Friday 24 August 2007

சர்க்கஸ் கோமாளி சரித்திரம் படைத்தார்


Channel 9, இது அவுஸ்திரேலியாவின் முன்னணித் தொலைக்காட்சிகளில் ஒன்று. இதன் வாராந்த நிகழ்ச்சிகளில் வெகு பிரபலமானது Temptation என்ற பொது அறிவு நிகழ்ச்சி. சுனில் பதாமி போட்டியாளர் இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் சாம்பியனாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார்.


தொடர்ந்து 8 நாட்களில் தோல்வியின்றித் தொடர்ந்த சுனிலின் வெற்றிவாய்ப்புக்கள் இருதியில் இவரை இந்த மிகப் பெரும் பரிசு மற்றும் புகழைக் கொடுத்திருக்கின்றது. சர்க்கஸ் கோமாளி வேஷம் இவரின் முழு நேரத் தொழில்,ஒரு சுதந்திரப் பத்திரிகையாளராகவும் தொழில்புரியும் சுனிலுக்கு வயது 33.


இந்தப் போட்டியின் வெற்றி மூலம் அவருக்கு $238,086 பெறுமதியான பரிசும் $400,000 பணமும் கிடைத்திருக்கின்றது.அவருக்கு கிடைத்த பரிசுப் பட்டியலைப் பாருங்கள் (வயிறு எரியுதப்பா)

a Volvo S80 V8 worth $95,950

an LG Electronics TV Fridge and Dishwasher worth $10,023

a luxurious Molmic Furniture Lounge Setting valued at $14,332

Georg Jensen Jewellery worth $20,035

Pro Hart painting valued at $47,500

an LG Electronics LCD TV worth $3,499

a Look Cycles Bike valued at $4,399

a Maurice Lacroix Watch worth $2,010

a St George Oven worth $5,849


ஒரு வருஷம் வேலைக்கு விடுப்பெடுத்து குடும்பத்தோடு இங்கிலாந்து போய் இந்த வெற்றிக் கனியை ருசிக்கப் போகிறாராம் சுனில். கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொடுக்கும்னு சும்மாவா சொன்னாங்கப்பா? புஸ்ஸூ.... புஸ்ஸூ...... Reference: Temptation tv website e-broadcast.com.au

7 comments:

Anonymous said...

சுனில் என்பது இந்தியப்பெயர்போல் தெரிகிறதே ? ப்ரிஸ்பேன்கார பஞ்சாபியோ ? அங்கேயே பிறந்துவளர்ந்திருப்பாரோ ?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சுனில் ;பதமி கூட ஏதோ ஐரோப்பிய ஒட்டுதல் இல்லாப் பெயராக இருக்கிறதே!
எனினும் இச்சாதனையாளரைப் பாராட்டுவோம்.

தமிழ்பித்தன் said...

அலே என்னலே வயித்தெரிச்சல கிளப்புறதென்டே கிளம்பீட்டா போல கிடக்கு

கானா பிரபா said...

ரவி & யோகன் அண்ணா

இவர் இந்தியர் தான், ஆனால் இவரோ தொலைக்காட்சி நிறுவனமோ அதைக் காட்டிக்கொள்ளவே இல்லை.
அதனால் இவர் குறித்த முழுவிபரமும் அப்போது கிடைக்கவில்லை

கானா பிரபா said...

//தமிழ்பித்தன் said...
அலே என்னலே வயித்தெரிச்சல கிளப்புறதென்டே கிளம்பீட்டா போல கிடக்கு //

எலோ வயித்தெரிச்சல் வந்தா கொஞ்சம் டாஸ்மார்க் அடிலே ;-)

Haran said...

இவர் இந்தியர் என்றுதான் நினைக்கின்றேன்... ஒரு தடவை இவர் ரெம்ரேசனில் பங்குபற்றிய போது நான் பார்த்தேன். தொடர்ந்து பார்க்கும் வசதி எனக்குக் கிடைக்கவில்லை.

இறக்குவானை நிர்ஷன் said...

கானா,
நல்லவிடயங்களைத் தொகுத்து வழங்குகிறீர்கள். வாழ்க தங்கள் பணி. தொடர்பில் இருக்கவும்.