Monday, 19 February 2007

பிறிஸ்பேனில் உள்ள கோவாலா (koala) சரணாலயம்

கோவாலா என்ற மிருகம் அவுஸ்திரேலியாவில் மட்டுமே காணக் கூடிய ஒன்றாகும்.இது ஒரு பாலூட்டி மிருகமாகும். இது இந்த நாட்டின் ஒரு பிரபல்யமான அடையாளச் சின்னமாகும்.

கோவாலா என்பது பூர்வீகக் குடியினருடைய ஒருசொல் ஆகும். இதன் அர்த்தம் என்னவென்றால் "தண்ணீர் (தேவை) இல்லை" என்பதாகும். ஏனெனில், கோவாலாக்கள் தண்ணீ குடிப்பதில்லையாம்.இவற்றுக்குத் தேவையான நீரை யூக்கலிப்ரஸ் இலைகளிலிருந்தே பெறுகின்றனவாம். இவை அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரங்களில் மட்டுமே வசிக்கின்றன.

இதன் முரடான பாதங்களும் கால்களில் உள்ள கூரிய நகங்களும் மரங்களைப் பிடித்து ஏறுவதற்கு உதவுகின்றன. கோவாலா உடம்பில் சாம்பல் நிற வழுவழுப் பான உரோமங்களையும், அகன்ற காதுகளையும், பெரிய மூக்கையும் கொண்டிருக்கிறது.கோவாலாவைப் பற்றிய முழு விபரமும் அறிய இந்த வலைப் பக்கத்திற்குச் செல்லவும்.

உலகில் அழிந்துவரும் இனங்களில் இதுவும் என்றாகும். குடியிருப்புகளுக்காகவும், பயிர்ச்செய்கை,பண்ணைத்தொழில் போன்றவற்றுக்காகவும் கோஆலாவின் வசிக்கும் நிலங்கள் அழிக்கப் படுவதால் கோஆலாவின் தொகை குறைந்து வருகிறது.

கோவாலாவின் பிரதான உணவு யூக்கலிப்ரஸ்(eucalyptus) இலைகளாகும். இவை " கம் இலைகள்"(gum leaves) அழைக்கப்படுகிறது. இந்த மரங்களிலேயே அவை வசிக்கின்றன,மரத்தைவிட்டு இறங்கி நிலத்திற்கு வருவது எப்பவாவது அருமையாக தான் இருக்கும். கோஆலா இந்த இலைகளைத் தெரிவு செய்து தான் சாப்பிடுகிறது, எல்லா இலைகளையும் சாப்பிடுவதில்லை. அவுஸ்ரேலியாவிலுள்ள 600 வகையான யூக்கலிப்ரஸ் மரங்களில் 50 வகையான மரங்களின் இலைகளைத் தான் கோஆலாக்கள் சாப்பிடுகின்றன. இந்த இலைகளில் 50 சதவீதம் நீரும், 5 சதவீத மாச்சத்தும், சீனியும் உண்டாம். இந்த இலைகளால் கிடைக்கும் குறைந்த சக்தியை 19 மணித்தியாலம் நித்திரை கொள்வதன்மூலம் பயன்படுத்துகின்றன.இதனால் கோவாலாக்கள் போதையில் இருப்பவைபோலத் தோன்றும்.

உலகிலேயே முதலாவதும், பெரியதுமான கோஆலா சரணாலயம் பிறிஸ்பேனில் உள்ள "லோன் பைன் கோஆலா சரணாலயம்"(Lone Pine Koala Sanctuary ) ஆகும். இங்கு 130 வளர்ந்த கோவாலாக்களும், வருடாவருடம் வரும் குட்டிக் (joeys )கோஆலாக்களும் இருப்பதைக் காணலாம்.
தவிர, கோவாலாவைத் தூக்கி அணைக்கலாம், இலையை ஊட்டிவிடலாம். உலகெங்கும் இருந்துவரும் பெரும் புகழ்மிக்க மனிதர்கள் அவுஸ்திரேலியா வரும்போது இந்த சரணாலயத்திற்கு கிட்டத்தட்ட 75 வருடங்களாக வந்து சென்றிருக்கிறார்கள்.கடந்த வருடம் கடந்தகால ரஷ்ய பிரதம மந்திரி இந்தச் சரணாலயத்திற்கு வந்து சென்றார்.

அமெரிக்காவின் பி்ரபல பாடகி ஜனற் ஜக்சனும், காலஞ் சென்ற போப்பாண்டவரும் கோவாலாவைக் கட்டி அணைத்து வைத்திருப்பதை மேலுள்ள படங்களில் காணலாம்.

இந்தச் சரணாலயத்தில் ஓஸி(Aussie)யின் ஏனைய வனவிலங்குகளான கங்கரு,(kangkaroo) ஈமியூ,(Emu) (தீக் கோழி மாதிரி ஒரு பெரிய பறவை, எக்கின்னா(Echidna) (ஒரு வகை முள்ளுப் பன்றி), வொம்பற்(Wombat), பலவிதமான அவுஸ்ரேலியப் பறவைகள், பறக்கும் நரி,(Flying Fox) டிங்கோ(Dingo) எனும் காட்டு நாய் என்பவற்றுடன் மேலும் பல பிராணிகளைக் காணலாம்.
இந்தச் சரணாலயம் பிறிஸ்பேனின் சுற்றிலாப் பிரயாணிகளைக் கவரும் பிரதான இடமாகும். பிறிஸ்பேன் நகரத்திலிருந்து இவ்விடத்தை வந்து சேர 20 நிமிடம் எடுக்கும். கோல்ட் கோஸ்ற்( Gold Coast) ரிலிருந்து வர 50 நிமிடமாகும்.
நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கோவாலாவைக் அணைத்துத் தூக்குவது 1997 லிருந்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது குயின்ஸ்லாந்து மாநிலத்தில், அதுவும் விசேடமாக இந்த "லோன் பைன் கோஆலா சரணாலயத்தில்" அனுமதிக்கப்பட்டுள்ளது.
கோவாலாவைப் பார்க்க ஆசையாக இருக்கா? இன்னுமென்ன யோசிக்கிறீர்கள்.கிளம்பி வாருங்கள் பிறிஸ்பேனுக்கு.

வலைப் பக்க உதவி:

http://www.koala.net

http://www.koala.net/lonepine/koalahug.htm

http://www.koala.net/download/lonewal1.jpg -wallpapaer

11 comments:

Anonymous said...

செல்லி, விக்கியில அவுஸ்திரேலியா பக்கங்களை மேம்படுத்த ஆர்வலர்கள் தேவை. அந்தப் பக்கம் வந்தீங்கள் எண்டால் ஏற்கனவே அரைகுறையாய் உள்ள கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம். என்ன சொல்கிறீர்கள்?

தமிழில் கோவாலா என்று எழுதுவதே சரியெண்டு நினைக்கிறன்.

கார்திக்வேலு said...

//நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கோஆலாவைக் அணைத்துத் தூக்குவது 1997 லிருந்து தடை செய்யப்பட்டுள்ளது.//

அறிந்திராத தகவல் இது.
QLD பற்றி மிக விவரமான தகவல்களைத்
திரட்டியுள்ளீர்கள் நன்றி.

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

சொன்னதுதான் சொன்னீங்க.. koalaட 'சுகந்த'த்தைப் பற்றி மூச்சே விடேல்லையே! :O))

செல்லி said...

kanags

//செல்லி, விக்கியில அவுஸ்திரேலியா பக்கங்களை மேம்படுத்த ஆர்வலர்கள் தேவை. அந்தப் பக்கம் வந்தீங்கள் எண்டால் ஏற்கனவே அரைகுறையாய் உள்ள கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம். என்ன சொல்கிறீர்கள்?//
அதற்கென்ன வருகிறேன்.நான் செய்ய வேணும் எண்டு சொனீங்க எண்டா செய்யிறன்.
// தமிழில் கோவாலா என்று எழுதுவதே சரியெண்டு நினைக்கிறன். //
கோ+ஆ என்பது புணரும்போது கோவா என்றாகிறது.அதனால் கோவாலா சரி என்று எனக்கு ஏற்கனவே தோன்றியது. ஆனால் யாரும் அப்படி எழுதியதை நான் பார்க்காததால் "கோலா" வைவிட கோஆலா என எழுத முனைந்தேன்.
கோவாலா என்பதை பலரும் தற்போது ஏற்பார்கள் என எனக்குத் தெரிவதால் அப்படியே மாற்றிவிடுகிறேன்.
அவுஸ்திரேலியாவைப் பற்றி கூட்டாக நாம் எழுத முனைந்திருப்பதால் நம் எல்லாரும் ஒரே சொற்களையே உபயோகித்தால் வாசகருக்கு குழப்பத்தை ஏற்படுத்தாது என நான் நினைக்கிறேன்.
உ+ம் அவுஸ்திரேலியா = ஒஸ்ரேலியா என்பதில் எதை எல்லாரும எழுதுதலாம்.

நன்றி

செல்லி said...

'மழை' ஷ்ரேயா

// சொன்னதுதான் சொன்னீங்க.. koalaட 'சுகந்த'த்தைப் பற்றி மூச்சே விடேல்லையே! //
மூச்சே விடேல்லை விட்டா திரும்ப மூச்செடுக்கேக்க சுகந்தத்தை பொறுக்கேலாதல்லோ! அதனாலென்ன, மாட்டுச் சாணி மாதிரி எண்டு நினைச்சாப் போச்சு.

தூக்கி அணைக்க முதல் கோவாலாவை நல்லா குளிப்பாட்டி, வாசனைத் திரவியம் போட்டுத் தான் தருவினம். என்ன, ஒரு போட்டோ எடுக்குமட்டும் தானே தூக்கப் போறீங்க.
நன்றி

செல்லி said...

வணக்கம் கார்திக்வேலு

////நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கோஆலாவைக் அணைத்துத் தூக்குவது 1997 லிருந்து தடை செய்யப்பட்டுள்ளது.//
பலருக்கும் இது ப்து விடயமாகத் தான் உள்ளது.
வருகைக்கு நன்றி

கஸ்தூரிப்பெண் said...

அப்ப இனிமே, தூங்குமூஞ்சி, கும்பகர்ணன் என்று சொல்லாம, கோவாலா-ன்னு சொல்லலாமா?

ஹாங்காங், சீனா, பிலிபைன்ஸ்-ல, ஆஸ்திரேலியாக்காரங்கள GOALA அப்படின்னு சொல்றங்க. அது ஏன்னு தெரியல!!!!

செல்லி said...

கஸ்தூரிப்பெண்

//கோவாலாக்கள் போதையில் இருப்பவைபோலத் தோன்றும்.//

//அப்ப இனிமே, தூங்குமூஞ்சி, கும்பகர்ணன் என்று சொல்லாம, கோவாலா-ன்னு சொல்லலாமா?//

மப்படிச்சிட்டு கன நேரமாய்த் தூங்கிறவையைத் தான் கோவாலா எண்டு சொன்னாப் பொருந்தும் எண்டு நான் நினைக்கிறன்.

//ஹாங்காங், சீனா, பிலிபைன்ஸ்-ல, ஆஸ்திரேலியாக்காரங்கள GOALA அப்படின்னு சொல்றங்க. அது ஏன்னு தெரியல!!!! //
மப்படிக்கிறதை வாழ்க்கையில முக்கியமாய் நினைகிறதாலயாயிருக்கும். உதாரணத்துக்குப் பாருங்கோவன்:
VB - Victoria bitter
XXXX - four
இதுகள் எல்லாம் அந்த மாநில அடையாளச் சின்னங்கள் அல்லே! சும்மா ஒரு ஊகம் தான்.

இதை ஆருக்குஞ் சொல்லிப் போடாதேங்கோ, பிறகு நான் சரி...

Anonymous said...

கோவாலா
ஏன் சார்
எங்கை போறே
சந்தைக்குப் போறேன்
என்ன வாங்க கோவாலா வாங்க
ஓடிப் போனா
ஏறிப் போவேன் எங்கை ஏற
கம்(gum) மரதில
சிமா பாட்டுமாரிப் பாடலாம் போல கிடக்கு.

ரவி

கானா பிரபா said...

தொடர்ந்தும் நல்ல பதிவுகளைத் தரும் கங்காரு செல்லிக்கு சக கங்காருவின் வாழ்த்துக்கள்

செல்லி said...

பிரபா

//தொடர்ந்தும் நல்ல பதிவுகளைத் தரும் கங்காரு செல்லிக்கு சக கங்காருவின் வாழ்த்துக்கள்//
பாராட்டுக்கும் ஆதரவுக்கும் மிக நன்றி