Thursday 28 June 2007

வாழ்த்துக்கள் ஒபரா ஹவுஸ் ;-)

அவுஸ்திரேலியாவின் அடையாளச் சின்னமாக விளங்கும் சிட்னி ஒபரா ஹவுஸ் உலகின் பாரம்பரியச் சின்னங்களில் (Heritage list) ஒன்றாக ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ (UNESCO) தேர்ந்தெடுத்திருக்கின்றது. யுனெஸ்கோவின் இந்த முடிவின் படி சிட்னி ஒபரா ஹவுஸுடன் , மேலதிகமாக இந்தியாவின் செங்கோட்டை (palace fort of Shahjahanabad), ஜப்பானின் Iwami Ginzan Silver Mine மற்றும் அதனைச் சூழவுள்ள கலாச்சாரப் படுக்கை, தெர்க்மெனிஸ்தானின் (Turkmenistan) Parthian Fortresses of Nisa என்ற அமைவிடமும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரம்பரியச் சின்னமாக அமைகின்றன.

நம்ம பக்கத்து நாடு நியூசிலாந்தின் Christchurch என்ற நகரில் 21 நாடுகளின் 183 பிரதிநிதிகள் கலந்துகொண்ட யுனெஸ்கோவின் கலாச்சாரப் பட்டியல் தேர்ந்தெடுப்பு நிகழ்வில் சுமார் 21 நாடுகளின் பிரதிநிகள் கலந்து கொண்டு இந்த முடிவினை எடுத்திருந்தார்கள்.

சிட்னி ஒபரா ஹவுசின் அருமை பெருமைகளை இன்றைய பதிவில் பார்ப்போம். Jørn Utzon, என்ற டென்மார்க் கட்டடக் கலைஞரால் 1957 ஆம் ஆண்டு கட்டட மாதிரி வரைபடம் தயாரிக்கப்பட்டு மார்ச் மாதம் 1959 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பித்த இந்த சிட்னி ஒபரா ஹவுஸ் 20 ஒக்டோபர் 1973 ஆம் ஆண்டு இராணி 2 ஆம் எலிசபெத்தால் திறந்து வைக்கப்பட்டது. உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள் ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 3000 ஆயிரம் கச்சேரிகளை வழங்கி 2 மில்லியன் இரசிகர்களின் இசை உறைவிடமாகத் திகழ்கின்றது.

அவுஸ்திரேலியாவை அடையாளப்படுத்தும் சின்னமாகவும் இது திகழ்வது மேலதிக சிறப்பு. இங்கு வருவோர் ஒபரா ஹவுஸின் வெளியில் நின்றாவாது புகைப்படம் எடுத்துச் செல்லாவிட்டால் விமோசனம் பெறமாட்டார்கள். சிட்னி நகரத்தின் மையமாக இது விளங்குகின்றது.

அவுஸ்திரேலியாவின் 17 அமைவிடங்கள், மற்றும் பாரம்பரியச் சின்னங்கள் ஏற்கனவே யுனெஸ்கோவின் இந்தக் கலாச்சாரப் பட்டியலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. உலகெங்கிலுமிருந்து கிட்டத்தட்ட 800 பாரம்பரிய சின்னங்களின் சாரப்பட்டியலில் இந்தியாவின் தாஜ்மகால், சீனாவின் Great Wall , மற்ரும் எகிப்து நாட்டின் பிரமிட்டுக்களோடு இப்போது ஒபரா ஹவுஸுக்கும் இடம் வந்திருக்கின்றது.

ஒபரா ஹவுஸுக்கு கிடைத்த இந்த உயரிய அந்தஸ்து பற்றி அவுஸ்திரேலியப் பிரதமர் ஜோன் ஹவாட் (John Howard ) சிலாகித்துப் பேசும் போது

"The Sydney Opera House, as an outstanding example of 20th century architecture, is a testament to the daring of architect Jorn Utzon, and to those who brought about his vision," he said in a statement.

"It is also, of course, testament to the openness of the people of Sydney and Australia, and an enduring legacy for our place in the world" என்றார்.

யுனெஸ்கோவின் பேச்சாளர் Roni Amelan பேசும் போது ஒரு வாக்கேனும் ஒபரா ஹவுஸின் தேர்ந்தெடுத்தலுக்கு எதிராக வரவில்லை என்று குறிப்பிட்டுப் பேசினார். மேலும் அவர் பேசும் போது "There was consensus that it was a truly outstanding, iconic building that was a defining moment in 20 century architecture" என்று குறிப்பிட்டார்.

உண்மையில் இந்த அதிஷ்டம் ஒபரா ஹவுஸுக்கு 3 வது முறையே வாய்த்திருக்கின்றது, 1981 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் நடந்த வாக்கெடுப்புக்களில் போதிய வாக்கு அற்றுத் தேர்ந்தெடுக்கப்படாமல் போயிற்று.
ஒபரா ஹவுசே உமக்கு எம் வாழ்த்துக்கள் ;-))

தகவல் உதவி: யுனெஸ்கோ தளம், , மற்றும் அவுஸ்திரேலிய செய்தி ஊடகங்கள்.
பட உதவி: Reuters: Tim Wimborne

6 comments:

Anonymous said...

/இங்கு வருவோர் ஒபரா ஹவுஸின் வெளியில் நின்றாவாது புகைப்படம் எடுத்துச் செல்லாவிட்டால் விமோசனம் பெறமாட்டார்கள்//

அண்ணா எனது ஆஸ்திரேலியா பயண டிக்கெட் இன்னும் வந்து சேரவில்லை.சிக்கிரம் அனுப்பவும்.அப்புறம் நானும் வந்து ஒபரா ஹவுஸ் முன்னால் படம் எடுப்பேன் :D

கானா பிரபா said...

என்னது இன்னும் வரலையா, நாலு மாசம் முன்னாடியே அனுப்பிட்டேனே.

ஸாரி சிஸ்டர், ஒருவாட்டி தான் அனுப்பமுடியும், தொலைந்தது தொலைந்தது தான் ;-(

Anonymous said...

//என்னது இன்னும் வரலையா, நாலு மாசம் முன்னாடியே அனுப்பிட்டேனே.

ஸாரி சிஸ்டர், ஒருவாட்டி தான் அனுப்பமுடியும், தொலைந்தது தொலைந்தது தான் ;-(

//

யாருக்கோ அனுப்பிட்டு எனக்கு அனுப்புனீங்க என்று பொய் சொல்லதீங்க.இங்கே ஒரு ஊழல் நடந்துவிட்டது.மற்ற கங்காருகளே இவரை கவனிக்கவும்.

Dhavappudhalvan said...

†hµrgåh said...
/அண்ணா எனது ஆஸ்திரேலியா பயண டிக்கெட் இன்னும் வந்து சேரவில்லை.சிக்கிரம் அனுப்பவும்.அப்புறம் நானும் வந்து ஒபரா ஹவுஸ் முன்னால் படம் எடுப்பேன் :D\

\கானா பிரபா said...
என்னது இன்னும் வரலையா, நாலு மாசம் முன்னாடியே அனுப்பிட்டேனே.

ஸாரி சிஸ்டர், ஒருவாட்டி தான் அனுப்பமுடியும், தொலைந்தது தொலைந்தது தான் ;-( \

†hµrgåh said...
//யாருக்கோ அனுப்பிட்டு எனக்கு அனுப்புனீங்க என்று பொய் சொல்லதீங்க.இங்கே ஒரு ஊழல் நடந்துவிட்டது.மற்ற கங்காருகளே இவரை கவனிக்கவும்.\\


டிக்கெட் கேட்டவரும் அனுப்பியவரும் ரொம்ப சமத்தர்கள் ( கெட்டிக்காரர்கள்)

கானா பிரபா said...

//டிக்கெட் கேட்டவரும் அனுப்பியவரும் ரொம்ப சமத்தர்கள் ( கெட்டிக்காரர்கள்)//

;-) அண்ணனுக்கு தங்கை ஏட்டிக்கு போட்டி இல்லையா?

-_- said...

hey

you are one of two bloggers chosen by sharm to represent your country in the first international blog
WUB (World United Bloggers)
the aim of this blog is to prove to the world that the difference in our languages and religions and colors doesn't make us hate each other and we can make this world better if we say our opinion with a respect to the opinion of the others
if you are agree to join us please send e-mail with your nick name , age , country and your blog address to send you activation mail which makes you read every thing about the WUB (World United Bloggers) and it's aims
thanks

Sharm