ஜனவரி 26, 2010 அவுஸ்திரேலிய தினக் கொண்டாட்டங்கள்
இன்று ஜனவரி 26, அவுஸ்திரேலியர்களுக்கு பொதுவான ஒரு தினமாக அவுஸ்திரேலிய தினம் கொண்டாடப்படுகின்றது. இன்றைய நாள் இந்த நாட்டில் பிரித்தானியக் குடியேற்றவாசிகள் இங்கு குடியோறிய நாளை நினைவு கூர்ந்து வருடா வருடம் கொண்டாடப்படுகின்றது. பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு அதிகாலை முதல் பொழுது சாயும் வரை பிரார்த்தனைகள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இந்த நிகழ்வு கொண்டாடப்படுவது வழக்கக். இன்று காலை சிட்னியின் டார்லிங் ஹாபர் துறைமுகத்தை ஒட்டிய சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்வுகளைக் காணச் சென்றிருந்தேன். 99% மான வெள்ளையர்கள் நிறைக்க ஆங்காங்கே சீன, இந்திய முகங்கள் ஒன்றிரண்டு தென்பட்டன. மற்றவர்கள் பலருக்கு வேட்டைக்காரன், 3 Idiots, சன் டிவியின் தொடர் நாடகங்களை பார்ப்பதற்கான இன்னொரு விடுமுறை நாள் என்பது குறிப்பிடத்தக்கது. வந்த நாட்டின் நிகழ்வுகளில் ஒட்டாமல் வாழும் எம்மவர் நிலை என்று மாறுமோ.
3 comments:
நன்றி கானா பிரபா. அழகிய புகைப்படங்கள். நான் நேரில் பார்த்த பல இடங்கள், மனதிற்கு சந்தோசமாக இருக்கிறது.
photos super
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜான் பொஸ்கோ, புதுகைத் தென்றல்
Post a Comment