Friday, 9 February 2007

கங்காரு தேசத்துச் சேதிகள்

நேற்று காரில் வரும் போது யோசித்துக் கொண்டே வந்தேன். பின் நண்பருடன் இரவில் கதைக்கும் போதும் குறிப்பிட்டேன். வேறொன்றுமில்லை. நாம் வாழும் தேசத்தின் சில நிகழ்வுகளைப் பதிவாக்க வேண்டும் என்று.
இன்று மாலையில் பார்த்தால் தென் துருவ வலைப் பதிவாளர்சங்கத்தின் கொ.ப.செ ஷ்ரேயா ஒரு வலைப்பதிவையே உருவாக்கி மயிலை அனுப்பிவிட்டார்.
கங்காரு நாட்டுச் செய்திகளை அவ்வப்போது நானும் தருவேன்.

நேசம் கலந்த நட்புடன்
கானா.பிரபா

15 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

என்ன? பிரபா!
இப்படிச் சொல்லிவிட்டீர்கள்!
இந்தக் கண்டத்திலா? சொல்ல இல்ல என்கிறீங்க?
நான் தொலைக்காட்டியிலேயே பார்த்துப் பிரமிக்கும் கண்ட தேசம்!!
இருவரும் கொட்டுங்கோ!
நேற்று செல்லி "கங்காரு தேசத்து முருங்கையை"ப் போட்டுக் கலக்கிவிட்டா?

நெல்லைகிறுக்கன் said...

ஷ்ரேயா, பிரபா, கார்த்திக், கஷ்தூரிப்பெண், கணக்ஸ்:

நல்ல முயற்சி. நான் பார்த்த பாக்காத ஆஸ்திரேலியாவைப் பத்தி இந்த வலைப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பனங்காட்டு நரி(உபயம்:பிரபா) மூலமா இந்தப் பதிவப் பாத்த போது, நிறைய எழுத்துக்கள் சரியாகத் தெரியவில்லை. சரி செய்ய முடியுமா என்று பாருங்க...

-நெல்லைக்கிறுக்கன்

'மழை' ஷ்ரேயா(Shreya) said...

நன்றி யோகன்.

நெல்லைக் கிறுக்கன் இப்ப சரியாத் தெரியுதுங்களா

சயந்தன் said...

//நான் தொலைக்காட்டியிலேயே பார்த்துப் பிரமிக்கும் கண்ட தேசம்!!//

அண்ணோய்.. பிரான்சில ஈபிள் ரவரில இருந்து பைனாகுலராலை பாக்க அவுஸ்ரேலியா தெரியுதோ..:)

Chandravathanaa said...

நல்ல விடயம். வாழ்த்துக்கள்.
நான் இருதரம் அவுஸ்திரேலியா போய் வந்து விட்டேன்.
முதலே இந்தப் பதிவைத் தொடங்கியிருந்தீர்களானால் உதவியாக இருந்திருக்கும்.

இப்போ, இனி அங்கு பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை. வேறு நாட்டுக்குப் போகலாம் என்று தீர்மானித்து விட்டேன். உங்கள் பதிவால் மீண்டும் போகும் எண்ணம் வருகிறதா என்று பார்க்கிறேன்.

கானா பிரபா said...

முயற்சி செய்து முடிந்தவரை தருகின்றோம் அக்கா

Haran said...

மிகவும் நல்லதொரு முயற்சி பிரபா அண்ணா... நான் இங்கு இங்கிலாந்தில் நிற்கின்றேன்... இங்கு நம்மவர்க்கு எவ்வளவு சொன்னாலும் புரியுதில்லை அவுஸ்ரேலியா பற்றி

அவர்களைப் பொறுத்தவரை அவுஸ்ரேலியா ஒரு வெப்பம் நிறைந்த... நாடு... காணிகளுடன் கூடிய வீடு கட்டி நல்ல டாப்பீகமாக வாழலாம் என்பதே கருத்து...

இங்கு வாழும் வெள்ளையர்களோ... வீதியில் கங்கரூ ஓடித் திரிகிறதா... அங்கு கட்டிடங்கள் இருக்கின்றனவா என்று கேட்கின்றார்கள்... ஒரு பக்கம் சிரிப்பாகவு... மறு பக்கம்... அவர்களது அறியாமையினையும் எடுத்து காட்டுவதாக அது இருக்கிறது.

நானும்... இங்கு இருக்கும் பொழுது... எனது அனுபவங்களினை எழுதலாம் என்று எண்ணியுள்ளேன்... நேரம் தான் கொஞ்சப் பிரச்சனை... ஆயினும்... ஆரம்பிப்பது என்று திடத்துடன் இருக்கிறேன் இப்பொழுது.

மறவன் said...

என் சக கங்காரு தேச நண்பர்களே வணக்கம்

நல்ல பதிவுகள் தொடர்ந்து எழுதுங்கள்

அன்புடன்
மறவன்

கானா பிரபா said...

வாங்கோ மறவன்

எங்கட பதிவும் கட்டெறும்பாச்சு, ஒவ்வொரு கங்காருவும் ஒவ்வொரு திசையில் இருக்கு. மீண்டும் கூட்டி வந்து பதிவு போடுறம்.

வசந்தன்(Vasanthan) said...

என்ன ஐசே, ரெண்டு நாளைக்கு முதல் உங்கட ஊரில ஒருத்தன் APC கொண்டு உழுது போட்டானாம். மொபைல் ரவர் எல்லாம் உடைச்செறிஞ்சு ரெண்டு மணித்தியாலமா பெரிய அட்டகாசமாம்.

என்ன வாய் பாத்துக் கொண்டு நிண்டனியளோ?

உவர் எங்கட பக்கம் உப்பிடி ஏதாவது விளையாட்டுக் காட்டியிருக்க வேணும்....
நடந்திருக்கிறதே வேற.

கானா பிரபா said...

என்னப்பா இது, மெல்பன்காரன்கள் சொல்லித்தான் விஷயமே தெரியுது, இப்பதான் கேள்விப்படுகிறன் ;-(

வசந்தன்(Vasanthan) said...

என்னண்ணை,
தொலைக்காட்சிகள் ஒண்டும் பாக்கிறேலயோ?
ரெண்டு நாளா உதைத்தானே காட்டிக்கொண்டிருந்தாங்கள்?

அதுவுன் அவன் ராங்கை ஓட்டிக்கொண்டு போக பின்னாலயே பொலிசும் மீடியாக்காரங்களும் ஊர்வலமாப் போய் அவன் ஒவ்வொரு ரவரையும் நொருக்கிறதை வடிவாப் படம் பிடிச்சுக் காட்டினாங்கள்.

எதுக்கும் ஒரு லிங் தாறன்.

Ex-telecommunications worker steals tank, destroys 6 cell phone towers that made him ill

இணையத்திலயே நிறைய வீடியோக்கள் வந்தது. தேடிப்பாத்தாக் கிடைக்கும்.

வசந்தன்(Vasanthan) said...

சொல்ல மறந்தது,

இப்பிடியான அபூர்வமான விசயங்களையும் 'உங்கட' நாடு பற்றின வலைப்பதிவில எழுதலாமே?

கானா பிரபா said...

இணைப்புக்கு நன்றி ராசா, என்ன செய்யிறது ஏற்கனவே மூண்டு தனித்தளம் போதாக்குறைக்கு கங்காருத் தளமும் தொடக்கினால், வந்த கங்காரு எல்லாம் திசைக்கொன்றாய் ஓடீட்டினம்.

மழையக்கா புது வீட்டோட பிசியாம்.
செல்லி , ஒளவையாரின் பதிவுகளைப் போட்டே வீடு பேறு அடைஞ்சிட்டா போல, அவவையும் காணேல்லை.

மற்றாக்களும் அப்படியே ;-(

மீண்டும் பதிவுகளைத் தரமுயற்சிக்கின்றோம் அல்லது கின்றேன்

Kanags said...

//மற்றாக்களும் அப்படியே ;-(//
உப்பிடி ஒண்டு இருக்கிறத நினைப்பூட்டிய மறவனுக்கு நன்றி:-(