersten Mal in meinem Leben wird meine Geschichte offiziell bestätigt."
http://www.taz.de/1/politik/asien/artikel/1/albtraum-der-aborigines/?src=TE&cHash=cb0171b338

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
விபரமான பதிவுக்கு நன்றி.
ஆனால் இந்தக் காலம் கடந்த ஞானத்தால் ஏது பலன்.
'காலை மிதித்தவன் 'சாரி' சொன்னால் நோப்போகுமா??
நொந்தது ,நொந்ததே...
இனிமேலாவது அடித்தவர் காலை
மிதிகாதவர்கள் இருக்கவேண்டும்.
இன்று அது நடக்கிறதா???
இவர்கள் அமேசனிலும்,ஆபிரிக்காவிலும்..செய்த கொடுமைகளுக்கு மன்னிப்புப் போதுமா???
ஏனைய நாடுகளில் தூண்டிவிட்டு, செய்யும் இன அழிப்பு கொஞ்ச நஞ்சமா??
இவர்களுக்கு எடுபிடியாகி,தன் கையாலே தன் கண் குத்தும் இனங்கள்
எத்தனை.
அவுஸ்ரேலியப் பழங்குடியை, குட்டிச் சுவராக்கிவிட்டார்களே!!!பல விபரணச்சித்திரங்களில் பார்த்தேன்.
போதைக்கடிமையாகி வீதியில் உளல்பவராகவே பலர் வாழ்கிறார்கள்.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

நல்லதொரு கட்டுரை பிரபா.

பிரதமரின் உரை. (பெப்ரவரி 13க்குப் பின் கேட்பதாயின் அந்த இணையப்பக்கத்திலுள்ள நாட்காட்டியில் பெப்ரவரி 13, 2008 ஐ அழுத்த வேண்டும்)

கானா பிரபா said...

//Sri Rangan said...
கானா பிரபா,வணக்கம்!

அவுஸ்த்திரேலியாவிலில் இருந்து இத்தகைய பதிவைத்தராது போனால் தப்பு!//


வணக்கம் அண்ணை

தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. உண்மையில் இந்த தொலைந்து போன சமூகம் குறித்து ஒரு கட்டுரைக்குள் அடக்கமுடியாது, இன்று நடைபெறும் நிகழ்வுக்காக வேக வேகமாக எழுதிக் கொடுத்தேன். இன்னும் பல கட்டுரைகள் எழுதப்படவேண்டும். என் பங்கிற்கும் முடிந்தளவு முயற்சிக்கின்றேன்.

கொழுவிக்கு அப்படி என்ன தான் எழுதினீங்கள் ;)

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

இன்னும் சில:
சுட்டி 1
சுட்டி 2
சுட்டி 3

துளசி கோபால் said...

நல்ல விவரங்கள் அடங்கின பதிவு பிரபா.

இது குறித்து முந்தி எழுதுன ஒண்ணு

இங்கெ

இருக்கு.

தமிழ்பித்தன் said...

இப்படித்தான் பல சமூகங்கள் தங்கள் விழுமியங்களை இழந்தன நாமும் எம்மால் உணர முடியாவிட்டாலும் இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது. ஒரு சமூகத்திற்கு தேவையாக ஒரு படிப்பினை..

நன்றி! அப்பு..

கானா பிரபா said...

// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ஆனால் இந்தக் காலம் கடந்த ஞானத்தால் ஏது பலன்.
'காலை மிதித்தவன் 'சாரி' சொன்னால் நோப்போகுமா??
நொந்தது ,நொந்ததே...
இனிமேலாவது அடித்தவர் காலை
மிதிகாதவர்கள் இருக்கவேண்டும்.//சரியாகச் சொன்னீர்கள் அண்ணா

ஒரு தலைமுறைக்குச் செய்த வினை, எத்தனையோ தலைமுறை கடந்தும் தம் அடையாளத்தைத் தொலைத்தவர்களாகி திசைமாறி விடும் கொடூரம் அல்லவா இது.

Anonymous said...

கானா பிரபா,
அருமையான தகவல்கள் உள்ளடக்கிய பதிவு. நன்றி.

Anonymous said...

கானா அண்ணா உள்ளை கதை நல்லாத்தான் எழுதியிருக்கிறியள். அதுக்கு நன்றி. ஆனால் தலைப்பைக் குழப்பியிருக்கிறியளோ எண்டு படுகுது. களவெடுத்தவன் மன்னிப்பைக் கேக்கிறானோ இல்லாட்டி களவுபோனவனை மன்னிக்கிறாங்களோ எண்டது விளப்பமாகாத மாதிரி தலைப்பிலை குழப்பம் அண்ணை.

கானா பிரபா said...

அநாநி தம்பி

இது கதையல்ல நிஜம்.
தலைப்பில் என்ன குழப்பமி? "திருடப்பட்ட தலைமுறையின் மன்னிப்பு" என்றால் தான் பாதிக்கப்பட்டவர் மன்னிப்பு கேட்பது போன்ற தொனி. இங்கே நான் இட்டது "திருடப்பட்ட தலைமுறைக்கு ஒர் மன்னிப்பு". இதில் குழப்பம் இருந்தால் "திருடப்பட்ட தலைமுறை" என்றே மாற்றுகின்றேன். இது குழப்பத்தை ஏற்படுத்தாது. பதிவுக்கும் பொருத்தமாக இருக்கும். கூடவே உங்களை மாதிரி ஆராவது கேள்வியும் கேட்கமாட்டினம்.

ரசிகன் said...

அருமையான தொகுப்பு...
பழங்குடிகளின் நிராதரவான நிலமையை நினைத்துப் பார்க்கும் போது ஏனோ.. மனம் கனக்கிறது.. சிறப்பா சொல்லியிருக்கிங்க.. வாழ்த்துக்கள்..

கானா பிரபா said...

//`மழை` ஷ்ரேயா(Shreya) said...
நல்லதொரு கட்டுரை பிரபா.//


வாங்கோ ;)

பதிவு போட நேரமில்லையெண்டாலும் இப்படி சுட்டியாவது சுட்டிக்காட்டி விட்டுப் போங்கோ

Anonymous said...

வணக்கம் பிரபா
உங்கள் கட்டுரை படித்தேன். மிகுந்த அக்கறையோடு வரலாற்றில் இருந்து ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட அந்த மக்கள் பற்றி எழுதி உள்ளீர்கள். இன்னும் அந்த மக்கள் பற்றி அறிய முயலுங்கள். இப்போ நீங்கள் முழுமையான புலம்பெயர் எழுத்தாளராக மாறிவருகிறீர்கள். இவ்வகை துயரங்கள் பிரித்தானியர் அடிமைப்படுத்திய அத்தனை நாடுகளிலும் நடந்துள்ளன. ஆனால் ஆச்சரியம் அவர்கள்தான் மனித உரிமை, நாகரிகம் என்பற்றின் காவலர்களாக இருக்கின்றார்கள். நீங்கள் அந்த பூர்வ குடிகள் பற்றிய நாவல்கள் இலக்கியங்களை படியுங்கள். மொழிமாற்றம் செய்ய முயலுங்கள். தமிழ்மொழி பயனடையும். வாழ்த்துக்கள்.
அன்பன்
கி.பி.அரவிந்தன்

கானா பிரபா said...

//துளசி கோபால் said...
நல்ல விவரங்கள் அடங்கின பதிவு பிரபா.

இது குறித்து முந்தி எழுதுன ஒண்ணு //

துளசிம்மா,

நான் ஒரு பதிவு கொடுக்கப்போய் உங்க பதிவைப் படிக்க வாய்ப்புக் கிடைச்சது. கடந்த ஆண்டு தான் எழுதிருந்தீங்க, ஏனோ தவறவிட்டுட்டேன். அருமை

//தமிழ்பித்தன் said...
இப்படித்தான் பல சமூகங்கள் தங்கள் விழுமியங்களை இழந்தன நாமும் எம்மால் உணர முடியாவிட்டாலும் இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது. ஒரு சமூகத்திற்கு தேவையாக ஒரு படிப்பினை..//

வருகைக்கும் சிந்தனையைத் தூண்டும் கருத்துக்கும் நன்றி தமிழ்பித்தன் ஐயா

கானா பிரபா said...

//John ஜான் போஸ்கோ said...
கானா பிரபா,
அருமையான தகவல்கள் உள்ளடக்கிய பதிவு. நன்றி.//
//ரசிகன் said...
அருமையான தொகுப்பு...
பழங்குடிகளின் நிராதரவான நிலமையை நினைத்துப் பார்க்கும் போது ஏனோ.. மனம் கனக்கிறது.. சிறப்பா சொல்லியிருக்கிங்க.. வாழ்த்துக்கள்..//

ஜான் மற்றும் ரசிகன்

பதிவை வாசித்துத் தங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

Anonymous said...

அண்ணை,
அனானி சொன்ன தலைப்பின் பொருட்குழப்பம் நானும் உணர்ந்ததே.

திருடப்பட்ட தலைமுறைக்கு மன்னிப்பு அளித்ததாகவும் பொருள் தொனித்தது.
உதைச் சொல்லப்போய் ஏன் வீண் வம்பெண்டு விட்டிட்டன். (அதோட எழுதச்சொல்லி கனவில வந்து சொல்லிறவையள் வேற அந்த நேரம் பாத்து வரேல;-))
இப்ப தலைப்பை மாத்திவிட்டியள் எண்டாலும், 'ஓர்' மன்னிப்பு வேண்டாம்; 'ஒரு' மன்னிப்பே போதுமெண்டதை முதலே சொல்ல நினைச்சன் எண்டதை இப்ப சொல்லிறன்.

"டோளர்" கொழுவிக்கு டச்சிலயோ என்னத்திலயோ சிறிரங்கத்தார் என்ன சொன்னாரெண்டதை அறிய விருப்பம்.

14 February 2008 00:38

கானா பிரபா said...

Anonymous said...
//வணக்கம் பிரபா
உங்கள் கட்டுரை படித்தேன். மிகுந்த அக்கறையோடு வரலாற்றில் இருந்து ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட அந்த மக்கள் பற்றி எழுதி உள்ளீர்கள்.
மொழிமாற்றம் செய்ய முயலுங்கள். தமிழ்மொழி பயனடையும். வாழ்த்துக்கள்.
அன்பன்
கி.பி.அரவிந்தன்//


வணக்கம் கி.பி.அரவிந்தன் அண்ணா

உங்களைப் போன்ற எழுத்தாளர்களின் கவனிப்பிற்கு ஆளாகும் விதத்தில் என் பதிவு அமைந்ததில் மிக்க மகிழ்வடைகின்றேன். இயன்றளவு இப்படியான விடயங்களை அதிகம் தருகின்றேன். மிக்க நன்றி

கானா பிரபா said...

இரண்டாவதா வந்த அநாநி தம்பி வணக்கம்

பிழைகளைச் சுட்டிக்காட்டுவதில் உள்ள உங்கள் கரிசனை மெச்சத்தக்கது ;-)
பிரதமரே மன்னிப்பு கேட்டுட்டார், நானும் என் பங்குக்கு சொல்லி வைக்கிறேன்.

ஒரு உதவிக்குறிப்பு: அடுத்த முறை இப்படி அநாநியா வரேக்கை உங்கட ஜீமெயில் கணக்கை மூடிவிட்டு வாங்கோ, இல்லாவிட்டால் உங்கட பெயர் வந்துடும் ;-)
இந்த ஆலோசனையை எனக்கு சொன்னவரே முதலாவதா வந்த அநாநி தம்பி தான் ;-))

சயந்தன் said...

இந்த மன்னிப்பை முதலே கேட்டிருந்தால் நான் ஒஸ்ரேலியாவை விட்டு வெளியேறியிருக்க வேண்டியிருக்காது. ரூ.. லேற்..

Anonymous said...

//ஒரு உதவிக்குறிப்பு//

அண்ணை,
இஞ்ச 'ஓர்' எண்டு போடுங்கோ.

என்னடா முட்டையில மயிர் பிடுங்கிறான் எண்டு பாக்கிறியளோ? பிடுங்க வெளிக்கிட்டா எதிலையெண்டாலும் பிடுங்கிறதுதானே?

அதுசரி. முக்கிய புள்ளியளெல்லாம் இந்தப் பதிவுக்கு வந்திருக்கினம்; அந்தவகையிலயும் இது பெரிய வெற்றிதான்.
கந்தசாமி படம் எப்பிடிப் போகுதாம் எண்டு ஒருக்காக் கேட்டுச் சொல்லுங்கோவன்.

மின்னஞ்சல் கணக்கெல்லாம் மூடத்தேவையில்லை. நீங்கள் தந்திருக்கிற அனானித் தெரிவுக்கால வந்தாலே காணும்.

பேரோடதான் வெளியிட்டன்; பிறகுதான் பாத்தன், எதுக்கு வீண்வம்பெண்டு யோசிச்சன்.

சயந்தன்: அரசாங்கம் மன்னிப்புக் கேட்டது இருக்கட்டும்; முதலில நீர் இஞ்ச கனபேரிட்ட மன்னிப்புக் கேட்க வேண்டிக்கிடக்கு. அதுகளைக் கேட்டு முடியும். ;-)

கானா பிரபா said...

சயந்தன்

இரண்டாவது அநாநி தம்பி சொன்னதை நானும் வழி மொழிகிறேன். முதலில் நீங்கள் மன்னிப்புக் கேட்கிற வழியைப் பாருங்கோ ;-)


இரண்டாவது அநாநி தம்பி

அடுத்த முறை ஒன்லைனில் உம்மை வச்சுக் கொண்டே பதிவு போடுறன், அப்ப தான் இலக்கணப் பிழை வராது ;-)
கன காலத்துக்குப் பிறகு வந்திருக்கினம், ஏனப்பா கந்தசாமியை இழுக்கிறீர், என்ன பிரச்சனையோ ஆருக்கு தெரியும் ;-)

ranji said...

கனாபிரபா உங்கள் கட்டுரை என்னை கவர்ந்தது எமக்கும் இப்படியான ஆர்வமும் இருக்கென்பதில் சந்தோசமாக இருக்கு . நாமும் 90களில் ஒரு சஞ்சிகை கொண்டுவந்தோம் அதில் அவுஸ்ரேலிய பழங்குடியினர் பற்றியும் , அமரிக்க பூர்வீககுடி மக்களைப்ப்பற்றியும், கட்டுரைகள் அவர்களின் ஆய்விலிருந்து எழுதியிருக்கிறோம்,அம் மக்கழுக்கு நடந்த அனியாயங்கள் நிறைய, அவர்களை ஜரோப்பியர் போய் கொன்று நாட்டைக்கைப்பற்றியதுமட்டுமல்ல அவர்களின் கலை கலாச்சார சமயமெல்லாத்தையும் அழித்தது கைதிகளாக அம்மக்களை பிடித்து கூட்டில் அடைத்து மிருகங்களைப்போல காட்ச்சிக்கு வைத்திருந்தார்கள், இந்தமக்களை சொந்தநாட்டிலேயே விளிம்பிற்க்குதள்ளி அடிப்படை உரிமைகள்கூட இல்லாமல் வாழ்கிறார்கள் , இப்போ அதிசயமாக அவர்களின் நாட்டைக்கைப்பற்றி எதனையோ எதனையோ காலத்திற்க்குபின் முதல் முதலாக புதிய பிரதமர் மன்னிப்புக்கேட்டுள்ளார் அதற்க்கே அங்கு பல வெள்ளையரின் எதிர்ப்பும் இருக்கிறது, அந்தமக்களின் உரிமைகளை மீண்டும் கொடுப்பார்களா என்ற கேள்வி எழுகிறது அப்படி செய்தார்களானால் அவர் உண்மையில்தான் மன்னிப்புக்கேட்டார் என்று சந்தோசப்படலாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் ,
வாழ்த்துக்கள் கனா பிரபா
றஞ்சினி

கானா பிரபா said...

வணக்கம் ரஞ்சனி

மன்னிப்பு எப்போதுமே மருந்தாகாது, இதை விட நீண்ட பணிகள் இவர்களுக்குக் காத்திருக்கின்றது. ஆனாலும் ஒரு வெள்ளையின சமூகத்தில் இருந்து வந்ததே பெரிய விடயம். இதற்கெல்லாம் காரணியாக இருந்த பிரித்தானிய அரசு இன்னும் மெளனமாக இருப்பது சிந்திக்க வேண்டிய விடயம்.

தங்கள் வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றிகள்.

ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said...

இதை போன்றே வாழ்வு திருடப்பட்ட வரலாறே எம்முடையதும்...
எதைச்சொல்வது
காலம் கடந்து வாசிக்கக் கிடைத்த நல்லபதிவு. தொடரட்டும் உங்கள் தமிழ்பணி
தமிழ்சித்தன்

கானா பிரபா said...

மிக்க நன்றி நண்பரே. பூர்வகுடிகள் எல்லோருக்கும் எம் தலைமுறை உட்பட திருடப்பட்டே இருக்கின்றன. எமக்கு இன்னும் விடிவே எட்டவில்லை என்பது தான் இந்த நவீன யுகத்தின் கொடுமை.