Tuesday, 3 April 2007

வித்தியாசமான விலங்கு......

அவுஸ்திரேலிய விலங்குகளில் பிளற்றிப்புஸ் (Platypus)ஒரு வித்தியாசமான விலங்கு ஆகும்.அவுஸ்ரேலியாவில் தஸ்மேனியா(Tasmania),விக்ரோறியா(Victoria),நியூ சவுத் வேல்ஸ்( New South Wales), குயின்ஸ்லாந்து ஆகிய மாநிலங்களில் பிளற்றிப்புஸ் காணப்படுகிறது. பிளற்றிப்புஸ் அவுஸ்திரேலியாவின் அடையாளச் சின்னமாகவும் விளங்குகிறது.இங்கே இருபது சதத்தில் இது இருப்பதை பாருங்கள்.
பிளற்றிப்புஸ் முட்டையும் இடும்:குட்டிகளுக்கு பாலும் ஊட்டுகிறது. இதனுடைய இன்னொரு வித்தியாசமான நடத்தை என்னவென்றால் இது நீரோடை, அல்லது சிற்றாறுகளில் நீந்தி இரை தேடும்போது கண்ணை மூடிக் கொள்ளுமாம்.

இதனுடய அலகு(சொண்டு-bill) வாத்தினுடைய அலகு போன்றது;ஆனால் பெரியது.இதனால் இது வாத்து-அலகு(duck-billed) பிளற்றிப்புஸ் என அழைக்கப்படுகிறது.
இது நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியது.ஆயினும் நீருக்குள் இரை தேடி நிலததுக்கடியில் ஒரு வளை(hole) தோண்டி அந்த வளைக்குள் வாழ்கிறது.இது மிக நீண்ட கிட்டத்தட்ட 50 அடி நீலமான வளையை நிலத்திற்கு அடியில் தோண்டக்கூடியதாம். இவ்வாறு பிளற்றிப்புஸ் கிண்டுவதற்கு நதிக் கரைகளில் உள்ள ஈரமண் இலகுவாக இருக்கிறது.

வீடியோவில் பார்க்க இங்கு சொடுக்கவும்.ஆகவே, இதன் தொழில் நீந்துதல், சாப்பிடுதல், வளை கிண்டுதல் என்பனவாம்.இந்த விலங்கு நீரில் கீழ் உலாவக் கூடிய உடலமைப்பைக் கொண்டது. இலகுவில் உலர்ந்துவிடக் கூடியதுமான தோல். உரோமங்களைக் கொண்ட, இதனுடைய நீண்ட வாலில் தேக்கி வக்கப்பட்டிருக்கும் கொழுப்பு குளிர் காலங்களில் பனிக் குளிர் நீரில் இது உறைந்துவிடாதபடி பாதுகாக்கிறது. இதனுடைய அலகு(bill) பறவைகளினது அலகு போல் அல்ல. இது மிருதுவான அதேநேரம்,அங்கிங்கு அசையக் கூடிய நெகிழ்வ்வுத் தன்மையுடயதாகும். இந்த அலகின் உட்புறத்தில் அதாவது கொடுப்புக்குள் பை (pouch) போல இருக்கின்றன.

நீருக்குள் கண்ணை மூடிக் கொண்டு இதனால் எப்படி உணவைத் தேடமுடிகிறது?
பிளற்றிப்புஸ்சின் அலகிலுள்ள மின்சார உந்து சக்தி இதற்கு உதவுகிறது. அதாவது,பிளற்றிபுஸ்சின் அருகில் இரை வரும்போது அலகின் ஒருவித மின்சார உந்துசக்தி அந்த இரையைப் பிடிக்கத் தூண்டுகிறது. யபி(yabby)
ஸ்றிம்ஸ்(shrimp), மற்றும் நீரில் வாழுகிற சிறு பிராணிகளையும் இது பிடித்துத் தின்னும்.இவற்றை நீருக்கு அடியியில் நீந்திப் பிடித்தவுடன் இது தின்பதில்லை. உடனே பிளற்றிபுஸ் வாயால் கவ்வி அதன் குடுப்புக்குள் உள்ள பை(pouch) க்குள் அடைந்து வைத்துக் கொண்டு தண்ணீருக்கு வெளியே வந்ததும் கொண்டுவந்த இரைகளை பைக்குள்ளிருந்து எடுத்து உண்கிறது.இதனால் இது ஒரு வித்தியாசமான விலங்கா உள்ளது.


ஆண் பிளற்றிப்புஸ்சின் பின் கால்களில் ஒரு மிகச் சிறிய விசமுள்ள கொம்புவடில் ஒரு நகம் இருக்கிறது.எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொள்ள இந்த விச நகத்தால் குத்துகிறது.
இந்த விசம் ஒரு நாயைக் கொல்லக் கூடியளவு கடிமையானதாம். ஆனால் மனிதரை கொல்லாதே தவிர நோய்க்கு அவர்களை ஆளாக்கிவிடுமாம்.


பெண் பிளற்றிப்புஸ் இரண்டு வருடத்தின் பின் வழக்கமாக 2க்கு குறைந்த முட்டை இடுகிறது. அவை ஒரு அங்குலத்திலும் சற்றுக் குறைவான நீளமுடையவை. இதன் குட்டிகளுக்குப் பாலூட்ட முலைக் காம்புகட்கு பதிலாக இரு பைகள் (pouch) இருக்கின்றன. குட்டிக அவற்றுள் அலகை வைத்து பாலை உறிஞ்சிக் குடிக்கின்றன.ஏனைய விலங்குகளோடு ஒப்பிடும்போது இதுவும் வித்தியாசமாகத் தான் இருக்கிறதல்லவா!

மேலும் தகவல்களுக்கு விக்கிப் பீடியாவைப்நன்றி,படங்கள்: இமேஜ் கூகிள்

7 comments:

வடுவூர் குமார் said...

சந்தேகமே இல்லாமல்,வித்தியாசமான விலங்கு தான்.
பகிர்ந்தமைக்கு நன்றி

கானா பிரபா said...

நல்லதொரு கட்டுரை செல்லி

வி. ஜெ. சந்திரன் said...

கங்காருகள் எல்லாரும் ஆளாளுக்கு சுளட்டிறியள்...

நல்ல தகவல்.
விஞ்ஞான பாடத்தில் முட்டியிடும் பாலூட்டி எண்டு உதையும் எறும்புண்ணி (anteater) ஐயும் படிச்ச ஞாபகம்.

தொடர்ந்து இப்பிடி சுவாரசியமா சுளட்டுங்கோ :)

செல்லி said...

வடுவூர் குமார்
//சந்தேகமே இல்லாமல்,வித்தியாசமான விலங்கு தான்.//
மிக நன்றி, குமார்

பிரபா
பாராட்டுக்கு நன்றி.

வி.ஜே
//கங்காருகள் எல்லாரும் ஆளாளுக்கு சுளட்டிறியள்...//

கங்காரு ஐந்து மீற்றருக்கு பாயுமாமல்லோ!
அப்பிடித்தான் கங்காரு நாங்கள் பாய்ந்து சுற்றுகிறோம்:-)
வருகைக்கு நன்றி, வி.ஜே.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

செல்லி!
இதை தொலைக்காட்சியில் பார்த்தேன். அவுஸ்ரேலியா பல வித்தியாசமான விலங்குகள் கொண்ட நாடே!
கங்காருவே வித்தியாசமான விலங்கு தானே!!
இதன் அலகு மென்மையான தென்பது புதிய செய்தி!
நல்ல பதிவு

செல்லி said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி யோகன்.

அரை பிளேடு said...

முட்டையிட்டு பால் கொடுக்கும் விலங்கு என்று பாட புத்தகத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது :)