Wednesday 23 January 2008

அவுஸ்திரேலிய நடிகர் Heath Ledger மரணம்

அவுஸ்திரேலியாவின் மேற்கு அவுஸ்திரேலிய மாநிலமான பேர்த் நகரில் ஏப்ரல்4, 1979 ஆம் ஆண்டில் பிறந்த Heathcliff Andrew Ledger என்ற நடிகர் இன்று ஜனவரி 22, 2008 இல் நியூயோர்க் நகரில் அகால மரணமடைந்தார்.

ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றி நடித்த இவர் மெல்கிப்சனின் நாயகனாகத் தோன்றிய திரைப்படமான The Patriot, Monster's Ball, மற்றும் Brokeback Mountain போன்ற புகழ்பெற்ற ஹொலிவூட் திரைப்படங்களில் நடித்ததோடு Brokeback Mountain படத்த்தில் இவர் நடித்த பாத்திரத்திற்காக பல உயரிய திரை விருதுகளைச் சிறந்த நடிகருக்கான வகையில் பெற்றதோடு, Golden Globe மற்றும் Oscar இற்கான பரிந்துரைகளையும் இப்படத்திற்காக இவர் பெற்ற பெருமை எனலாம்.

The Dark Knight என்ற திரைப்படமே இவர் இறுதியாக நடித்து வெளிவர இருக்கும் திரைப்படமாகும்.

ஜனவரி 22 ஆம் திகதி இன்று தனது நியூயோர்க் நகர வீட்டில் தூக்கமாத்திரை காரணமாக படுக்கையில் இறந்து கிடக்க காணப்பட்டதாக வீட்டின் பராமரிப்பாளர் தெரிவித்தார். Heath Ledger இன் மரணத்திற்கு ஏதாவது தற்கொலைக் காரணிகளோ வேறேதும் அசாதாரணமான காரணிகளும் காணப்படவில்லை என்று நியூயோர்க் நகர பொலிசார் தெரிவித்தனர்.

மேலதிக தகவல்களுக்கும் வீடியோ ஒளிப்படங்களுக்கும்.

SBS Television website



Heath Ledger on Ellen discussing Brokeback Mountain

No comments: