Thursday 26 July 2007

கங்காருகளின் வசிப்பிடம்

ஓபர்ன் பார்க் சென்றீர்களா?ஒஸ்திரேலிய வாழ்வின் விமோசனம் அடைந்தீர்களா?

வணக்கம்,

கானா கங்கருவின்[கானாபிரபா அண்ணா] அழைப்பை ஏற்று வலைப்பூவில் இணைந்து நான் எழுதும் முதல் பதிவு.
[முதல் பதிவிட இத்தனை காலமா? என கேட்பீர்களே? என்ன பண்ண நாம கொஞ்சம் பிஸியான ஆளாச்சே..கிகிகி] ரொம்ப பேசம பதிவிற்குள் போயிடலாம்.

நீங்கள் சிட்னி தமிழரா? அல்லது சிட்னியில் இருக்கும் தமிழருக்கு உறவினரா? பதில் "ஆம்" எனில் ஓபர்ன் பொட்டானிக்கல் கார்டினுக்கு ஒரு தடவையாச்சும் சென்றிருப்பீர்கள். சும்மா சொல்லப்படாது அழகான இடம் தான். அண்ணனின் நண்பனின் மனைவியார் என்னை கடந்த வாரம் அழைத்து சென்றிருந்தார். இடத்தை பற்றிய அனைத்தையும் தொலைபேசியில் சுட்டிருக்கேன். பார்த்து தெரிந்துக்குங்க.

[யப்பா பதிவு போடுறது இத்தனை கஸ்டமான காரியமா.??]




இங்கு தான் இந்த வலைப்பூ உறுப்பினர்கள் வசிக்கின்றார்கள். (அது தாங்க கங்காருக்கள்) இது வாசலில் இருக்கும் அடையாள சின்னம்.






இது தான் வாசல். பயப்படாமல் உள்ளே சென்றிட வேண்டும்.




நாங்கெல்லாம் வி.ஐ.பி இல்லையா? நேரம் காலம் பார்த்து தான் வரலாம்.




சிறுவர்கள் என்று பாலாண்ணா, வரவனையான், பொட்டிக்கடை, 
சிபி போன்றோரை 
தான் குறிப்பிடுகின்றார்கள்.





நிம்மதியாக சாப்பிட கூட விடுறாங்கில்லப்பா...






ச்சா இந்த மயிலுக்கு போட்டோக்கு போஸ் குடுக்கவே தெரியலை





பாருங்க நம்ம இனத்தை...என்னமா படத்திற்கு போஸ் குடுக்கிறாக




ரோஜாத்தோட்டம் போகலாமா?







ரோஜா தோட்டம் என்று சொல்லிவிட்டு பூவின் படம் போடாமல் விடலாமா?
[குளிர்காலம் என்பதால் பூக்கள் விடுமுறைக்கு சென்றுவிட்டனவாம்.]

இத்தனை படத்தையும் ஏற்ற முதல் மூச்சு வாங்குதுங்க. பாகம் இரண்டு என பிரித்திடலாம். மிகுதி விரைவில். பதிவு போடாதவங்கெல்லாம் போட்டிருக்கோம். மழை புயல் வந்தால் நாம பொறுப்பில்லை என்பதை அறிவித்து தற்காலிகமாக விடைபெறுகின்றோம்.

6 comments:

யாழ்.பாஸ்கரன் said...

முதல் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்

Anonymous said...

மிக்க நன்றி பாஸ்கரன்

வடுவூர் குமார் said...

முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள்.
படத்தை இன்னும் கொஞ்சம் பெரிதாக போடலாமே!
தெரியாதா?

Anonymous said...

very surprised to see a tamil blog from oz. i live in oz too.
goodluck

MyFriend said...

உங்க முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள் தூயா.. :-)

MyFriend said...

ஒவ்வொன்றூம் படமாய்.. அதுக்கு கீழே கொடுத்திருக்கிற ஒற்றை வரி விளகம் அருமை. இன்னும் நிறைய ஆஸ்த்ரேலியா பற்றீ எழுதுங்க. :-)