Friday, 19 June 2009

சிட்னி அவியல் ஜூன் 19 வரை....!

நீஈஈஈஈஇண்ட நாட்களாகப் பதிவு ஏதும் போடாமல் ஒரே காடு மண்டிக்கிடக்குது, எனவே மீண்டும் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் கணக்காக அவியலோடு வந்திருக்கிறேன்.

அவுஸ்திரேலியாவில் நாடு தழுவிய ரீதியில் இந்த வாரத்தோடு இரண்டாயிரத்தைத் தொடப்போகும் பன்றிக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு புறமிருக்க, பணியிடங்களில் சற்றுத் தும்மினாலே பின்லாடனைப் பார்ப்பது போல் வெறிக்கும் அளவுக்கு இந்த நோய் குறித்த கிலி கிழவிக்கு அம்மன் வந்த கணக்காகப் போட்டு உலுப்புகின்றது. தும்மல், சளி, இருமல் நீடித்தால் அலுவலகப் பக்கம் வராதீர்கள், பள்ளிக்கும் பிள்ளைகளை அனுப்பாதீர்கள் என்று நோட்டீஸ் ஒட்டும் அளவுக்கு தீவிரமடைந்திருக்கும் இந்த நிலையில் இன்று மேற்கு அவுஸ்திரேலியாவில் வசிக்கும் 26 வயது இளைஞன் இந்த நோய் கண்டு இறந்த முதல் நோயாளியாக இங்கு பதிவாகி இருக்கின்றார். மேலும் வாசிக்க

00000000000000000000000000000000000000000000000000000000000000

சிட்னியில் ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு என்று இருக்கும் நூலகமான தமிழ் அறிவகம் நாளை யாழ் நூலக எரிப்பு நினைவாக வருடாந்தம் நடாத்தும் கொடித்தின நிகழ்வை நடத்த இருக்கின்றது. இதுகுறித்த மேலதிக விபரம் அறிந்து கொள்ளவும், சிட்னியில் இருப்போர் இப்படி ஒரு நூலகம் இருப்பதே இப்போது தான் தெரியும் என்று உரிமை பாராட்டவும் இதோ நோட்டீஸ்

00000000000000000000000000000000000000000000000000000000000000000

MX என்ற பெயரில் மாலை நேரத்தில் ஒரு தினப்பபத்திரிகை வருகிறது இங்கே. ஓவ்வொரு நாளும் வேலை முடிந்து போகும் போது காலில் விழுந்தாவது வாங்கிக் கொண்டு போங்கோ என்று கெஞ்சுவாங்கள் பேப்பர் கொடுக்கிறவங்கள். ஓசி ஆச்சே ஒன்றுக்கு இரண்டாவும் வாங்கலாம். இங்கே சிட்னியில் குறைந்தது 50 போராட்டங்களாவது ஈழத்தமிழர் குறித்து நடந்திருக்கும், ஓவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டதும் வேறு விஷயம். இந்த நிகழ்வுகளை எல்லாம் படம் பிடிக்காமல் செய்தி போடாமல் கள்ளக்காதலில் இருந்து விலாவாரியாக எல்லாக் குப்பையும் போடுறாங்களே என்ற ஆதங்கத்தில் ஈழத்தமிழர் போராட்டங்களைப் படம் எடுத்து செய்தியாகவும் கொடுத்திருக்கினம், ஒப்புக்கு ஒன்றை தேமோ என்று போட்டு விட்டு திரும்பவும் கள்ளக்காதல், புட்போல் என்று பழைய குருடி கதவத் திறவடி கணக்காய் சுழலும் இந்தப் பேப்பர் நேற்று ஒரு வரலாறு படைத்திருக்கிறது. பாலிவூட் குமரிகள் இண்டர்நேஷனல் இந்தியன் பிலிம் பெஸ்டிவலுக்கு போன காட்சியில் எந்தக் குமரியின் பிளவுஸ் அழகு என்று இரண்டு பக்கப் போட்டோ மழை பொழிந்து ஜென்ம சாபல்யம் கண்டது.

000000000000000000000000000000000000000000000000000000000000000000


Peter Costello முந்திய லிபரல் கட்சி அரசில் நிதியமைச்சராக (treasurer) 11 வருஷங்கள் (1996 - 2007) வரை இருந்து கடைசிவரையும் பிரதமர் ஜோன் ஹாவார்ட் அண்ணன் திண்ணை எப்போது காலியாகும் என்று ஏங்கி இறுதிவரை அந்தப் பாக்கியம் கிட்டாமல் அடுத்த ரவுண்டில் தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தபோது லிபரல் கட்சியின் எதிர்க்கட்சி ஆசனம், சீ சீ இந்தப்பழம் புளிக்கும் கணக்காய் வேண்டாமென்று ஒதுங்கி இருந்தவர். எதிர்க்கட்சித் தலைவர் Malcolm Turnbull வயிற்றில் பால்வார்க்கும் கணக்காய் அடுத்த தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன் அரசியலில் இருந்தே ஒதுங்கப் போகிறேன் என்று சொல்லும் இவருக்கு வயசு வெறும் 51 தான், அடுத்த பிறவியிலாவது 84 வயசு வரைக்கும் பதவியில் இருக்க இவர் தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று நாம் பிரார்த்திக்கிறோம்.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000

வருது வருது இந்தா வருது என்று அடிக்கடி வெருட்டிக் கொண்டே இருக்கும் பொருளாதார வீழ்ச்சி அப்படியொன்றும் அமெரிக்கா கணக்காய் அவுஸ்திரேலியாவில் தாக்கவில்லை. ஆனாலும் வேலையிடங்களில் இதைச் சாக்காக வைத்து களையெடுப்புக்கள் நடப்பது தவிர்க்க முடியாத விஷயம் (ஆளாளுக்க்கு மேசைக்கு கீழ் ஒளிஞ்சிருக்கணும் போல). ஆனாலும் வருமுன் காப்போம் (வந்த பின்னால் தவிப்போம்)கணக்காய் எமது அவுஸ்திரேலிய பிரதமர், வருடச்சம்பளத்தில் ஒரு எல்லைக்கு குறைவான சம்பளம் பெறுவோருக்கு 900 அவுஸ்திரேலிய டொலர்களைக் கொடுத்து ஏதாவது வாங்குங்கள் என்று ஏழை பாழைகளைக் குளிர்வித்தார் என்று பார்த்தால் பாடையில் போனவனையும் அவர் விட்டுவைக்கவில்லை. இந்த உபகாரப்பணம் பல்லாயிரம் இறந்து போன அவுஸ்திரேலியக் குடிகளுக்கும் போய்ச் சேர்ந்திருக்காம் மேலும் படிக்க

ஆனாலும் ஒன்று தேர்தல் எல்லாம் முடிஞ்சு ஒரு வருஷத்துக்குப் பிறகு இவர் இந்த உபகாரத்தைக் கொடுத்தார், கையில காசு பாலெட்டில் (ballot ) ஒட்டு என்ற கணக்காய் இல்லை என்பதைக் கூறிக் கொள்கிறோம்.

இப்படியான உபகாரத்தால் தற்போது நிலவிவரும் பொருளாதார மந்த நிலையை கெவின் ரட் அரசு நன்றாகக் கையாளுக்கின்றது என்று மிஸ்டர் பொதுஜனம் கருத்துக்கணிப்பொன்றில் அள்ளி அள்ளி வாக்குச் சொல்லியிருக்கு.

ஆனாலும் இந்த மனுஷனுக்கு அஷ்டமத்துச் சனி போல, இவரது சொந்த மாநிலத்தில் இருக்கும் கார் வாங்கி விற்கும் ஒருவருக்கு சலுகை காட்டியது என்ற புகாரில் அவரை இந்தக் குளிரிலும் ட்ரவுசரை உருவுகிறார்கள் எதிர்க்கட்சிக் கோமகன்கள். மேல் விபரங்களுக்கு

இவர்களை தமிழகத்துக்கு அழைத்துச் சென்று அரசியல் அறிவு புகட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு பிரதமர் கெவின் ரட்டின் சாதகத்தை டி.ராஜேந்தரின் குறள் டிவியில் காட்டுமாறும் கேட்டுக் கொள்கின்றோம். குறள் டிவியின் துல்லியமான சாதகத்துக்கு ஒரு சோறு பதம்

நாளை ஐ.நா சபையினால் உலக அகதிகள் நாள் கொண்டாடப்படுகின்றதாம், ஹாஹாஹா என்னால சிரிப்பை அடக்க முடியல. இந்த ஜோக்கை கேட்டு சிரிச்சுக் கிட்டே இருங்க அடுத்த அவியல் வரை என்று கேட்டுக் கொண்டு விடைபெறுவது ;-)

16 comments:

Thamiz Priyan said...

:)

கானா பிரபா said...

தல

எதுவாயிருந்தாலும் சொல்லீட்டு சிரீங்க :)

ஆயில்யன் said...

பாஸ் !



உங்களோட நக்கல் ரைட்டிங்க் செம கலக்கல் பாஸ் கண்டினியூ ! கண்டினியூ!! :)))

ஆயில்யன் said...

//இந்த நோய் குறித்த கிலி கிழவிக்கு அம்மன் வந்த கணக்காகப் போட்டு உலுப்புகின்றது//

:))))

Ungalranga said...

//பாஸ் !



உங்களோட நக்கல் ரைட்டிங்க் செம கலக்கல் பாஸ் கண்டினியூ ! கண்டினியூ!! :)))//

ரீப்பீட்டிக்கிறேன்..!!!

ஆயில்யன் said...

//அடுத்த தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன் அரசியலில் இருந்தே ஒதுங்கப் போகிறேன் என்று 51 வயசே தான், அடுத்த பிறவியிலாவது 84 வயசு வரைக்கும் பதவியில் இருக்க இவர் தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று நாம் பிரார்த்திக்கிறோம்.//

:))))

நானும் பிரார்த்தனையில் சேர்ந்த்துக்கிறேன் :)))

rapp said...

//அடுத்த பிறவியிலாவது 84 வயசு வரைக்கும் பதவியில் இருக்க இவர் தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று நாம் பிரார்த்திக்கிறோம்.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........ஏன் இந்த கொலைவெறி?

sarathy said...

நம்ம ஊர்ல பாடையில போனவனெல்லாம்
ஒட்டு போடுவான்..

ஆஸ்த்திரேலியாவுல கொஞ்சம் வித்தியாசம்...

நல்லா சொல்லியிருக்கீங்க.

துபாய் ராஜா said...

அன்பு பிரபா , நல்ல சுவையான அவியல்

Pot"tea" kadai said...

உள்ளோம் அய்யா.

தகவல்கள் சுவாரசியமாய் இருக்கிறது.
***

இங்க வடக்கு குயின்ஸ்லாந்தில் மெக்ஸீகோ ஆட்களை உள்ளே விடுவதில்லையாம். எப்போதும் தெக்கத்தி ஆட்களை மெக்ஸிகன்ஸ் என்று தான் இங்கு சொல்வடை. பன்றி காய்ச்சலால் நிரூபணம் ஆகியுள்ளது.

***
அறிவகம் ஹோம்புஷ் பள்ளியில் இருப்பது தானே? ஒருதரம் யாரோ சொன்னமாதிரி ஞாபகம்...
***
யாவாரிகளுக்கு எது வடிவா இருக்கோ அதைத் தானே போடுவானுங்கள். அவனும் மனித அவலமா முக்கியம்.

***
காஸ்டெல்லோ மீது பரிதாபம் உண்டு.அவுஸ்திரேலியாவின் வைகோ அவர். லிபரல் என்ற காரணத்தினாலேயே வலதுசாரியாய் கடைசிவரை இருந்து ஹோவர்டை எதிர்க்க துணிவில்லாமல் வெளிநடப்பு செய்யவேண்டிய இக்கட்டிற்கு உள்ளாகியிருக்கிறார். ரட் அரசக்கரூவூல/பொருளாதாரத்துறை அரசப்பொறுப்பு கொடுக்கப்படலாம் என கதைக்கிறார்கள். அவர் அவுஸ்திரேலியாவிற்கு அளிக்கவேண்டிய பணிகள் பல உள்ளன.

***
அதுக்குள்ள கெவின் ரட் பதவி விலகனும்னு டர்ன்புல் கோரிக்கைவிடுக்கிறார். ரட் அவ்ளோ சீக்கிரம் வளையமாட்டரென நினைக்கிறேன். பார்ப்போம்...ஆனால் சூனியக்காரி ஜூலியா கிலார்ட் பிரதமபதவியில் என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

***
காமெடிக்காக ஒரு சொல்வழக்கு உண்டு இது என்ன நீதிமன்றமா இல்லை *******மன்றமா என்று அந்தமாதிரி தான் இது அய்க்கிய நாடுகள் சபையா இல்ல கூட்டிக்கொடுத்த நாடுகள் சபையா என்று?

கானா பிரபா said...

ஆயில்ஸ்

வருகைக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி

ரங்கன்

நன்றி பாஸ்

கானா பிரபா said...

//rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...........ஏன் இந்த கொலைவெறி?//

:) விடமாட்டோம்ல

//sarathy said...
நம்ம ஊர்ல பாடையில போனவனெல்லாம்
ஒட்டு போடுவான்..//

ரொம்ப நன்றி தல

கானா பிரபா said...

thubairaja said...

அன்பு பிரபா , நல்ல சுவையான அவியல்//

அட, கால்கட்டு போட்டு சரியா மூணு வருஷம் கழிச்சு வந்திருக்கீங்களே, வாங்க தல

கானா பிரபா said...

thubairaja said...

அன்பு பிரபா , நல்ல சுவையான அவியல்//

அட, கால்கட்டு போட்டு சரியா மூணு வருஷம் கழிச்சு வந்திருக்கீங்களே, வாங்க தல

கானா பிரபா said...

Blogger Pot"tea" kadai said...

உள்ளோம் அய்யா.

தகவல்கள் சுவாரசியமாய் இருக்கிறது.//

வணக்கம் அய்யா

பின்னூட்டத்திலேயே இப்படித் தகவல்களை அள்ளி வாரியிருக்கிறீங்களே, இதை ஒரு பதிவா போட்டா இன்னும் அடி பின்னியிருக்கும்லே :)

கலக்கல், முடிந்தால் குயின்ஸ்லாந்து அவியலை அடுத்த வாரம் எதிர்பார்க்கின்றேன்.

தமிழினி

உங்கள் சேர்கின்றோம், நன்றி

க. தங்கமணி பிரபு said...

இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!!

தயவு செய்து

http://www.srilankacampaign.org/form.htm

அல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htm

என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!

முடிந்தால் உங்கள் நண்பர்களையும் இந்த புணித செயலில் ஈடுபடுத்துங்கள்