சிட்னி முருகன் தேரோட்டம் 2009
சிட்னியின் வைகாசிக்குன்றில் (Mays Hill) எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமானுக்கு வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி இன்று சிறப்பாக ரதோற்சவ நிகழ்வு நடைபெற்றது. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து சிறப்பித்த இந்தப் பெருவிழாவிற்கு வருண பகவானும் மெல்ல ஒதுங்கி வழிவிட, சூரியன் தன் மத்திம வெப்பத்தைக் கொடுக்க, வாயு பகவான் ஏஸிக்காற்றை மெல்ல மிதக்கவிட்டது இந்தப் பக்திச் சூழ்நிலைக்கு மேலும் அணி சேர்த்தது.
இந்த நிகழ்வின் முக்கியமான சில காட்சிகளை என்னோடு வந்திருந்த கமராப் பெட்டி களவாடி உங்கள் முன் ஒப்புவிக்கின்றது இதோ
தேரோட்டத்துக்கு முன் ஆலயத்தின் வசந்த மண்டபத்துள்ளே நிகழும் பூசை புனஸ்காரங்கள்
சுவாமி உள் வீதி வலம்
அடிவாங்கக் காத்திருக்கும் தேங்காய் கூட்டம்
ஆலயத்தின் ஒருபக்க வீதி, ஆலயத்தின் உள்ளே சென்று வழிபடமுடியாதவர்களுக்கு இந்தப் பக்கம் இருந்து உள்ளே நடப்பதைப் பார்க்க வசதி
தேர் ஏற வரும் வள்ளி, தேவசேனா சமேத முருகப் பெருமான்
காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே முருகா ஆட்டத்திலே
நேற்று இரவு ஓடிக் களைத்து ஒதுங்கி நிற்கும் சப்பரம்
மோரும், சர்பத்தும் கலந்துனக்கு நான் தருவேன்
ஈழத்தில் இருந்து வந்த நாகேந்திரன், அமரர் தட்சண மூர்த்தி மகன் உதயசங்கர் குழுவினர்
தேரோட்டம் காண வாருங்கள்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
பக்தர் கூட்டம், ஆறிலிருந்து அறுபது வரை
ஆங்கே வயிற்றுக்கும் கூட ஈயப்படும்
இருப்பிடம் வந்த தேரில் இருக்கும் சுவாமிக்கு அர்ச்சனை செய்ய கியூ கட்டி நிற்கும் கூட்டம்
இது சாப்பாட்டு கியூ
சுவாமிக்கு பச்சை சாத்தி ஆற்றுப்படுத்தல்
இத்தோடு முடிந்தது, கூட்டம் கலையலாம் :)
11 comments:
பாஸ் கலக்கிட்டீங்க பாஸ்!
போட்டோஸ் பக்தி மயமாக்கிடுச்சு!
எனக்கும் கொஞ்சம் அருள் புரிய வேண்டிக்கோங்க சிட்னி முருகன்கிட்ட...!
அருமையான புகைப்படங்கள்.
கொம்பனித் தெரு முருகன் கோவில் ஞாபகங்கள் வந்துவிட்டன.
கந்தனுக்கு அரோகரா
//வருண பகவானும் மெல்ல ஒதுங்கி வழிவிட, சூரியன் தன் மத்திம வெப்பத்தைக் கொடுக்க, வாயு பகவான் ஏஸிக்காற்றை மெல்ல மிதக்கவிட்டது இந்தப் பக்திச் சூழ்நிலைக்கு மேலும் அணி சேர்த்தது.///
டைமிங்க்ல நல்ல ரைமிங்கான வரிகள்
கலக்குறீங்க பாஸ் :)
அருமையான படங்கள்..
ஆயில்ஸ்
எல்லாருக்கும் பொதுவா தான் பிரார்த்தனை பண்ணினேன்.
புதுகைத் தென்றல்
உங்கள் பதிவில் இந்த சுட்டியைத் தந்தமைக்கும் மிக்க நன்றி
தூய்ஸ்
கோயில் பக்கக் காணேல்லையே :)
//தூய்ஸ்
கோயில் பக்கக் காணேல்லையே :)/
இன்னிக்கும் நாம செஞ்சத நாமே சாப்பிடணுமான்னு கோவில் பக்கத்துல எங்கயாச்சும் ஓட்டல் உக்காந்து நல்லா தின்னுக்கிட்டிருந்திருக்கும் தங்கச்சி அதை ஏன் இப்ப தேடுறீங்க !
:))))))))
/-தூய்ஸ்
கோயில் பக்கக் காணேல்லையே/
அவா கவனயீர்ப்புப் போராட்டத்துக்குப் போயிருப்பா.
அண்டைக்கு கவன ஈர்ப்பு போராட்டம் நடக்கேல்லை, அடுத்த நாள் தான்
அழகு...அதுவும் பச்சை வண்ணத்தில் முருகனை பார்க்க பார்க்க பரவசம் தான் ;))
நன்றி தல ;)
Superb! Thanx for sharing the photos.
Arumaiyana padangal.
Post a Comment