Tuesday 5 June 2007

சிட்னி ஒபரா ஹவுஸ்



சிட்னி ஒபரா ஹவுசின் அருமை பெருமைகளை இன்றைய பதிவில் பார்ப்போம். Jørn Utzon, என்ற டென்மார்க் கட்டடக் கலைஞரால் 1957 ஆம் ஆண்டு கட்டட மாதிரி வரைபடம் தயாரிக்கப்பட்டு மார்ச் மாதம் 1959 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பித்த இந்த சிட்னி ஒபரா ஹவுஸ் 20 ஒக்டோபர் 1973 ஆம் ஆண்டு இராணி 2 ஆம் எலிசபெத்தால் திறந்து வைக்கப்பட்டது. உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள் ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 3000 ஆயிரம் கச்சேரிகளை வழங்கி 2 மில்லியன் இரசிகர்களின் இசை உறைவிடமாகத் திகழ்கின்றது.

அவுஸ்திரேலியாவை அடையாளப்படுத்தும் சின்னமாகவும் இது திகழ்வது மேலதிக சிறப்பு. இங்கு வருவோர் ஒபரா ஹவுஸின் வெளியில் நின்றாவாது புகைப்படம் எடுத்துச் செல்லாவிட்டால் விமோசனம் பெறமாட்டார்கள். சிட்னி நகரத்தின் மையமாக இது விளங்குகின்றது.

ஒவ்வொரு நாளும் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை, அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை இந்த சுற்றுலா ஸ்தலத்தைச் சுற்றிப்பார்க்க சுற்றுலா வழிகாட்டல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆகக்கூடியது 1 மணி நேரம் பிடிக்கும் இந்த ஒபரா ஹவுஸ் வலத்திற்கான கட்டண விபரம், பெரியவர்கள் 26 வெள்ளிகள் (இணைய மூலம் 23 வெள்ளி), சிறுவர் 16 டொலர்கள், அவுஸ்திரேலிய வாசிகளில் சலுகை பெறும் அன்பர்கள் 18 வெள்ளிகள்.
தவிர, Performance Packages எனப்படும் ஒரு தெரிவும் உண்டு, இதில் ஒபரா ஹவுஸ் சுற்றுலாவுடன் சிட்னியின் உயர்தர உணவகத்தின் இரவு விருந்து அல்லது சயங்கால ஒபரா ஹவுசை அண்டிய பகுதியில் நதியில் படகு உலா. மேலதிக விபரங்களைப் பெற அழைக்க வேண்டிய தொலைபேசி +61 2 9250 7250

சிட்னி ஒபரா ஹவுஸ் பற்றிய மேலதிக விபரங்களை அறிய
http://www.sydneyoperahouse.com/