Saturday 31 March 2007

சிட்னி முருகன் தேரோட்டம்


காலைப் பொழுதில் ஆலய முகப்பு

நேற்றைய பதிவில் குறிப்பிட்டது போன்று சிட்னி முருகன் ஆலய ரதோற்சவம் வெகு சிறப்பாக இன்று நடந்தேறியது. வார இறுதி நாளான இன்று இந்நிகழ்வு வந்தது பக்தர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. அதிகாலை மூன்று மணிக்கே அன்னதானப் படையலைத் தயாரிக்க ஆலயம் சென்றது ஒரு கூட்டம். பின்னர் மெல்ல மெல்ல சூரியனுக்கு முன் நாம் போய்விடவேண்டும் என்று குளித்துப் புத்தாடை (அல்லது தோய்த்துலந்த ஆடை) பூண்டு பக்தர் கூட்டம் சிட்னி முருகனை நாடி ஓடியது.

ஆலயத்தின் உள்ளே அர்ச்சகர்களின் அலங்காரம், பூசை, சோடோபசாரங்களை வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமான் பெற்று பக்தர்களுக்கு தன் அருளை வாரி வழங்க, தம் இன்னல்கள் தொலைந்து போக வாய்விட்டு "அப்பூ! முருகா" என்றவாறே இறைஞ்சி வழிபாட்டர்கள்.

கே.எஸ் ரவிக்குமார் படங்களில் வரும் திருவிழா மாதிரி பட்டு வேட்டி சர சரக்க ஆண் பக்தர்களும் பாஷன் பரேட்டில் பெண் சிரசுகளும் தென்பட்டார்கள்.
" எனக்கு வேட்டி இடுப்பில் நிக்காது, வேட்டி கட்டிக்கொண்டு வந்தால் பிறகு மைக்கில் ஒரு வேட்டி கண்டெடுக்கப் பட்டுள்ளது என்று அறிவிப்பு வரும்" என்று சொன்னார் பக்கத்தில் ஜீன்ஸுடன் நின்ற நண்பர். எனக்கும் தான் ;-))

ஈழத்தின் பிரபல தவில் வித்துவான்கள் சுதா சின்னராசா, உதய சங்கர் தட்சணாமூர்த்தி குழுவினர் நாதஸ்வர மேள தாளங்களில் தங்க ரதம் வந்தது வீதியிலே பாடல் தொடங்கி பல இறையருள் பொங்கும் பாடல்கள் செவிகளை நிரப்பின.

"வட் எ மெஸ்" என்று ஒரு இளசு தன்னோடு வந்த இன்னொரு இளசிடம் சொல்லிக் கொண்டே தண்ணீர்ப் பந்தலில் இடிபட்டு வாங்கிய சர்பத்தைக் குடித்தது.

தேர் வடம் பிடித்து இழுத்து வேகமாகப் போகும் பக்தர்களை ஆங்கிலத்தில் கட்டளை இட்டு நிறுத்தினார் ஒருவர். தமிழ்ழ பேசுங்கண்ணா என்று சொல்ல வாய் உன்னியது.

கடைசியாக நியூசிலாந்து வலைப்பதிவாளர் சங்கத்து (நிரந்தரத்) தலைவி துளசி கோபால் அம்மாவுடன் சக கங்காருக்கள் கோயிலில் நடத்திய சந்திப்பைத் தொடர்ந்து சாப்பிட்ட அன்னதானத்துக்குப் பிறகு இன்றும் சாப்பிடுகிறேன். அதே மண்டபத்தில் இருந்து.

சரி இனி கண்ணுக்கு விருந்தாக இன்று எடுத்த சில படங்கள்

அடிவாங்கத் தயாராக இருக்கும் தேங்காய்க் கூட்டம்


வடம் பிடிக்கக் காத்திருக்கும் பக்தர் கூட்டம்


ரதமேறுகிறார் எம் பெருமான்


ரதமோடக் காத்திருக்கும் முருகப் பெருமான்


தேங்காய் எறியலுக்குக் காத்திருக்கும் பக்த கோடிகள்



காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே முருகா ஆட்டத்திலே...


மோரும், சர்பத்தும் கலந்துனக்கு நான் தருவேன், தண்ணீர்ப் பந்தலில்



நேற்றைய ஆட்டத்தில் கலந்து கொண்டு ஓய்வு பெறும் சப்பரம்



அருளுணவு பெற வந்த உங்களுக்கு வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும்



ஆறிலிருந்து அறுபது வரை...., பக்த வெள்ளம்



இலங்கை வானொலி புகழ் வானொலி மாமா மகேசன் தேரோட்டத்தைத் தொகுத்து வானஞ்சல் செய்கின்றார்.

மேலும் படங்களைக் காண
http://www.tamilsydney.com/content/view/502/37/

28 comments:

மலைநாடான் said...

பிரபா!
தொகுப்புக்கு நன்றி. உங்கள் படத் தொகுப்பில் இறுதியில் உள்ள மகேசன் ஐயாதான் என்னை ஒரு வானொலிக்கலைஞராக உருவாக்கியவர். இதுவரையில் அவரை நான் நேரில் சந்தித்ததே இல்லை. புகைப்படத்திலேதான் பார்த்திருக்கின்றேன். அதுவும் நீண்டநாட்களுக்கு முன். இன்று மீளவும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.
தொகுப்புக்கு நன்றி.

கானா பிரபா said...

வணக்கம் மலைநாடான்

கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கின்ரது. மகேசன் மாமா இன்னும் உள்ளத்தால் இளைஞர் தான். நகைச்சுவை நாடகம் நடக்கும் இடங்களுக்குப் போய் அவருக்குப் பின்னால் இருந்தால், மனுசன் குலுங்கிக் குலுங்கிச் சிரித்து அனுபவித்துப் பார்ப்பதைப் பார்ப்பதே அழகு.

நேற்று எழுத்தாளர் வரதரின் தமயனாரின் மகனை முதற் தடவை சந்தித்தேன், வரதர் பற்றிய பதிவையும் பேசி அவர் அளவளாவியது எனக்குப் பூரிப்பை உண்டு பண்ணியது.

துளசி கோபால் said...

சூப்பர் படங்கள் பிரபா.

நன்றி.

கானா பிரபா said...

வருகைக்கு நன்றிகள் துளசிம்மா

செல்லி said...

அருமையோ அருமை பிரபா.

என்ன இன்னுங் காணேலையே என்று காத்துக் கொண்டிருந்தேன்.
ரதோற்சவ தரிசனம் எங்களுக்கும் கிடைத்தது.
நன்றி, பிரபா.

கானா பிரபா said...

மிக்க நன்றிகள் செல்லி

நாளை சில வீடியோத்துண்டங்களை இணைக்க இருக்கிறேன்.

நாமக்கல் சிபி said...

தேரோட்டத்தையும் காணச் செய்தீர்கள்!

மிக்க நன்றி கானா பிரபா!

கானா பிரபா said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் நாமக்கல் சிபி

கார்திக்வேலு said...

பிரபா,
சுடச்சுட பதிவிட்டுள்ளீர்கள் :-)
தவில் வித்வான்களைச் சொல்லிவிட்டு
நாதஸ்வர வித்வான்களை விட்டு விட்டீர்களே ?!
அவர்கள் பெயர்கள் தெரிந்தால் படத்தோடு இடலாமே.

கடந்த ஒரு வாரகாலமாக அவர்கள் இசையக் கேட்டு மகிழ்ந்து
வருகிறேன்.பல அற்புதமான பாடல்களை அருகிலிருந்து கேட்கக்கிடைத்தது.
"சிங்கார வேலனே" பாடலை இன்னுமொரு முறை முடிந்தால் இசைக்கும்படி
கோரியுள்ளேன்.... பார்க்கலாம் :-)

Anonymous said...

பிரபா, சிட்னி முருகன் கோயிலை தோரோட்ட நிகழ்ச்சியோடு காண்பது, அக்கோயிலை சிட்னி வந்தபோது சுற்றிவந்ததை ஞாபகப்படுத்துகிறது. அருமையான் புகைப்படங்கள்.
இவ்வலைப்பூவில் சிட்னி சார்ந்த இன்னும் பல விடயங்கள் தருவீர்கள் என்ற எதிர்பார்ப்போடு..

கானா பிரபா said...

வாங்க ஜான்

வலைப்பதிவில் சந்திச்சு, நேரில் பார்த்த நாள் நினைவுக்கு வருது.

தொடர்ந்தும் நானும் சக கங்காருக்களும் முடிந்தளவு தருவோம்.

குமரன் (Kumaran) said...

பிரபா. திருவிழாப் படத்தொகுப்பிற்கு நன்றி. அதிலும் ஆறுமுகப்பெருமானின் பின்னழகைக் காட்டும் படம் அருமை. பின்னழகும் முன்னழகும் ஒன்றையொன்று வென்றிருக்கும் என்ற பாடல் வரி நினைவிற்கு வந்தது. வள்ளி தெய்வயானை அம்மைகளின் முடிப்பின்னல் அலங்காரம் தான் இந்தப் படத்தில் உள்ளது பின்னழகு என்று சொன்னது. இல்லையேல் ஆறுமுகப்பெருமானின் பின்புறத்திருமுகத்தைக் கண்டு முன்புறம் என்றே நினைத்திருப்பேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
சிட்னி முருகனைத் தேரில் தரிசிக்க வைத்ததற்கு நன்றி!
நல்லூர் தேர் நினைவு வந்தது. படங்கள் நன்று.
தேர் வாரவுறுதியில் வந்தது; பக்தர்களுக்குச் சந்தோசமென எழுதியுள்ளீர்கள். இங்கே
வெளிநாடுகளில் கோவில் திருவிழாக்கள்;கொண்டாட்டம்; திருமணம் ;வாரவிறுதியே!!
என்பது விதிபோல; இது கடவுளுக்கே தெரிந்து; அவரே! பயபக்தியாக தரிசனம் தாரார்.
அவுஸ்ரேலியா கண்டத்தில் விதி விலக்கோ!!

கோபிநாத் said...

பிரபா...
உங்களின் மூலம் தேரோட்டமும் பார்த்து விட்டேன். அழகாக தொகுத்து எழுதியிருக்கிறிர்கள். அதிலும் அந்த வேட்டி விஷய கமெண்ட் சூப்பர். புகைப்படங்களும் அழகாக உள்ளது.

தண்ணீர் பந்தலை பார்த்தவுடன் எனக்கு என் பழைய நினைவுகள் எல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது. திருத்தணி முருகன் கோவிலில் வருடாவருடம் நானும் செய்திருக்கிறேன்.

மிக்க நன்றி பிரபா ;-)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அழகான படங்கள் பிரபா;
படங்களுக்கு கீழே அதை விட அழகான கமெண்டுகள்!
//மோரும், சர்பத்தும் கலந்துனக்கு நான் தருவேன்//
மிகவும் ரசித்தேன் :-))

//ரதமேறுகிறார் எம் பெருமான்//
இந்தப் படத்தில் தான் முருகனின் திருமுகம் அருகில் காணக் கிடைக்கிறது! அழகோ அழகு! இத்தனைக்கும் அது பின்னழகு!

ஆறுமுகம் ஆனதாலே முன்னழகு போல் சேவிக்க முடிகிறதே!
அதுவும் அந்த ராஜ அலங்காரத் தலைப்பாகை - அமர்க்களம்!

கானா பிரபா said...

// குமரன் (Kumaran) said...
பிரபா. திருவிழாப் படத்தொகுப்பிற்கு நன்றி. //

வணக்கம் குமரன்

எதிர்பாராத விதமாக எடுத்த அப்புகைப்படங்கள் சிறப்பாக வந்துவிட்டன. கருத்துக்கு மிக்க நன்றிகள்.

கொழுவி said...

//அழகோ அழகு! இத்தனைக்கும் அது பின்னழகு! //

எனக்கு ஏதாவது சொல்ல வேணும் போல இருக்கிறது. வேணாம். இது கடவுள் சம்பந்தப் பட்ட விடயம். இப்பிடியான விடயங்களோடு விளையாடினால் கடவுள் கண்ணைக் குத்துவார் என்று ஆச்சி அடிக்கடி சொல்லுறவ..

வி. ஜெ. சந்திரன் said...

படங்கள், தேர் திருவிழா விபரங்கள் அனைத்துக்கும் நன்றி

கானா பிரபா said...

யோகன் அண்ணா

வார இறுதி பார்த்து இங்கே உற்சவகாலம் அமைக்கப்படுவதில்லை. தானாக வந்தால் ஒழிய

//கோபிநாத் சைட்...
அதிலும் அந்த வேட்டி விஷய கமெண்ட் சூப்பர். புகைப்படங்களும் அழகாக உள்ளது.//

நன்றி ;-))

// ரவி ஷங்கர்
அழகான படங்கள் பிரபா;
படங்களுக்கு கீழே அதை விட அழகான கமெண்டுகள்!//

ஏதோ எங்களால முடிஞ்சது ;-)

கொழுவி அண்ணை

ஆச்சி ஆயிரம் சொல்லுவா, அதை வச்சு கொழுவாதேங்கோ

வி.ஜே

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

சயந்தன் said...

இங்கே சுவிசில் பழைய குடோன் ஒன்றில் அமைந்திருந்த ஆலயம் (குகைக் கோவில்..) ஒன்றை முதலில் வெளிநாட்டில் அவதானித்தவன்.. வெளிநாடுகளில் கோவில்கள் இவ்வாறுதான் இருக்கும் போல என்று நினைத்தேன்.
ஆனால் அவுஸ்ரேலியாவில்.. மெல்பேண் சிவா விஸ்ணு ஆலயம்.. சிட்னி முருகன்.. சிட்னியில் இன்னொரு சிவன் ஆலயம்..(ஒரு காட்டுப்பாதையில்..) இவற்றைப் பார்த்தவுடன் அந்த நினைப்ப மாறிவிட்டது. அழகான சூழலில் பிரமாண்டமாக பொன்னம்பலவாணேசர் கோவிலுக்கு அடுத்த படியாக அனுபவித்துச் செல்லும் இடங்கள் அவை..

இங்கே குறிச்சிக்கு ஒன்றாக இருக்கின்ற கோவில்களை இணைத்து பிரமாண்டமான ஒரு கோவிலைக் கட்டலாம். ஆனால் செய்ய மாட்டார்கள்.. வருமானம் போக கூடும்..
வைகாசிக் குன்று முருகன் ஆலயம்.. நல்ல பொருத்தம்..;) நான் கூட ஏழுமலை.. (விளங்கும் தானே..) எனத் தொடங்கும் கோவிலை கட்டலாமா என யோசித்துக் கொண்டிருந்தேன்...

இங்கு கோவில் கட்டுவதாக இருந்தால்.. Drive through அர்ச்சனை வசதியோடு கட்டுகின்ற ஒரு ஐடியா உள்ளது. இட நெருக்கடி ஐயா..

படம் எடுத்தனியள்.. தனிய முருகனை மட்டும் எடுக்காமல் அவ்வப்போது படங்களையும் எடுத்திருக்கலாமே..;)
தெரிந்த அறிந்த யாரையாவது பார்த்து ..ம்.. பார்த்திருக்கலாம்.

கானா பிரபா said...

//சயந்தன் said...
சிட்னியில் இன்னொரு சிவன் ஆலயம்..(ஒரு காட்டுப்பாதையில்..) //

அது ஹெலன்ஸ்பேர்க் சிவா விஷ்ணு ஆலயம், சிட்னி வலைப்பதிவாளர் சந்திப்பு 2 ஆம் பாகம் அங்கு நடந்து படமும் போட்டிருந்தேன். இன்னும் எழுதவேணும் எண்டால் திருவிழா வரை பொறுப்பம்.

ஏழுமலையில் இருந்தனீர், அப்பிடியே இருந்திருக்கலாம், அல்ப்ஸ் மலை காணப் போட்டீர்.

Drive through வோட eftpos வசதியும் வச்சு, கிறடிட் கார்ட்டிலும் அர்ச்சனை செய்ய என்ர ஆலோசனை தாறன். கூடவே points system கொண்டும் வரலாம்.

வலையில உலாவிற சனமும் வந்தவை ஆனால் பின் கன்ரீன் பக்கம் தான் எந்த நேரமும் ;-)

சினேகிதி said...

\\இங்கே குறிச்சிக்கு ஒன்றாக இருக்கின்ற கோவில்களை இணைத்து பிரமாண்டமான ஒரு கோவிலைக் கட்டலாம். ஆனால் செய்ய மாட்டார்கள்.. வருமானம் போக கூடும்.. \\

ingaum athan pirachanai..aduthu nanum oru koyil kada poran .

சினேகிதி said...

\\இங்கே குறிச்சிக்கு ஒன்றாக இருக்கின்ற கோவில்களை இணைத்து பிரமாண்டமான ஒரு கோவிலைக் கட்டலாம். ஆனால் செய்ய மாட்டார்கள்.. வருமானம் போக கூடும்.. \\

ingaum athe pirachani....

சினேகிதி said...

\\இங்கே குறிச்சிக்கு ஒன்றாக இருக்கின்ற கோவில்களை இணைத்து பிரமாண்டமான ஒரு கோவிலைக் கட்டலாம். ஆனால் செய்ய மாட்டார்கள்.. வருமானம் போக கூடும்.. \\

ingaum athe pirachanai than.

கானா பிரபா said...

சினேகிதி

நீங்களும் கோயில் கட்டுங்கோ, றினிஸ் தான் தர்மகர்த்தா

Haran said...

கந்தனுக்கு...அரோகரா...
முருகனுக்கு... அரோகரா...
வேலனுக்கு... அரோகரா...

கானா பிரபா said...

தம்பி ஹரன், அடுத்த திருவிழாவும் வரப்போகுது இப்பதான் படம் பார்த்தனீரோ?

உண்மைத்தமிழன் said...

ஆஹா.. கண்டேன்.. கண்டேன்.. என் அழகுமிகு கந்தனைக் கண்டேன்.. சிட்னி முருகா எல்லோரையும் காப்பாத்துப்பா.. கந்தனுக்கு வேல்.. வேல்.. முருகனுக்கு வேல்.. வேல்.. அரோகரா.. அரோகரா.. அரோகரா..