குயின்ஸ்லாந்து மாநிலம்
குயின்ஸ்லாந்து அவுஸ்திரேலியாவின் வடகிழக்கு மூலயில் இருக்கிறது. இது மேற்கே நோதேண் ரெறிற்ரறியையும் (Northern Territory), தென்மேற்கே தென்அவுஸ்திரேலியாவையும், தெற்கே நியூசவுத் வேலையும், கிழக்கே பசுபிக் சமுத்திரத்தையும், கோறல் கடலையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.(2) இதன் கடற்கரையின் பெரும்பகுதி "பெரிய தடுப்பு பாறைத்தொடரை" (
குயின்ஸ்லாந்து அவுஸ்திரேலியாவில் எங்கே இருக்கிறது என்பதை தெளிவாக படத்தில்(3) காணலாம். இது அவுஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய மாநிலமாகும்.இதன் நிலப்பரப்பு 1,852,642 சதுர கி.மீ(கிட்டத்தட்ட1.8மில்லியன் சதுர கி.மீ)ஆகும்.குயின்ஸ்லாந்து அவுஸ்திரேலியாவின் மொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 1/3 பங்கை உள்ளடக்குகிறது எனலாம். இந்த நிலப்பரப்பு அளவு அமெரிக்க ரெக்ஸாஸ் மாநிலத்தின் இரண்டரை மடங்கு அளவைக் கொண்டதாகும்.இம் மாநிலப் பெரும்பகுதி பூமியின் மத்தியகோட்டுப் பகுதியைச் சார்ந்ததாக உள்ளது.
வரலாறு
ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் பூர்வீகக்குடி மக்கள் ( Indigenous Australians ) கிட்டத்தட்ட நாற்பதாயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்திருக்கிறார்கள் எனப்படுகிறது.(2)
கப்ரன் ஜேம்ஸ் குக்( Captain James Cook)1770 இல் குயின்ஸ்லாந்தைக் கண்டுபிடித்தார் . இதற்கு முன்பு டச்சு, போர்த்துகேயர, பிரான்ஸ் கப்பலோட்டிகளும் வந்து ஆராய்ந்து போயிருக்கிறார்கள். ஆரம்பத்தில் இது நியூசவுத் வேல்ஸ்சின் அதிகாரத்தின்கீழ்த்தான் இருந்தது. 1824 தொடக்கம் 1843 வரை குயின்ஸ்லாந்து தங்கச் சுரங்கங்களில் வேலை செய்யும் கைதிகள் காலனி (Colony) யாகவே இருந்தது. பின்பு 1859 இல் நியூசவுத் வேல்ஸ்சிலிருந்து பிரிந்து, பிரிட்டிஷ் காலனி என மாறியது. இந்த மாநிலத்தை இவ்வாறு தனி மாநிலமாக ஆக்க விக்ரோறியா மகாராணியார் கையெழுத்திட்டு பிரகடனப்படுத்தியதனால் "குயின்ஸ்லாந்து" எனப் பெயர் பெற்றது. (1) பின்னர் 1901 ம் ஆண்டில்த்தான் அவுஸ்திரேலியாவின் பொதுநல அமைப்பின்கீழ் சட்டரீதியான மாநிலமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
சனத்தொகை
2006 இல் குயின்ஸ்லாந்தின் சனத்தொகை 4,053,444 அதாவது கிட்டத்தட்ட 4 மில்லியன்களாகும்.இதில் 0.3% இந்துக்கள் 70.9% கிறிஸ்தவர்கள்,0.4% இஸ்லாம் மதத்தவரும் இங்கு வாழ்வதாக புள்ளிவிபரங்கள்காட்டுகின்றன.(1) அவுஸ்ரேலியாவின் ஏனைய மாநில தலைநகரங்களிலும்பார்க்க மிகக் கூடிய சனத்தொகை வளர்ச்சி வீதத்தை கடந்த ஐந்து வருடங்களாக பிறிஸ்பேன் பதிவு செய்திருக்கிறது. 2000ம் ஆண்டிலிருந்து 2005 வரை பிறிஸ்பேனின் சராசரி சனத்தொகை வளர்ச்சி வீதம் வருடமொன்றுக்கு 2.0 சதவீதமாக இருந்தது.(4)
இன்னும் வரும்.............
1. http://en.wikipedia.org/wiki/Queensland
3. http://www.queensland-australia.com/100103.php
4. http://www.sd.qld.gov.au/dsdweb/v3/documents/objdirctrled/nonsecure/pdf/16870.pdf
13 comments:
வருகைக்கு நன்றி பிரபா.
செல்லி, நல்ல அறிமுகம். தமிழ் விக்கிபீடியாவுக்கு குயின்ஸ்லாஅந்து பற்றி சில தகவல்கள் தேடிக்கொண்டிருந்தேன். உங்கள் பதிவு கட்டாயம் விக்கிக்குப் பிரயோசனமாக இருக்கும். தொடர்ந்து எழுதுங்கள்.
அட்மினிஸ்ட்ரேட்டர் கவனத்துக்கு: தமிழ்மணத்தில மறுமொழிகள் சேகரிக்கப்படவில்லை போலிருக்கிறது.
எல்லாம் செய்து பார்த்தாச்சு, மழையும் சொன்னவ, என்னவோ தெரியாது தமிழ் மண மட்டுறுத்தல்லை வரேல்லை. மெல்பன் காரன்களின்ர சதியோ தெரியேல்லை. ;-(
வணக்கம் Kanags
// தமிழ் விக்கிபீடியாவுக்கு குயின்ஸ்லாந்து பற்றி சில தகவல்கள் தேடிக்கொண்டிருந்தேன். உங்கள் பதிவு கட்டாயம் விக்கிக்குப் பிரயோசனமாக இருக்கும். தொடர்ந்து எழுதுங்கள்.//
இதை இதை இதைதான் நான் எதிர்பாத்தன்.அடிசக்கை அம்மன் கோயில் புக்கை...இப்பிடிச் சொன்னாத்தானே எனக்கும் எழுதிறத்துக்கு ஒரு உற்சாகம் வரும்.
மிக்க நன்றி உங்க கருத்தைச் சொன்னதிற்கு.
இந்தப் பதிவை நான் சேர்க்கையிக்கை
தமிழ்மணத்தில மறுமொழி மட்டுப்படுத்தல் செய்யப்படவில்லை என வந்தது.
கானா பிரபா
எல்லாம் செய்து பார்த்தாச்சு, மழையும் சொன்னவ, என்னவோ தெரியாது தமிழ் மண மட்டுறுத்தல்லை வரேல்லை.
இந்தப் பதிவை நான் சேர்க்கையிக்கை
தமிழ்மணத்தில மறுமொழி மட்டுப்படுத்தல் செய்யப்படவில்லை என வந்தது.
இதுக்கு நன் ஏதும் செய்யவேணுமோ?
//மெல்பன் காரன்களின்ர சதியோ தெரியேல்லை. //
ஆர் கண்டது இருந்தாலும் இருக்கும்.
பொறுத்திருந்து பார்ப்பம், ஐரோப்பாவில இருந்து ஒருத்தர் வெள்ளைக்கொடியோட வந்தவர்
//இப்பிடிச் சொன்னாத்தானே எனக்கும் எழுதிறத்துக்கு ஒரு உற்சாகம் வரும்.//
அப்பிடியோ.. சரி.. சிங்கள விக்கிபீடியாவுக்கு குயின்ஸ்லாஅந்து பற்றி சில தகவல்கள் தேடிக்கொண்டிருந்தேன். உங்கள் பதிவு கட்டாயம் விக்கிக்குப் பிரயோசனமாக இருக்கும். தொடர்ந்து எழுதுங்கள்.
உங்கள் பதிவு கட்டாயம் விக்கிக்குப் பிரயோசனமாக இருக்கும். தொடர்ந்து எழுதுங்கள்.
அது யாருப்பா விக்கி..? படிக்கிற பையனா
Good one .. It seems there is an active community in Queensland
www.tamilbrisbane.com
வணக்கம் கொழுவி
//சிங்கள விக்கிபீடியாவுக்கு குயின்ஸ்லாந்து பற்றி சில தகவல்கள் தேடிக்கொண்டிருந்தேன். உங்கள் பதிவு கட்டாயம் விக்கிக்குப் பிரயோசனமாக இருக்கும். தொடர்ந்து எழுதுங்கள். //
பகிடியாக்கிடக்கு....ஆ
வாங்க அனானி
//அது யாருப்பா விக்கி..? படிக்கிற பையனா//
வலைப் பக்கங்களில அங்கினேக்கை உலாதிக் கொண்டு திரிவான்,
அவன்தான்!
வாங்க அனானி 2
//It seems there is an active community in Queensland//
நாம ஊருக்குப் புதுசுங்கோய்!
//www.tamilbrisbane.com//
இதில தமிழ்பிறிஸ்பன் எண்டிருக்கு. அந்த வலைப் பக்கத்தில தமிழைக் காணேல.
Post a Comment