சிலைகளின் கதை
நியு சவுத் வேல்ஸ் கலைக்கூடத்திற்கு (Art Gallery of NSW) முன்னால் இரண்டு நீலப் பெட்டிகள். இதற்கு முன் போனபோது அங்கு அவை இருக்கவில்லை. என்ன இருக்கிறதெனப் பார்க்க ஒவ்வொர் பெட்டிக்குள்ளும் போனேன்..
முதலாம் பெட்டிக்குள் ஒரு குதிரை அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தது!! அதன் மேலிருப்பவர் கண்டு கொள்வதாயில்லை.. ஒருவேளை குதிரையின் செயலைக் கண்டு சிலையாகிப் போனதாலயோ தெரியவில்லை :O).
கட்டிலில் ஏறும் குதிரை. அதன் கிட்டே போய்ப் பார்த்தேன்... சொல்வழி கேட்கிற குதிரை மாதிரித் தெரியவில்லை.
அடுத்த பெட்டிக்குள் போனேன்.. ஒரு வரவேற்பறை அமைக்கப்பட்டிருந்தது. நடுவில் ஒரு வட்ட மேசை; அதன் மேல் ஒரு கம்பை உயர்த்திப்பிடித்த மனிதனின் மார்பளவுச் சிலை. பக்கத்திலேயே ஒரு அலமாரி. அலமாரிக்குள் என்னவென்கிறீர்கள்? குதிரையொன்றின் தலை!! கட்டிலைக் கலைத்துப் போட்டதற்குத் தண்டனையோ!? பாருங்களேன்:என்ன இது!! எப்படிச் சாத்தியம்?
இதெல்லாம் ஜப்பானியக் கலைஞர் டாட்சு நிஷி (Tatzu Nishi) என்பவரது மனவண்ணம். ஏலவே உள்ள சிலைகளைச் சுற்றிய சூழலை மாற்றி அவற்றை புதுக் கோணத்தில் காட்டுவது இவர் திறன். கலைக்கூடத்தின் முன் உள்ள இரண்டு சிலைகளையும் 'மாற்றி அமைத்தது'ம் இவரது ஒரு ப்ரொஜெக்ட். சிலைகள் அப்படியே இருக்க, அவற்றைச் சுற்றி ஒரு வரவேற்பறையும், குதிரைத் தலையைச் சுற்றி ஒரு அலமாரியையும் மட்டுமல்லாமல், இன்னோரு குதிரை ஏற வாகாக ஒரு கட்டிலையும் கூட அமைத்திருக்கிறார்கள். கல்டோர் கலைத்திட்டத்திற்காக டாட்சு நிஷி செய்திருக்கிறார்.
பரிச்சயமான ஆனால் தலைக்கு மேலே உயர்ந்து போவதில் மிக அருகில் பார்க்கமுடியாத சிலைகள் இவை இரண்டும். சிலைகளின் வழ்மையான தோற்றம் கீழே. சிலைகளைப் பற்றி இங்கே காணலாம்.

சிட்னியில் இருந்தால் அல்லது சிட்னிக்கு வந்தால் ஒரு முறை கிட்டப் போய்க் குதிரைகளைப் பாருங்களேன்..

No comments:
Post a Comment