பிரிஸ்பேனில் இன்னிசை சொற்பொழிவு
இன்று பிரிஸ்பேனில் 'கவியரசர் ஒரு புவியரசர்' என்ற தலைப்பில் இன்னிசை சொற்பொழிவு நடந்தது. தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த திரு. அரங்க நெடுமாறன் இச்சொற்பொழிவை நடத்தினார்.
பிரிஸ்பேன், கார்டன் சிட்டி வணிக வளாகத்திலுள்ள நூலக அரங்கத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு சுமார் 30 பேர் வந்திருந்தனர். பிரிஸ்பேனுக்கு இது பெரிய கூட்டம்தான்.
தமிழகத்திலுள்ள மேடைப் பேச்சுக்களை நினைவு படுத்தும்படி இருந்தது. பட்டிமன்ற பானி நகைச்சுவைகளுடன் இந்துமதம் சோதிடம் என்று தலைப்பில் பலதகவல்களை தந்தார்.
கவிஞர் கண்ணதாசனின் பாடல்களை அவ்வப்போது பாடி மேற்கோள்கள் காட்டியது சிறப்பாக இருந்தது. சொற்பொழிவை குறித்த நேரத்துக்குள் முடித்தது பாராட்டவேண்டிய ஒன்று.
கடைசியில் கேள்வி பதில் பகுதியில் சுமார் 12 வயதுடைய சிறுமி - முருகன் 2 மனைவிகள் வைத்திருப்பதால் அவர் நல்லவரா கெட்டவரா என்று பொருள்படும்படி ஒரு கேள்வி கேட்டு, சொற்பொழிவாற்றியவரை திணரடித்தது!
(பிரிஸ்பேன் நகருக்கு அடுத்துவர இருக்கும் தமிழ் அறிஞர்களே, இளைய தலைமுறையிடமிருந்து இது போன்ற கேள்விகளை எதிர்கொள்ள தயாராக வாருங்கள் ;) )
6 comments:
பகிர்வுக்கு நன்றி ;)
அட...
////கடைசியில் கேள்வி பதில் பகுதியில் சுமார் 12 வயதுடைய சிறுமி - முருகன் 2 மனைவிகள் வைத்திருப்பதால் அவர் நல்லவரா கெட்டவரா என்று பொருள்படும்படி ஒரு கேள்வி கேட்டு, சொற்பொழிவாற்றியவரை திணரடித்தது!
////////
பெரியவர்களை விடக் குழந்தைகள்தான் இப்பொழுதெல்லாம் அதிக அறிவுடன் திகழ்கிறார்கள்
இந்தக் காலத்து குழந்தைகள் வித்தியாசமாகத்தான் சிந்திக்கிறார்கள்.
வணக்கம்!
பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
எங்கும் அளிக்கட்டும் ஈந்து!
Post a Comment