ஹாபர் பாலம் ஏறுதல் (Climbing Harbour Bridge)
கடந்த ஞாயிற்றுக் கிழமை 18.3.2007 அன்று சிட்னி ஹாபர் பாலத்தின் 75 வது ஆண்டு நினைவு தினக் கொண்டாட்டம் கோலகலமாக இடம்பெற்றது.கிட்டத்தட்ட 200 000 மக்கள் பங்குபற்றினர். 52 000 தொன் எடையுள்ள இரும்பினால்க் கட்டப்பட்ட இந்தப் பாலத்தில் எட்டு வாகனச் சாலைகளில்தினசரி 200 000 கார்(car) கள் செல்கின்றனவாம். (1)இந்தக் கொண்டாடத்திற்காக 15 மணித்தியாலம் போக்குவரத்து யாவும் தற்கலிகமாக நிறுத்தப்பட்டது.
காலை 9.20 க்கு அந்த மாநில ஆளுனரான மேன்மைதங்கிய பேராசிரியர் மேரி பஷிர் (Professor Marie Bashir) றிபனை (ribbon)வெட்டிக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
அதன் பின் பெருந்திரளான மக்களின் ஊர்வலம் தொடங்கியாதாகக் கூறப்படுகிறது.
பாலம் ஏறுதல்(BridgeClimb )
சிட்னி வருவோர் ஒவ்வொருவரும் "கட்டாயமாக செய்யவேண்டியது"களில் ஹாபர் பாலம் ஏறுவது ஒன்று எனப் பலரும் சொல்கிறார்கள்.இந்தப் பாலம் ஏறுதல் 1998 லிருந்து இடப் பெற்று வருகிறது.(3)கிட்டத்தட்ட 1.8 மில்லியன் மக்கள் ஏறி இருக்கிறார்கள் (இவர்களில் கானா பிரபாவும் ஒருத்தர்) இவர்களில் 25 சதவீதமானோன் உள்நாட்டவராவர். பாலம் ஏறுதலில் பிவருவனவற்றை விசேடமாகக் குறிப்பிடலாம்:
பிறிஜ் கிளைம்ப் (Bridgeclimb))பாலத்தின் மேலே ஏறுதல்
பாலத்தின் கோபுரங்களில் (Pylon) ஏறுதல்
கண்டு பிடிப்புக்கு (Discovery Climb) ஏறுதல்
பாலத்தின் மேலே ஏறுவது, பகல், அதிகாலை(3am)/மாலை,இரவு போன்ற பொழுதுகளில், 12 பேர் கொண்ட குழுவாக ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கும் ஒருமுறை இடம்பெறுகிறது.பாலத்தின் மேல் ஏறுவோர் முக்கியமாகச் செய்யப்பட வேண்டியவை:
* ப்றெதலைசர் (breathalyser) ரெஸ்ற் (test) செய்ய வேண்டும்,
* அங்கு கொடுக்கப்படும் விசேட அங்கி(suit)யும்,அரைநாடாவும் (Belt) அணிய வேண்டும்,
* புகைப்படக் கருவிகள், மணிக்கூடு, ஆடுகிற தூக்கண தோடுகள்/காதணிகள் ஏறுதற்கு முன் கீழே விட்டுச் செல்லவேண்டும்.
பாலத்தின் உச்சியை அடைந்ததும் வானத்தைத் தொடுவது போன்ற ஒரு உல்லாச உணர்வு ஏற்படுமாம்; அதுவும் அதிகாலை மூன்றரை மணிக்கு ஏறி பாலத்தின் உச்சியிலிருந்து சூரியன் உதிக்கும் காட்சி கொள்ளை அழகாயிருக்குமாம்; என பார்த்தவர்கள் சொல்லுகிறார்கள்.(2)இருப்பினும் மிகவும் செலவு அதிகம்தானாம்.அதாவது ஒரு பெரியவருக்கு $165 டொலர், அதுவும் சனி, ஞாயிறு, வேறு விசேட தினங்களில் இக் கட்டணம் இன்னும் அதிகமாம் எனவும் சொல்லப்படுகிறது.
கோபுரத்தில் ஏறுதல் (Pylon lookout)
பாலத்தின் இருபுறம்முள்ள கோபுரத்தில் நின்று சிட்னி நகரத்தை சுற்றிலும் பார்க்க மிகவும் அழகாக இருக்குமாம், அந்தக் கோபுரங்களின் உள்ளே பொருட்காட்சியும் காணலாமாம் என்று போனவர்கள் சொல்கிறார்கள். (3)
கண்டுபிடிப்புக்கு ஏறுதல்(Discoveryclimb)
இது ஹாபர் பாலத்தில் உள்ள வாகனச் சாலைக்கு கீழே உள்ள இரும்பு வலைக்குள் படிகளாலும், கான்ற்றீஸ்(gantries) ஊடாகவும் புகுந்து, நீலவானந் தெரியும் வரை நடந்து செல்வதைக் குறிக்கும்.(2)
ஹாபர் பிற்ஜ்சின் படங்களைக் காண
உசாத்துணை
1. ourbridge.com
2. The Weekend Australian - News aper
3. cultureandrecreation.gov.au/articles/harbourbridge/
22 comments:
நானும் நேற்றுப் போய் நடுவீதியால் நடந்தேன். கொஞ்சம் நேரத்தட்டுப்பாடு.. விரைவில் பதிவிடுகிறேன்.
Darling harbour மற்றும் Rocks பகுதிகளில் இசை நிகழ்ச்சிகளும், வெவ்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளும் [Angelina Ballerina உட்பட :O)] நடந்தன.
என்னது $165?ஆ!!
சிங்கையில் இருந்து ஜகார்த்தாவுக்கே விமானத்தில் சிங்கப்பூர் வெள்ளி 140 தான்.
அனியாயமாக இருக்குங்க.
செல்லி
பிறிஸ்பேனில் இருந்து சிட்னி விடயத்தை நன்றாகத் தொகுத்திருக்கின்றீர்கள், மழையும் தன்னுடைய அனுபவத்தை இடுவார் என்று நம்புகிறேன்.
ஷ்ரேயா
என்ன இருந்தாலும், நேரில் பாத்த அனுபவம் மாதிரி வருமா? நீங்க பாத்த எல்லாத்தையும் பற்றி அடுத்த பதிவில் போடுங்க.காத்திருக்கிறோம்.
பிரபா
//தகுந்த பயிற்சிகளுடன் பாலத்தின் மேற்பரப்பில் உலாவி வரலாம், கட்டணம் உண்டு, நானும் போயிருக்கிறேன் (அது பெரிய கதை)இந்த பாலமேறுதல் பற்றி இன்னொரு பதிவில் நானோ அல்லது இன்னொரு கங்காருவோ சொல்லுவோம்.//
நீங்க இப்பிடி எழுதினதை நிரூபிக்கவே இதை எழுதினேன்.மழையும் எழுதப் போறாங்க என்று தெரிஞ்சிருந்தா போடாமல் விட்டிருக்கலாம் என இப்போ நினைக்கிறேன்
இருவருக்கும் நன்றி.
வாங்க குமார்
165 டொலர் ப்பூ..இதென்ன பெரிய காசா? உலகப் புகழ் பெற்ற பாலத்தின் மேல ஏறுறதுக்கு இன்னும் கூடக் குடுக்கலாம்.
//ஜகார்த்தாவுக்கே விமானத்தில் சிங்கப்பூர் வெள்ளி 140 தான்.//
அங்க என்னத்தைப் பெரீசாப் பாக்கப் போறீங்க?
பாலத்தின்மேல ஏறிக் கிடைக்கிற அனுபவமே ஒரு அற்புதமானது.இதுக்கு காசுப் பெறுமதியே போட முடியாது!
வருகைக்கு நன்றி.
இதெல்லாம் ஓகே...
ஹார்பர் பாலத்துக்குள் இருக்கும் அரசியல் பத்தி யார்னா எழுதுவீங்களா இல்ல பொட்"டீ"கடையிலேயே நா பேசட்டுமா?
யாராவது நேத்து ஏ பி சி பாத்தீங்களா?
பொட்"டீ"க்கடை
New South Wales Premier Morris Iemma said
"Let's never forget that it was built at a heavy cost, in lives lost and shattered families - 16 Australian workers lost their lives building the bridge,"
Opposition Leader Peter Debnam said
"He's in Government and incumbent governments use their power ruthlessly - that's fine I suppose, that's the way he plays the game - I suggested to him that it be a politician-free day - well he obviously didn't agree,"
இதைத்தான் ஆளுங்கட்சியும் , எதிர்க்கட்சியும் பேசினாங்க.
இந்த அரசியலைப் பற்றி நீங்க ஒரு பதிவு போடலாமே:-)))
வருகைக்கு நன்றி.
படங்களும் பதிவும் நல்லா இருக்கு செல்லி.
அங்கே வந்தால் பார்க்கிறேன்.:-)
வாங்க வல்லி
அவுஸ்திரேலியாவுக்கும் ஒரு விடுமுறைக்கு வரலாம். உங்க வரவுக்காக எங்க வீட்டு வாசற் கதவு எப்பவும் திறந்திருக்கும்:-))))
உங்க வருகைக்கும், ஆதரவுக்கும் மிக நன்றி
//அதாவது ஒரு பெரியவருக்கு $165 டொலர், அதுவும் சனி, ஞாயிறு, வேறு விசேட தினங்களில் இக் கட்டணம் இன்னும் அதிகமாம் எனவும் சொல்லப்படுகிறது.//
விலையைப் பார்த்தாலே மயக்கம் வருவது போல இருக்கின்றது.No bridge climbing for me.
இன்னும் கதை இருக்கின்றதா?எல்லாத்தையும் போடுங்க..
//எங்க வீட்டு வாசற் கதவு எப்பவும் திறந்திருக்கும்:-))))//
இரவில பூட்டிட்டு படுங்கோ.. பிறகு திருடர் வந்துவிடுவினம். ஆகக் குறைந்தது பாம்பெண்டாலும் வரும்.
வாங்க துர்க்கா
சிங்கையில் வாழ்வோர் நல்ல சிக்கனகாரர் போலத் தெரிகிறது.
மாணவியாக இருக்கும்போது இப்பிடி எல்லாம் செலவு செய்ய முடியாதுதான்.
உங்க வருகக்கு நன்றி.
//மழையும் எழுதப் போறாங்க என்று தெரிஞ்சிருந்தா போடாமல் விட்டிருக்கலாம் என இப்போ நினைக்கிறேன்//
அப்பிடியெல்லாம் யோசிக்காதீங்க செல்லி. என்ட வலைப்பதிவு காயுது.. அப்ப அங்க போட்டிட்டு இங்க தொடுக்கிறன் :O)
//ஹார்பர் பாலத்துக்குள் இருக்கும் அரசியல் பத்தி யார்னா எழுதுவீங்களா இல்ல பொட்"டீ"கடையிலேயே நா பேசட்டுமா?//
பொட்'டீ'க்கடையாரே.. அரசியலுக்கெல்லாம் நீங்கதான். இங்கேயே எழுதுங்களேன். (அதோட சேர்த்து இந்த தண்ணிப்பிரச்சனை, (அதான் உப்புநீக்கல்), புதருக்கு வால் பிடிக்கிறது, ஒன்றைச் சொல்லிட்டு இல்லைங்கிறது.. இதெல்லாத்தையும் எடுத்து விடுங்க!! (ரோவ் இந்த வருஷம் என்னத்தைச் செய்து ஜோன் ஹவார்டை கலாய்க்கப் போறாரோ தெரியல்ல.. ;O)
//மாணவியாக இருக்கும்போது இப்பிடி எல்லாம் செலவு செய்ய முடியாதுதான்.//
அதுக்காக மனைவி ஆனாப் பிறகு கணவரின்ர கழுத்தைப் பிடிக்கச் சொல்லுறியளோ..
வாங்க கொழுவி
//மாணவியாக இருக்கும்போது இப்பிடி எல்லாம் செலவு செய்ய முடியாதுதான்.அதுக்காக மனைவி ஆனாப் பிறகு கணவரின்ர கழுத்தைப் பிடிக்கச் சொல்லுறியளோ.//
ச்சாசா..பிறகு அந்தப் பிள்ளையும் உழைக்கும் தானே!
எங்கட அப்பா அம்மா காலத்திலதான் அப்பிடி. இப்ப நாங்களும் உழைக்கிறமல்லே.
உங்க வருகைக்கு நன்றி
//என்ட வலைப்பதிவு காயுது.. அப்ப அங்க போட்டிட்டு இங்க தொடுக்கிறன் :O)//
அப்பிடிப் போடலாமோ?
காகமும் புட்டும் அப்பிடி நான் போட்டனான். ஆனால் இனிமேல் அப்பிடிப் போடுறாக உத்தேசமில்லை.
//சிங்கையில் வாழ்வோர் நல்ல சிக்கனகாரர் போலத் தெரிகிறது.
மாணவியாக இருக்கும்போது இப்பிடி எல்லாம் செலவு செய்ய முடியாதுதான்.//
நான் மலேசியாவில் இருந்தாலும் இதை விட கணக்குப் பார்ப்பேன்!சிங்கப்பூர் வந்ததும் கஞ்சனாகி விட்டேன் :))
வேலைக்குப் போனவுடனேதான் சுற்றுலா பற்றி எல்லாம் யோசிக்க முடியும் போல:(
////மாணவியாக இருக்கும்போது இப்பிடி எல்லாம் செலவு செய்ய முடியாதுதான்.அதுக்காக மனைவி ஆனாப் பிறகு கணவரின்ர கழுத்தைப் பிடிக்கச் சொல்லுறியளோ.//
என்னை வைச்சு இங்கே என்ன நடக்குது?நான் கழுத்தை எல்லாம் பிடிக்க மாட்டேன்.கல்யாணத்திற்கு பிறகு அவர் பணம் என் பணம் என்று பிரித்து எல்லாம் பார்க்காத நல்ல மனைவியாக இருப்பேன்.எல்லாம் என் பணம்தான்.நாங்களும் வேலைக்கு போவோம்.அப்புறம் என்ன பிரச்சனை?!ஹி ஹி
கொழுவி said...
//மாணவியாக இருக்கும்போது இப்பிடி எல்லாம் செலவு செய்ய முடியாதுதான்.//
அதுக்காக மனைவி ஆனாப் பிறகு கணவரின்ர கழுத்தைப் பிடிக்கச் சொல்லுறியளோ..
//கொழுவி என்பது வலையுலக நாரதர். நாரதர் கலகம் நன்மையில் முடியும். //
இப்படி என்னிடம் கானா பிரபா சொன்ன அந்த கொழுவி தாங்கள்தானா?
துர்கா
சிங்கப்பூர் போய்ச் சீமானாய் வந்தவர்கள் கதை உண்டு, நீங்கள் ஆண்டியாகீட்டீங்களா ;-)
நான் சொன்ன அதே கொழுவி இவர் தான்.
//துர்கா
சிங்கப்பூர் போய்ச் சீமானாய் வந்தவர்கள் கதை உண்டு, நீங்கள் ஆண்டியாகீட்டீங்களா ;-)
நான் சொன்ன அதே கொழுவி இவர் தான். //
வேலைச் செய்தால் சீமானாகலாம்.இப்பொழுது நான் செய்யும் வேலை சாப்பிட்டு தூங்கி படிப்பதுதான்.இதற்கு எல்லாம் சம்பளம் இல்லையே
அந்த கொழுவிதானா?அதான் கலகம் பண்ணி இருக்கார்.
Post a Comment