Friday, 9 February 2007

என்னத்தைப் பார்க்கலாம்?

என்னடா என்டு பாக்கிறீங்களா? பதிவின் தலைப்புத்தான் எனக்கு முதல் முதல் கிடைச்ச பதில். அப்ப கேள்வி? "ஒஸ்ரேலியால பார்க்க என்ன கிடக்கு?"

இந்த மூண்டையும் (+விக்ஸ்/நொக்ஸ்/யூகலிப்ரஸ் மரம்) பார்க்கிறதுக்கு மினக்டோணுமோ என்டு யோசிக்கத் தலைப்படுற ஆட்களுக்காக இதைத் தொடங்கிறம். நிறைய நாட்களாய் மனதிலிருந்த எண்ணம். சரி, இனி ஒவ்வொரு இடங்கள்/ நிகழ்வுகளில சந்திக்கலாம்.

8 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

ரொம்ப ரொம்ப நல்ல விதயம்!

வாழ்த்துகள் மக்களே!


என்னுடைய எதிர்பார்ப்புகளைச் சொல்லிவிடுகிறேன்.

1. ஆஸ்திரேலிய வரலாறு - பழங்குடி மக்கள் தொடங்கி, இடையில் வெள்ளையர் குடியேறியது கடைசியாக உலகெங்குமிருந்து மக்கள் குடியேறுவது வரை. சுருக்கமாகச் சொன்னா history, anthropology, sociology என்று எல்லாம் கலந்த கலவை

2.அரசியல் - ஆஸ்திரேலிய அரசியலமைப்பு, மாகாணங்கள், உள்ளாட்சி முறைகள். ஆஸ்திரேலியாவின் சட்டங்கள். நிலவரங்கள். சுருக்கமாகச் சொன்னா politics and current affairsஎன்று எல்லாம் கலந்த கலவை.

3. ஆஸ்திரேலிய எழுத்தாளர்கள், கலைஞர்கள், சினிமா, நாடகம், இசை. இத்துறைகளில் ஈடுபடும் நம்மவர்

4. சுற்றுலா தளங்கள். ஆஸ்திரேலியாவுக்குப் போகலாமே என்று நினைப்பவர்கள் உங்களுடைய இந்தக் கூட்டு வலைப்பதிவை நினைக்கணும். அந்தளவுக்கு விவரங்கள் இருக்கவேண்டும். முடிந்தால் புகைப்படங்களோடு.

இப்போதைக்கு இவ்வளவுதான்.

வலைப்பதிவுகளில் எழுதும் பிற ஆஸ்திரேலியா வாழ் தமிழர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள் - அவர்கள் விரும்பினால். இல்லையென்றால் guest-post வாங்கி இடுங்கள்.

நல்லதொரு முயற்சிக்கு வாழ்த்துகள் சிறிதரன், கானா.பிரபா, கார்த்திக்வேலு(இiங்கயாவது உங்கள அடிக்கடி பார்க்கமுடியுமா? ;) ), கஸ்தூரிப்பெண் & ஷ்ரேயா.

வரவேற்புடன்,
மதி

சினேகிதி said...

நல்ல விசயம் எல்லாம் செய்யுறீங்கள். ஸ்ரேயா மாம் ன்ர தரிப்புகளையே இன்னும் வாசிக்கேல்ல. தகவல் தாற மாதிரி எழுதாம வித்தியாசமா எழுதுங்கோ.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

வரவேற்புக்கு நன்றி மதி & சினேகிதி. கனநாளா மனதில இருந்த விதயம்.

மதி குறிப்பிட்டதில ரெண்டாவதை நான் நினைக்கவேயில்ல. மற்ற மூண்டையும் பற்றித்தான் எழுத என்டு யோசிச்சன். யோசனைக்கு நன்றி :O)

விட்டு விட்டு எழுதாமத் தொடர்ந்து எழுதோணும் இந்த வலைப்பதிவுக்காரர் என்டு விருப்பம். கூட்டணிக்குக் கேட்டுதோ? :O))

சயந்தன் said...

தென்துருவ வலைப் பதிவர் சங்க தலைவராம் வசந்தன் அண்ணாவின் பங்களிப்பு இன்றி வரும் இந்த வலைப்பதிவை தொடர்ந்தும் புறக்கணிக்கும் போராட்டம் ஒன்றை நடத்த முன்வரும் படி அனைத்து உலக வலைப்பதிவர்களையும் அழைக்கின்றேன்
சயந்தன்
தலைவர்
ஐரோப்பிய வலைப்பதிவர் பேரவை

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

சயந்தன் - அனுப்பின அழைப்புக்கு முன்னாள் தலைவர் பதில் சொல்லேல. இனி, அவர் புறக்கணிக்கிறார் என்டு நீரும் புறக்கணிக்கப் போறீரோ? :O)

அதுசரி புதுப் பதவியை எப்ப இருந்து உம்மடபாட்டுக்கே எடுத்துக் கொண்டீர்?

கானா பிரபா said...

//சயந்தன் said...
தென்துருவ வலைப் பதிவர் சங்க தலைவராம் வசந்தன் அண்ணாவின் பங்களிப்பு இன்றி வரும் இந்த வலைப்பதிவை தொடர்ந்தும் புறக்கணிக்கும் போராட்டம் ஒன்றை நடத்த முன்வரும் படி அனைத்து உலக வலைப்பதிவர்களையும் அழைக்கின்றேன்//

(தேவர் மகன் பட கமல் கிளைமாக்சில் சொல்வது போல)
கத்தி அருவாவை வீசிட்டு போய் படீங்கப்பா, நம்ம அடுத்த தலைமுறை ஆவது நல்லா இருக்கட்டும்

சயந்தன் said...

தொடர்பாடல் சிக்கல்கள் காரணமாகவே நமது தலைவர் இணைக்கப் படவில்லையென்ற உண்மையறிந்து நான் அழைத்த புறக்கணிப்புப் போராட்டத்தை மீளப் பெறுகின்றேன். நமது அழைப்புக்கு ஆதரவு வழங்கிய ஆயிரக்கணக்கான உடன்பிறப்புக்களாம் ரத்தத்தின் ரத்தங்களுக்கு நன்றி.

சம்பந்தப் பட்டவர்கள் மிக விரைவாக தகுந்த நடவடிக்கை எடுத்து வசந்தனை இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
தலைவர்
EBO

கானா பிரபா said...

வன்னிக்கே ஒழுங்கான தொடர்பாடல் இருக்கு காணும். வெளிநாட்டில இருக்கிற உங்கட தலைவருக்கு தான் ஒழுங்கா மெயில் பார்க்க நேரமில்லை