Sunday 7 October 2007

சிட்னியில் தமிழ் முழக்கம் விழாவும் "அண்ணை றைற்" வெளியீடும்


இன்று ஞாயிற்றுக்கிழமை, ஒக்டோபர் 7ம் திகதி சிட்னியின் முதல் தமிழ் வானொலியான "தமிழ் முழக்கம்" வானொலி தனது 15 வது ஆண்டு நிறைவை வெகு சிறப்பாகக் கொண்டாடியது. இந்நிகழ்வில் தமிழ் முழக்கத்தின் ஆரம்பகாலச் செயற்பாடுகள், கடந்து வந்த பாதைகள் குறித்து மூத்த ஒலிபரப்பாளர்கள் தமது கருத்துரைகளை வழங்கினார்கள்.

தொடர்ந்து திரு வானொலி மாமா மகேசனின் நெறியாள்கையில் தனி நடிப்பு உட்பட சிறுவர்களின் கலைநிகழ்வு இடம்பெற்றது.





அதனைத் தொடர்ந்து ஈழத்தின் புகழ் பூத்த நாடகக் கலைஞர் திரு.கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களது "அண்ணை றைற்" என்னும் தனி நடிப்பு நாடகங்களின் தொகுதியும் வெளியிடப்பட்டது. "அண்ணை றைற்" தனி நடிப்பு நாடங்களின் இறுவட்டை பிரபல எழுத்தாளரும், இலங்கை வானொலியின் முன்னை நாள் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான திரு காவலூர் இராசதுரை அவர்கள் வெளியிட, வானொலி மாமா திரு.மகேசன் அவர்கள் பெற்றுக் கொண்டார். திரு கே.எஸ்.பாலச்சந்திரனின் ஆரம்பகால நாடக வாழ்வியிலில் திரு காவலூர் இராசதுரை அவர்களின் ஊக்குவிப்பும் முக்கிய இடத்தைப் பெறுகின்றது என்பதும் குறிப்பிட வேண்டிய விடயம்.

இந்த நாடக இறுவட்டை வெளியிடுவதில் பெருமகழ்ச்சி கொள்வதாக அறிவிப்பாளரும், நிகழ்ச்சித் தொகுப்பாளரும், தமிழ் முழக்கம் வானொலியின் செயலாளரும் திரு சிவசம்பு பிரபாகரன் அவர்கள் குறிப்பிட்டார்.

நிறைவாக தமிழ்முழக்கம் வானொலியின் தற்போதய தலைவரான திரு ஈழலிங்கம் அவர்கள் நன்றியுரை உரை வழங்கினார்.

இந்த இரவு நிகழ்வில், இன்னிசை நிகழ்ச்சியும், நாடகமொன்றும், கூடவே சுவையான பரிமாறல்களாக இரவு உணவும் வழங்கப்பட்டு இனிதே நிறைவேறியது இந்நிகழ்வு.

அறிவிப்பாளரும், நிகழ்ச்சித் தொகுப்பாளரும், தமிழ் முழக்கம் வானொலியின் தற்போதைய தலைவருமான திரு சிவசம்பு பிரபாகரன்


தமிழ் முழக்கத்தின் அரசியல் அரங்கம் புகழ் கலாநிதி விக்டர் ராஜகுலேந்திரன்


தமிழ் முழக்கம் வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களில் ஒருவரான பேராசிரியர் ஆ.சி.கந்தராஜா



பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்படும் வானொலி மாமா திரு.மகேசன்


இசை நிகழ்வில் பாடி மகிழ்வித்த செல்வி கேசிகா.அமிர்தலிங்கம்



தனி நடிப்பை வழங்கிய செல்வி நிரோஷினி ரஞ்சன்


நிகழ்வுக்கு வந்திருந்த வானொலிப் பிரியர்களில் ஒரு பகுதியினர்

15 comments:

Anonymous said...

நன்றி பிரபா,
எங்கள் மண்ணின் மணம், (அன்றைய) எங்கள் இலங்கை வானொலியின் புகழ், மனது மறக்காத எங்கள் மூத்த கலைஞர்களின் சிரித்த முகங்கள் எல்லாவற்றையும் உங்கள் புகைப்படங்களில் பார்த்தேன். ஒரு பக்கம் மகிழ்ச்சியும், இவற்றை எல்லாம் வெறும் பழம் நினைப்பாகவே எண்ணி ஏங்கும் இந்த மண்மீதான வேதனை மறுபுறமாகவும் எழுகிறது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
படங்களுடன் செய்திக்கு நன்றி.

துளசி கோபால் said...

அங்கே தூள் கிளப்புறிங்க போல!!!!

பேசாம தமிழ்ச்சேவை கேட்பதற்கே
அங்கே வந்துரலாமான்னு இருக்கு.

படங்கள் எல்லாம் நல்லா இருக்கு பிரபா.

கானா பிரபா said...

வணக்கம் தயானந்தா அண்ணா

நிறையச் சாதித்த ஒரு தலைமுறையின் இலையுதிர்காலத்தைக் காணும் போது கொஞ்சம் கவலை எட்டிப்பார்க்கின்றது. இவர்களின் பணிகள் உரிய முறையில் ஆவணப்படுத்தப்பட்டு வைக்கப்படவேண்டும்.

கானா பிரபா said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
பிரபா!
படங்களுடன் செய்திக்கு நன்றி.//

//துளசி கோபால் said...
அங்கே தூள் கிளப்புறிங்க போல!!!!

பேசாம தமிழ்ச்சேவை கேட்பதற்கே
அங்கே வந்துரலாமான்னு இருக்கு.//

யோகன் அண்ணா மற்றும் துளசிம்மா

தங்கள் வருகைக்கு நன்றிகள்.

துளசிம்மா

தாராளமா நம்ம நாட்டுக்கு வரலாம்.
தமிழ்சேவை கேட்பதற்கென்ன, ஒரு நிகழ்ச்சி செய்வதற்கே இடம் தரலாம்

தாசன் said...

எங்கள் மூத்த படைப்பாளிகளையும், கலைஞர்களையும், படத்தில் கண்டு மகிழ்ந்தோம். இதைவிட எங்கள் குட்டி சுட்டிகளின் நிகழ்வுகள்,தமிழ் மேல் உள்ள பற்று. இவையேல்லாம் எம்மை மகிழ்ச்சி அடைய வைக்கின்றது. வாழ்த்துக்கள் பிரபா அண்ணா.

செல்லி said...

ஆகா...அருமையான படங்களும் செய்தியும்!
இங்கிருந்து இதெல்லாம் தெரியாமல் இருக்கிறேனே என்று வருத்தம்தான்.
நன்றி பிரபா.

மாயா said...

நன்றி

இங்க பேப்பரிலும் இதைப்பற்றி போட்டிருந்தார்கள்

கானா பிரபா said...

தாசன், செல்லியக்கா, மாயா

தங்கள் வரவுக்கு நன்றிகள், இறுவட்டு வரும்போது வாங்கிப் பயனடையுங்கள்.

யாழ்_அகத்தியன் said...

பிரபா!
படங்களுடன் செய்திக்கு நன்றி.

கானா பிரபா said...

வருகைக்கு மிக்க நன்றி நண்பரே

Kanags said...

வணக்கம் பிரபா, உங்கள் பதிவை இப்போது தான் பார்த்தேன். சிட்னியில் இப்படி ஒரு நிகழ்வு நடந்தது தெரியாமல் போய்விட்டட்து. முறையாக விளம்பரப்படுத்தப்படவில்லை போல் தெரிகிறது. தனிப்பட்ட அழைப்பாளர்கள் மட்டும் தான் கலந்து கொண்டார்கள் போற்தெரிகிறது. இப்படியான வெளியீடுகளை ஒரு குறுகிய வட்டத்துக்குள் வெளியிடுவது தகுமா? சரி கிடக்கட்டும், குறுந்தட்டை யாரிடம் வாங்கலாம் என்ற விபரத்தைத் தாருங்கள்.

கானா பிரபா said...

வணக்கம் சிறீ அண்ணா

சீடி கைக்கு வரும்வரை விளம்பரம் பாரிய அளவில் செய்யவில்லை, விழாவுக்கு 2 நாள் முன்னம் தான் சீடி வந்தது,

உங்களைப் போன்ற நண்பர்களுக்கு தனிப்பட்ட அழைப்புக்களை எடுத்திருந்தேன், உங்களை மட்டும் பிடிக்கமுடியவில்லை.

தற்போது ரமி வெளியீடாக நேற்று இந்தக் குறுவட்டு பிரபல வர்த்தக நிலையங்களில் ( பிரமிட் உட்பட) விற்பனைக்குண்டு.

Anonymous said...

Piraba,
This is an excellent idea because a lot of our brotheren who are all over world can keep in touch with what is happening here in our circle, rather than through the wstern media. Keep up the good work and I don't know where you find the time to all what you are doing for our community. I salute your efforts and thank you from the bottom of my heart.
Sritharan
Leumeah

கானா பிரபா said...

Hi Sri anna

Thank you for your comment, please keep in touch.