Thursday 28 August 2008

அவுஸ்திரேலியாவில் திரையிடப்படும் சத்யஜித்ரேயின் படங்கள்


நாளை ஆகஸ்ட் 28 இல் சிட்னியின் CINEMA PARIS இலும் வரும் செப்டெம்பர் 3 முதல் மெல்பனிலும் இந்தியப் பட விழா ஆரம்பமாகின்றது.


பாலிவூட் மசாலா அயிட்டங்களோடு, எப்போதும் பார்க்கத் தகும் வங்காளப் படைப்பாளி சத்யஜித்ரேயின் பின்வரும் திரைப்படைப்புக்களும் காண்பிக்கப்பட இருக்கின்றன.

PATHER PANCHALI

APUR SANSAR ( The World of Apu)

DEVI

GHARE- BAIRE (Home And The World)

JALSAGHAR (The Music Room)

மேலும் பிராந்திய மொழி வரிசையில் காண்பிக்க இருக்கும் திரைப்படங்கள் இவை, (தமிழில் ஒன்றும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது)

AMI, IYASIN AR AMAR MADHUBALA (The Voyeurs)- Bengali

DHARM - Hindi

KADA BELADINGALU- Kannada

RATHRI MAZHA- Malayalam

TINGYA- Marathi

இந்த நிகழ்வை MG gdistribution என்னும் ஒரு தனியார் அமைப்பே முன்னின்று நடாத்துகின்றது என்றாலும் கிடைத்தற்கரிய சத்யஜித் ரேயின் படங்களை பெரு வெண் திரையில் காண இதுவோர் அரிய வாய்ப்பாகும்.

மேலதிக விபரங்களுக்கு


நன்றி: பதிவில் இடம்பெற்ற புகைப்படம், இயக்குனர் K. Bikram Singh இன் இணையத்தில் இருந்து.

3 comments:

Tech Shankar said...



Thanks Dear Dude..

துரை said...

தமிழ் படம் ஒன்று கூட இல்லாததை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி தமிழ்நெஞ்சம்

வணக்கம் துரை

நம்ம தமிழ்ப்படங்கள் இங்கே மாதத்துக்கு ஒன்றாவது காட்சிப்படுத்துவாங்க. இந்த விழாவை செய்வதே வட இந்திய வர்த்தகர்கள், நல்ல சில சத்யஜித்ரேயின் படைப்புக்கள் இருக்கின்றன.