Friday, 30 March 2007

சிட்னி முருகனுக்கு மகோற்சவம்

சிட்னி மாநகரில் வைகாசிக்குன்று என்று அழைக்கப்படும் Mays Hill இல் எழுந்தருளியுள்ள எம்பெருமான சிட்னி முருகனின் மகோற்சவம் கடந்த ஒன்பது தினங்களாக நடைபெற்று நாளை ரதோற்சவம் இடம்பெறவுள்ளது.இந்திய மற்றும் ஈழத்தவர் அயலெங்கும் செறிந்து வாழும் பிரதேசமாக மாறிவிட்ட இவ்வூரில் எம்பெருமான் முருகனுக்கே தனித்துவமான வைகாசி மாதத்தினையும் குறிஞ்சி நிலக்கடவுளாகச் சிறப்பிக்கப்படும் அடையாளமாகவும் இணைத்து ஆங்கிலத்திலேயே Mays Hill என்று வழங்கப்பட்டு வரும் இவ்வூரில் இந்த ஆலயம் எழுந்தருளியிருப்பது வெகு சிறப்பு.

இன்று வெகு சிறப்பாக சப்பரத்தில் முருகப்பெருமான் பவனி வர மூவாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து சிறப்பித்தார்கள்.ஈழத்தின் புகழ்மிக்க தவில் வித்துவான்களான அமரர் சின்னராசாவின் மகன் சுதாகரன், மற்றும் தட்சணாமூர்த்தியின் மகன் உதயசங்கர்
தம் நாதஸ்வரக்குழுவினரோடு வந்து இவ்விழாக்காலத்தைச் சிறப்பித்தனர். இவர்களின் நாதமுழக்கம் இணுவிலுக்கு இட்டுச் சென்றது.வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மிகச்சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட முருகப்பெருமான் வள்ளி தேவசேனா சமேதராக வலம் வந்தார்.

ஆண்டவனிடம் அருள் நாடி வந்தோர், பின் பக்க கன்ரீனில் சாப்பிட வந்தோர், கலர் பார்க்க வந்தோர், வேட்டி, சேலை ( படையப்பா, சந்திரமுகி, காக்க காக்க வகைகள்) , சுரிதார், ஜீன்ஸ் என்று விதவிதமான கூட்டத்தால் களைகட்டியது .

நாளை ரதோற்சவத்தின் முழுத்தொகுப்போடு வருகிறேன். இப்ப கொண்டுவந்த பிரசாதம் சாப்பிடவேணும்.

படங்கள் நன்றி: சிட்னிமுருகன் இணையத்தளம்

18 comments:

நாமக்கல் சிபி said...

உங்க தயவால எங்களுக்கும் தரிசனம் கிடைச்சுது!

நீங்கள் வாழ்க!

கானா பிரபா said...

என்னங்க இது வாழ்க என்று பெரிய வார்த்தையெல்லாம்...

ஏதோ நம்மளால முடிஞ்சது, நாளைக்குத் தேரோட்டப் படம் போட்டுர்ரேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சிட்னி முருகனுக்கும் "அரோகரா" ச் சொல்ல வைச்ச பிரபாவுக்கு நன்றி

கானா பிரபா said...

யோகன் அண்ணா

வருகைக்கு நன்றிகள், நாளையும் இணையம் வாயிலாக தேரும் காட்டுறன்.

G.Ragavan said...

துயர்களைச் சட்னி செய்யும் சிட்னி முருகனுக்கு அரோகரா!
வேலனுக்கு அரோகரா!
சீலனுக்கு அரோகரா!

என்ன அழகு...பச்சை மயிலேறி கண்குளிர காட்சி தரும் அழகே அழகு. கொடுத்து வைத்தவர். உங்கள் வழியாக நாங்களும் தான்.

தவில் கச்சேரி எதுவும் நடந்திருந்தால் அதைப் பதிவு செய்திருக்கலாமே பிரபா. நாங்களும் கேட்டு ரசித்திருப்போமே!

கானா பிரபா said...

வணக்கம் ராகவன்

கோயிலின் உள்ளே வெளியாட்கள் அனுமதியின்றி ஒலி,ஒளிப்பதிவு செய்யமுடியாது கூடவே ஒலிப்பதிவுக்கருவியும் கொண்டுபோயிருக்கவில்லை. நாளை முயற்சி செய்கின்றேன்.

இன்று சப்பர உற்சவம் வெலு அற்புதம் கமரா கொண்டுபோகவில்லை என்று பிறகு வருத்தப்பட்டேன்.

மங்கை said...

அருமையா இருக்கு பிரபா... நன்றி
முருகனருள் அனவருக்கும் கிடைக்கட்டும்

எழில் said...

மிக்க நன்றி.
ஆஸ்திரேலியா வாழ் மக்கள் அனைவருக்கும் முருகனருள் கிட்டட்டும்.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

மேலும் படங்களுக்கு இங்கே பாருங்க

செல்லி said...

பிரபா
ஆகா அருமையான முருகன் தரிசனம்!

இதுதான் குடுப்பனவு என்கிறது. குடுத்து வச்சனீங்கள்!
இணுவில் தவில்.நாதஸ்வரகாரர் வந்திருக்கினமாம் என்று அறிந்தேன்.
ரதோற்சவத்தையும் காண ஆவலுடன் இருக்கிறேன்.
மிக மிகப் பெரிய நன்றி.

துளசி கோபால் said...

படங்கள் அருமை.

நம் சந்திப்பின் நினைவு வந்து போனது.

முருகனருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

கோபிநாத் said...

தரிசனத்திற்கும், பிரசாதத்திற்க்கும் நன்றி பிரபா;-))

Kanags said...

பல சோலிகள். இன்னும் சிட்னி முருகனிட்டப் போகக் கிடைக்கேல்லை.
//உங்க தயவால எங்களுக்கும் தரிசனம் கிடைச்சுது!//
எனக்கும் தான். நன்றி.

வெற்றி said...

கானா பிரபா,
தகவலுக்கு மிக்க நன்றிகள்.

நான் கோவிலுக்குப் போவது குறைவு. ஆனால் நல்ல நாதஸ்வர- மேளக் கச்சேரியெண்டால் செல்வது வழக்கம். தவில் மேதை அமரர் சின்னராசாவின் மகன் சுதாகரன் கனடா வரும் போதெல்லாம் அவரின் தவில் கச்சேரிகள் பார்க்கச் செல்வேன்.
தந்தையைப் போல் தனயனும் சிறந்த தவில் வித்துவான்.

Anonymous said...

//ஆண்டவனிடம் அருள் நாடி வந்தோர், பின் பக்க கன்ரீனில் சாப்பிட வந்தோர், கலர் பார்க்க வந்தோர், வேட்டி, சேலை ( படையப்பா, சந்திரமுகி, காக்க காக்க வகைகள்) , சுரிதார், ஜீன்ஸ் என்று விதவிதமான கூட்டத்தால் களைகட்டியது .//

புடவை வகைகள் எல்லாம் தெரியுமா?எப்படி? ;)

Anonymous said...

அழகான கோயில் :)

செல்லி said...

//ஈழத்தின் புகழ்மிக்க தவில் வித்துவான்களான அமரர் சின்னராசாவின் மகன் சுதாகரன், மற்றும் தட்சணாமூர்த்தியின் மகன் உதயசங்கர்
தம் நாதஸ்வரக்குழுவினரோடு வந்து இவ்விழாக்காலத்தைச் சிறப்பித்தனர்.//
இதெல்லாம் கேட்கக் கிடைக்கேலையே என்று கவலையா இருக்கு.
என்றாலும் முருகன் தரிசனம் கிடைத்ததில் ஒரு திருப்தி!
வாழ்க, பிரபா.

கானா பிரபா said...

மங்கை எழில், ஷ்ரேயா, செல்லி, துளசிம்மா, கோபிநாத், சிறீ அண்ணா, வெற்றி மற்றும் துர்கா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

உங்கள் அனைவருக்கும் முருகன் அருள் கிட்டட்டும்.

செல்லி

வேர்ஜின் புளூவில வந்திருக்கலாம் தானே? உது சேட்டை

ஷ்ரேயா

தொடுப்புக் குடுக்கிற வேலைக்குப் பதில் நாலு வரி எழுதிப் பதிவு
போட்டால் என்னவாம்?

சிறீ அண்ணா

நாட்டில இல்லைப்போல, கோயில் பக்கம் சிலமனில்லை ?

வெற்றி

நாதஸ்வர இன்பம் வெறுப்பவரும் உண்டோ

துர்கா

புடவை வகைகள் தெரிஞ்சு வச்சிருப்பது நல்லது, மணி பர்ஸுக்குச் சேதம் வராது. என்னமோ போங்க வித விதமா ஒவ்வொரு மாசமும் வந்துகிட்டே இருக்கே.