Wednesday, 14 February 2007

போரல் பையன்

கங்காரு நாட்டைப் பற்றி என்னடா எழுத ஆரம்பிக்கலாமுன்னு மண்டைய உடைச்சப்ப, சீத்தலை சாத்தனாரா ஆகுறதுக்கு முன்னாடி ஐடியா கொடுத்தாரு சீமந்தப் புத்திரன் (காசா, பணமா வாங்கிக்கலாமே!!!). கிரிக்கெட் ஜாம்பவானோட பிள்ளையார் சுழி போடலாமேன்னுத்தான்.




"டான் ப்ராட்மென்" அப்படின்னு நினைக்கும்போதே அடடா, இவர் கையால குட்டுப்பட மாட்டோமான்னு ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் ஏங்குவாங்க.

ஸர் டொனால்ட் ப்ராட்மென், பிரியமா "டான்" - வளர்ந்த ஊரான போரல்(Bowral) சிட்னியிலருந்து கான்பெரா போற வழியில உள்ள மிட்டகாங் என்ற ஊருலயிருந்து ஒரு 10 கி.மீ தொலையில இருக்கு. இங்கேதான் அவரோட வீடு, வீட்டுக்கிட்ட அவர் விளையாடிய மைதானம், அவர் நினைவா ஒரு சின்ன காட்சியகமுன்னு கிரிக்கெட் விசிறிகள் பார்க்கணும்னு நினைக்கிற சங்கதிகள் நிறைய இருக்கு. இந்த இடம் ஆஸ்திரேலியாவில பார்க்ககூடிய முதல் 100 இடங்கள்ல 81-வது இடத்துல இருக்கு.

ப்ராட்மென் ஒவல் - அவரு விளையாடிய மைதானம்:


கொஞ்சம் வெளியே வந்தால், பலகணியிலருந்து மைதானத்த பார்க்கலாம். லகான் சினிமாவும், அந்த கிரிக்கெட்டையும் பார்த்தவங்க, இந்த இடத்தை கொஞ்சம் கற்பனை பண்ணிக்கலாம். (ஒரு வேள இங்கதான் படப்பிடிப்பு நடந்ததோ, என்னவோ தெரியல!!!)


இரண்டாவது இன்னிங்க்ஸ்:

அவரு விளையாடிய மைதானத்துக்குகிட்ட இருக்கிற க்ளப்பை "இரண்டாவது இன்னிங்க்ஸ்"-கிற பேருல ஒரு சின்ன தாஜ்மஹாலாவே உருவாக்கி வைச்சு இருக்காங்க. ப்ராட்மேனோட சின்ன வயசு பள்ளி புகைப்படங்கள் (ஹ்ம் இந்த பையனா இப்படின்னு ஒரு பெருமூச்சு!!!), ஆரம்ப கால ஸ்கோர் புத்தகம் (அப்பல்லாம் match fixing இல்லப்பா), க்ளப் வரவு செலவு கணக்கு (அவர் கைப்பட எழுதுனது) இத்யாதிகள் கண்ணாடிக்கு பின்னே!!!


அவரோட பிரசித்தி பெற்ற "ப்ராட்மேன் பெஸ்ட்" கிரிக்கெட் குழு பட்டியல் ஒரு மூலையில பிரம்மாண்டமா இருக்கு.

ஒரு சின்ன சாதனைக்குகூட ஏகத்துக்கு பில்டப் கொடுத்து கடவுளாக்குற நாட்டிலருந்து வந்ததினாலேயோ என்னமோ, ப்ராட்மென் என்பவர் ஆறடி அஞ்சங்குலத்துல ஆஜானுபாகுவா இருப்பாருங்கிற ஒரு நினைப்பு.கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுன்னு சொல்றது எவ்வளவு உண்மையின்னு, இவர நேரில பார்க்கிற எல்லாருக்குமே புரியும். இருங்க, கற்பனை குதிரையையும், கால்குலேட்டரையும் வெளியே எடுக்கங்குள்ள சொல்லிடறேன்....

வெளியே மைதானத்துல பித்தளையில் செஞ்ச முழு உருவ சிலையில கம்பீரமா "டான்"

இதுதாங்க இவரோட ஒரு கிரிக்கெட் விசிறி ப்ரியமா எடுத்திக்கிட்ட படம்:




3 comments:

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

இந்த ஊருக்குள்ளே drive போகவும் நல்லாருக்கும் . குறிப்பா வசந்த (Sep-Nov) & இலையுதிர் (Mar-May)காலத்துலே. தெருவின் இருமருங்கும் மரங்களோடே அழகாயிருக்கும். தனியாட்களின் தோட்டங்களைக் கூடப் போய்ப் பார்க்கலாம்.

கஸ்தூரிப்பெண் said...

//இந்த ஊருக்குள்ளே drive போகவும் நல்லாருக்கும் . குறிப்பா வசந்த (Sep-Nov) & இலையுதிர் (Mar-May)காலத்துலே. தெருவின் இருமருங்கும் மரங்களோடே அழகாயிருக்கும். தனியாட்களின் தோட்டங்களைக் கூடப் போய்ப் பார்க்கலாம்.//
இப்படி ஆசை காட்டி அனுப்பி விட்டுட்டு, ஜம்முன்னு ஊருக்குள்ள உலாவலாம்

Anonymous said...

ம்ம் நிஜம் தான்..அழகான இடம்...