Saturday 24 March 2007

Daylight Saving நாளைக்கு


கண்ணுகளா ! மறந்திடாதீங்க அவுஸ்திரேலியாவில் Daylight saving (பகற்கொள்ளை) என்னும் நேரமாற்றம் நாளை மார்ச் 25 அதிகாலையில் இருந்து அமுலுக்கு வருது.

சிட்னி (New South Wales மாநிலம்), அடலெய்ட் (South Australia மாநிலம்), மெல்பன் (Victoria மாநிலம்), பேர்த் (Western Australia மாநிலம்) , ஹோபார்ட் (Tasmania மாநிலம்) மற்றும் கான்பரா (Australian Capital Territory) உள்ளிட்ட இடங்களுக்கு இந்த நேரமாற்றம் அமுலுக்கு வருகின்றது.

கடிகாரத்தைத் திருகி காலை 8 மணி என்பதை காலை 7 மணியாக்கிவிடவும்.

குயின்ஸ்லாந்து வாசிகளுக்கும் (செல்லி கவனிக்க ), டார்வின் வாசிகளுக்கும் நேரமாற்றம் இல்லை.

6 comments:

செல்லி said...

குடுத்துவச்சவர் நாங்கள். காலநேரத்த்தில் கைவைப்பதில்லை.
பிரபா எதற்கும் மறக்காமல் இருக்க எலாம் வச்சுடுங்கோ!:-)))
நினைவூட்டியதற்கு நன்றி. ஏனென்றால் STD call எடுக்கேக்கை நேரந் தெரியவல்லோ வேணும்.

Kanags said...

அப்ப ஒரு மணித்தியாலம் அதிகமாத் தூங்கலாம். நினைப்பூட்டியதற்கு நன்றி பிரபா.

அது சரி, அது என்ன "மானிலம்"? மாநிலம் எல்லோ:)?

சயந்தன் said...

நமக்கு இரவுக் கொள்ளை.. பகல் கூடுது தான்.. ஆனாலும் வசந்தம் வாறமாதிரி தெரியேல்லை. இவ்வாரம் முழுதும் ஸ்நோ.. வின்ரர் மீளத் திரும்புகிறது போலும். :((

கானா பிரபா said...

செல்லி

எலார்ம் வச்சுப் பழக்கமில்லை. கடவுள் தந்த நித்திரை வரத்தைக் குழப்பக்கூடாது ;-)

வணக்கம் சிறீ அண்ணா

மானிலம்/மாநிலத்தில் குழம்பிவிட்டேன். திருத்தியாச்சு.

சயந்தன்

எங்களுக்கு நோ ஸ்நோ ;-)

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

//எலார்ம் வச்சுப் பழக்கமில்லை. கடவுள் தந்த நித்திரை வரத்தைக் குழப்பக்கூடாது ;-)//

என்னை மாதிரியே கொள்கைப் பிடிப்புள்ளவராய் இருக்கிறீங்க பிரபா.. :O))

கானா பிரபா said...

;-)))