Thursday, 17 January 2008

THE JAFFNA PUBLIC LIBRARY RISES FROM ITS ASHES - சிட்னியில் வெளியீடு

அழித்து எரிக்கப்பட்ட யாழ் நூலகத்தினை மீளக் கட்டியெழுப்புவதில் ஒருவராகச் செயற்பட்ட கட்டிடக் கலை நிபுணர் திரு வி.எஸ்.துரைராஜா அவர்களால் அரிய பல புகைப்படங்களோடும் வரலாற்றோடும் தொகுத்தளிக்கப்பட்ட நூல்:


" THE JAFFNA PUBLIC LIBRARY RISES FROM ITS ASHES"

இந்நூலாசிரியர் திரு வி.எஸ்.துரைராஜாவை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகக் கண்ட ஒலிப்பேட்டியைக் கேட்க:


இந்நூலின் விற்பனையில் திரட்டப்படும் நிதி யாழ் பொதுநூலகத்தின் microfilm தொழில்நுட்ப வசதிக்காக அனுப்பப்பட இருக்கின்றது.

வெளியிடும் காலம்: வரும் ஜனவரி 19 ஆம் திகதி மாலை 6 மணிக்கு

இடம்: Starthfield Townhall, 65 Homebush road, Strathfield

அனைவரும் பங்கு கொண்டு இந்நூல் வெளியீட்டு விழாவைச் சிறப்பிக்க வேண்டுகின்றார்கள் மித்ர வெளியீட்டினர்.

மேலதிக விபரங்களுக்கும் இந்நூலை வாங்கவும் தொடர்புகட்கு:

Dr பொன் அநுரா 0438 103 307
வி.எஸ்.துரைராஜா 9744 9599

மேலே உள்ள முகப்பு புகைப்படம் நன்றி: http://www.lines-magazine.org

5 comments:

PRINCENRSAMA said...

theesathai kattiyeluppum panikku munnottam akattum...

ILA (a) இளா said...

நல்ல முன்னுரை. இந்த நூலகம் பற்றி நிறைய படித்து இருக்கிறேன். யாராவது பதிவிட்டு இருக்கிறார்களா?

கானா பிரபா said...

பிரின்ஸ் மற்றும் இளா

வருகைக்கு நன்றிகள், விழா முடிந்ததும் மேலதிக செய்திகளைத் தருகின்றேன்.

Annamalayaar said...

வணக்கம்! நான் இந்தியாவில் வாழும் தமிழ்ப் பெண். தங்கள் வலைப்பக்கம் தங்கள் தமிழ் ஆர்வத்திற்குத் தக்கச் சான்றாக விளங்குகிறது. இப்படி நல்ல தமிழில் ஒரு வலைப்பக்கத்தைக் காண நேர்ந்ததை நான் கடவுளின் அருளாகவே கருதுகிறேன். நான் இந்நூலை வாங்க விழைகிறேன். ஆனால், அது எவ்வாறு என்று தான் தெரியவில்லை. எனக்குத் தங்களால் உதவி செய்ய இயலுமா? என் இலங்கைத் தமிழ் உடன் வயிற்றோர்களுக்கு(சகோதரர்களுக்கு) உதவி செய்வதிலும் எனக்கு மிகுந்த ஆவல் உண்டு. ஆனால், அது எவ்வாறு என்று தான் எனக்குத் தெரியவில்லை. தாங்கள் கருத்து ஏதேனும் கூற விரும்பினால் அதனை என் வலைப்பக்கதில் இடுமாறு நான் தங்களை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இதோ என் வலைப்பக்க முகவரி:
http://annamalayaan.blogspot.com/
நன்றி!

கானா பிரபா said...

வணக்கம் சகோதரி

தங்களின் விரிவான, தமிழுணர்வும், சகோதரத்துவமுமான பின்னூட்டம் கண்டு உண்மையிலேயே மகிழ்ச்சி அடைந்தேன்.

இந்த நூல் குறித்த மேலதிக விபரங்களை கீழ்க்காணும் பதிவில் இட்டிருக்கின்றேன்.


இந்த நூலை சென்னை புத்தகக் கண்காட்சியில் 243 ஆம் இலக்கக் கடையில் பெற்றுக் கொள்ளலாம்.
அல்லது கீழ்க்காணும் முகவரிக்குச் சென்றால் பெற்றுக் கொள்ளலாம்:

32/9 Arcot Road, Kodambakkam
Chennai
PH: 91 44 2372 3182
E-mail:mithrabooks@gmail.com