Thursday 5 April 2007

சிட்னி ஈஸ்டர் விடுமுறைக் களியாட்டங்கள்




ஈஸ்டர் விடுமுறை நெருங்கிவிட்டது, பள்ளிக்கூடங்களை இழுத்து மூடி, வழக்கமான வார இறுதி நீச்சல், நடன, சங்கீதப் பயிற்சிகளை ஓரங்கட்டி, அலுவலக வேலையையும் கடாசிவிட்டு வரும் நான்கு நாள் நீண்ட விடுமுறைக்கு எல்லோருடைய மனமும் ஒருமுகப்பட்டு ஓய்வு என்ற, களியாட்டம் என்ற வார்த்தைகள் மட்டுமே வரும் நேரமிது.

மெல்பனின் மூம்பா (moomba) என்று அழைக்கப்படும் களியாட்ட நிகழ்வு அடுத்த வாரம் வர இருக்கும் தொழிலாளர் நாள் விடுமுறையுடன் கூடி 9 ஏப்ரல் முதல் 12 ஏப்ரல் வரை வர இருக்கிறது.


சிட்னி நகரம் களியாட்ட முன்னெடுப்பில் முந்திக் கொண்டு இன்று ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 18 வரை றோயல் ஈஸ்டர் ஷோ (Royal Easter show) என்னும் பன்முகப்பட்ட களியாட்டத்தை நடாத்துகின்றது. சிறுவர் முதல் பெரியோர் வரை தம் கவலைகள் மறந்து களிக்க ஓர் அரிய வாய்ப்பு. Sydney show ground, Sydney Olympic Park என்ற இடத்தில் ஆட்டம் பாட்டம், விலங்குப் பண்ணை, விளையாட்டுக்கள், வேடிக்கைகள் என்று தொடர்ச்சியாக ஒவ்வொரு தினக்களும் நடக்கும் இந்த நிகழ்வுக்கான கட்டணம் பெரியோருக்கு 31 வெள்ளிகள், சிறுவருக்கு 21.50 வெள்ளிகள் . கடைசி நாளான ஏபரல் 18 ஆம் திகதி அரைக் கட்டணத்தில் நுளைவுச் சீட்டுக்கள் கிடைக்குமாம். Show bags எனப்படும் விதவிதமான தின்பண்டங்கள், விளையாட்டுப் பொருட்கள் தாங்கிய பொதிகளை வாங்க சிறுவர் கூட்டம் அலை மோதும்.


பாரிய விலங்குப் பண்ணையும் இருக்கிறது. எவ்வளவு நாள் தான் நாலு சுவருக்குள் ஒரே முகத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கிறது? இங்கே வந்தால் வருஷத்தில் ஒரு நாளாவது ஆடு மாடுகள், பன்றிக்களின் குடும்பங்களையும் பார்க்கலாம் ;-)

மேலதிக விபரங்களுக்கு சிட்னி ஈஸ்டர் ஷோ இணையத் தளம்
http://www.eastershow.com.au/

6 comments:

செல்லி said...

Royal Easter show வுக்கு 2001 இல் நாங்க வந்தனாங்கள். மணியா இருக்கும்.
காலத்துக்குரிய பதிவு போட்டிருக்கிறீங்க. நன்றி, பிரபா.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//மெல்பனின் மூம்பா (moomba) என்று அழைக்கப்படும் களியாட்ட நிகழ்வு அடுத்த வாரம் வர இருக்கும் தொழிலாளர் நாள் விடுமுறையுடன் கூடி 9 மார்ச் முதல் 12 மார்ச் வரை வர இருக்கிறது.//

கடைசி போட்டோவின்ர எஃபெக்ட் மேல இருக்கிற வரியில தெரியுது போல. அண்ணோய் மாத்துங்கண்ணோய்! :D ஹிக்!

-மதி

கானா பிரபா said...

வணக்கம் செல்லி

ஒரு தடவை வந்தால் திருப்பி வரக்கூடாது என்று எந்தக்கட்டுப்பாடும் இல்லை, தாராளமாக மீண்டும் பிள்ளைகுட்டிகளோட அடுத்த பஸ்/றெயின்/பிளேன் பிடியுங்கோ

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
இங்கே இப்படி விழா இல்லை. இந்த பன்றிக்குடும்பம் வெகு ஜோர். இதைப்போல் மிருகங்களின் கண்காட்சி; மார்ச் மாதம் வருடாந்திர விவசாயக் கண்காட்சியில் இடம் பெறும்.
அனுபவியுங்கள்

கானா பிரபா said...

மதி

மெல்பன் மூம்பாவுக்கும் சிக்கின் தண்ணியடிப்பதற்கும் சம்பந்தமில்லை ;-)

கானா பிரபா said...

யோகன் அண்ணா

ஈஸ்டர் ஷோவுக்குப் போகத்தான் இருக்கிறேன். முடிந்தால் அது பற்றியும் பதிவு இருக்கிறது ;-)