Sunday 27 January 2008

சிட்னியில் தமிழர் ஒன்று கூடல்..!

நியூ சவுத்வேல்ஸ் (சிட்னி) தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் ஒன்று கூடி வருடா வருடம் ஜனவரி 26 ஆம் திகதி அவுஸ்திரேலிய தினத்தன்று நடாத்தும் ஒன்று கூடலும், விளையாட்டுப் போட்டிகளும் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றன. பொதுவாகவே தமிழர்கள் ஒன்று கூடுவது என்பதே புதுமை தானே;-)

Meadow Bank park என்ற மைதானத்தில் இந்த நிகழ்வுகள் காலை 8 மணிக்கு ஆரம்பமாரிற்று. கேணல் கிட்டு நினைவு கிறிக்கற் சுற்றுப் போட்டிகள் சிட்னியின் முன்னணி விளையாட்டு அணிகளுக்கிடையில் நடைபெற்றன. ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களில் இருந்து பல தரப்பட்ட வயதெல்லைகளுக்கிடையிலான ஓட்டப் பந்தயம், 10, 13 17 வயதெல்லைகள் உடையோருக்கான ரென்னிஸ் போட்டிகள், கூடைப் பந்து, தலையணைச் சண்டை என்பவற்றுடன், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களான கிளித்தட்டு ( எங்களூரில் தாச்சி அல்லது யார்ட் என்போம்) உட்பட்ட தமிழரின் பாரம்பரிய விளையாட்டுக்கள் ஆண்களுக்குத் தனியான அணிகளுக்கிடையிலும், பெண்களுக்குத் தனியான அணிகளுக்கிடையிலும் நடைபெற்றன.
என்னை ஈர்த்த ஒரு கிளித்தட்டு அணியின் பெயர் "கொக்கா மக்கா" ( ஆஹா! என்னமாய் சிந்திக்கிறாங்கப்பா). சிட்னியில் இயங்கும் 24 மணி நேர சமூக வானொலியான அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், தேசிய வானொலி SBS, மற்றும் சிட்னி தமிழ் இளையோர் அமைப்பு உட்பட்ட ஸ்தாபனங்களின் காட்சி அங்காடிகளும் அமைக்கப்பட்டிருந்தன.
இரண்டு உணவு அங்காடிகள் அமைக்கப்பட்டு ஒன்றில் பரோட்டா பிரியர்களுக்காவும், மற்றயதில் தோசை, அப்பம் வகையறாக்களுக்காகவும் விற்பனை சூடு பிடித்தது. Parramatta தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Julie Owen மற்றும் Reid தொகுதி பாராளுமன்ர உறுப்பினர் Laurie Ferguson (Parliamentary Secretary for Immigration and Citizenship) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, போட்டிகளில் வென்றோருக்கான பரிசில்களை வழங்கிக் கெளரவித்தனர்.

5 comments:

david santos said...

Hi
A beautiful place here!
Excellent post! You are Master.
Thank you.
have a good weekend

Thillakan said...

//தமிழர் ஒன்று கூடல்..!//

ஓரே கொண்டாட்டம் தான் :)
இல்லாயா அண்ணா ?

கானா பிரபா said...

ஓமோம் அடுத்தமுறை இதைப் பார்க்கும் பாக்கியம் உங்களுக்கும் கிட்டும் ;)

Thillakan said...

நான் வரல உந்த விளையாட்டுக்கு ;)

அது தான் நாம ஒரு ஓரம போயிருக்கிரம் :)

தமிழர் கூட்டம் எண்டலே பயமா இருக்கு :)

கானா பிரபா said...

ஆஹா

அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்கீங்களேப்பா ;)