Thursday 1 November 2007

தங்கத்தாத்தா சோமசுந்தரப் புலவரின் "செந்தமிழ் அமுதம்" நூல் வெளியீட்டு விழா

ஈழத்தின் நவாலியூர் தங்கத்தாத்தா சோமசுந்தரப் புலவரின் செந்தமிழ் அமுதம் நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஹோம்புஷ் ஆண்கள் உயர்தரப் பாடசாலை மண்டபத்தில் இடம்பெறுகின்றது.

ஆயிரமாயிரம் செந்தமிழ்ப்பாக்களை இயற்றிய தங்கத்தாத்தா சோமசுந்தரப் புலவரின் அனைத்து நூல்களையும் மறு வெளியீடு செய்யும் முயற்சியின் முதற்கட்டமாக இந்த "செந்தமிழ் அமுதம்" நூல் வெளியிடப்படுகின்றது. நூல் வெளியீட்டு விழா நடந்த பின் இது குறித்த மேலதிக விபரங்களைப் பகிர்கின்றேன்.

6 comments:

தாசன் said...

கவி பாடிய தாத்தாவின் நூல் வெளிவருவதையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

Kanags said...

நன்றி பிரபா. முடிந்தால் வெளியீட்டு விழாவில் சந்திப்போம்.

செல்லி said...

பிரபா
தகவலுக்கு நன்றி.

சோமசுந்தரப் புலவரின் பேரன் இளங்கொ நியூசிலாந்தில் வசிக்கிறார் அவரை எனக்குத் தெரியும்.

ம்......குடுத்து வைச்சனீங்களப்பா!

நல்லாப் பங்குபற்றி எங்களையும் நினைச்சு மகிழுங்கோ.

கானா பிரபா said...

தாசன், சிறீ அண்ணா, செல்லி

தங்கள் வருகைக்கு நன்றி, விழாவுக்குப் போக வேண்டும் என்று கங்கணம் கட்டியிருக்கின்றேன், ஏதாவது தடங்கல் வராமல் இருக்க வேண்டும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
விழா சிறப்புறட்டும்.
இப்புத்தகத்தைத் தபால் மூலம்
பெறும் வழி குறிப்பிட்டால் நன்று!

கானா பிரபா said...

வணக்கம் யோகன் அண்ணா

விழா அமைப்பாளர்களிடம் தொடர்பு கொண்டு அறியத்தருகின்றேன்.