Tuesday, 27 February 2007

சிட்னியில் டிராகன் படகுப்போட்டி




அவுஸ்திரேலியா ஒரு பல்லின கலாச்சார நாடு என்பது இங்கிருக்கும் அரசியல்வாதியிலிருந்து நேற்று வந்த என்போன்ற குடியேற்றவாசி வரைக்கும் தூக்குகின்ற பாதுகாப்புக்கவசம். பல்லின மக்கள் இருந்தாலும் (வழக்கம் போல இந்த நாட்டிலும்) சீனர்கள் கீழ்த்தட்டு வர்க்கத்திலிருந்து மாடி வீட்டு ஏழைகள் வரை அதிகப்படியாகவே உள்ளனர். ஒரு நண்பர் என்னிடம் சொன்னார் , ஆரம்பத்தில் அவுஸ்திரேலியா வந்த போது ஏஜென்சிக்காரன் ஏமாத்தி சீனாவில இறக்கிவிட்டுட்டான் என்று குறைப்பட்டாராம்.
வேலைஸ்தலங்களில் அதிகப்படியான சீனமொழி பேசும் ஊழியர்களில் இருந்து பல்கலைக்கழக உயர்வகுப்புக்களில் அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்கள் வரை சீனக்கொடி தான். அந்த விசுவாசமோ என்னவோ அவுஸ்திரேலியாவின் பெருநகரமான சிட்னியில் சீனப்புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் வருடா வருடம் அமர்க்களமாக நடைபெறும். கடந்த சிலவாரங்களாகவே சீனத் திரைப்பட விழாக்கள், விதவிதமான சீன உணவுக் கண்காட்சிகள், சீனப்பெருஞ்சுவர் கட்டட மாதிரிக் கண்காட்சி, சீனப்பூங்கா உலா, சிட்னியில் உள்ள சீன மூதாதையர் பற்றிய விபரண விழா என்று விதவிதமான விழாக்கள் வாரா வாரம் நடைபெறுகின்றன. அதில் ஒரு அங்கமாக கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி டிராகன் படகோட்டப் போட்டி நடந்தது. நானும் கூட்டாளியும் போனோம். இது ஒரு இலவச நிகழ்வு ( நாங்கள் போனதற்கும் இலவசத்துக்கும் சம்பந்தமில்லை). காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நூற்றுக்குச் சமனான அணிகள் களமிறங்கிய இந்த டிராகன் படகுப் போட்டியைக் காணக் கண்கோடி வேண்டும். இந்த வருடம் சீன வருஷப்பிறப்பில் பன்றி (அல்லது பன்னி) வருஷமாம். அதற்கேற்றாற்போல விஷேட ஜோடனைகளுடன் சிட்னி டார்லிங் ஹாபர் என்ற அழகுமிகு துறை அலங்கரிக்கப்பட்டுக் கவர்ச்சிகரமாக இருந்தது. இது சீனப்பண்டிகை குறித்த நிகழ்வு என்றாலும் வேடிக்கை பார்த்ததிலும் போட்டிகளில் பங்கெடுத்ததிலும் அதிகம் ஆக்கிரமித்தது வெள்ளையர்களே. எதோ கோயில் திருவிழாவுக்கு காவடி எடுப்பது போல முன்பதிவு செய்யாமல் எல்லாம் படகுப்பந்தயத்தில் கலந்து கொள்ள முடியாதாம். இதற்காக முறைப்படி படகுச் சங்கத்தில் முறையாகப் பதிவு செய்து ஓவ்வொரு வாரமும் இரு தினங்கள் பயிற்சியாக ஆண்டு முழுவதும் கற்றே களம் இறக்குவார்களாம். அடுத்த சீனப்புதுவருடத்துக்கு சீனாவிற்கு விமான டிக்கட் கிடைக்காவிட்டால் சிட்னி வாருங்கள்.

"ஏனப்பா தமிழாக்களை இங்கே காணவில்லை" என்று அப்போது கூட்டாளி கேட்டார்.

"சனிக்கிழமை எல்லோ, பிள்ளையளை சுவிம்மிங்கிற்கு கொண்டு அலையோணுமெல்லே".

10 comments:

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

//ஜோடனைகளுடன்//
நீங்களுமா பிரபா??

டாலிங் ஹாபர் தண்ணீக்க 'இறக்கியிருக்க' அந்தப் பிள்ளையளின்ட நீச்சல் சீத்துவம் தெரிய வந்திருக்கும். (இதைப் பார்த்திட்டு சிறுவர் வதை என்டு கொடி தூக்கிக் கொண்டு வராதேங்கோ!) :O))

கார்திக்வேலு said...

//"சனிக்கிழமை எல்லோ, பிள்ளையளை சுவிம்மிங்கிற்கு கொண்டு அலையோணுமெல்லே"//

:-)

கானா பிரபா said...

//ஜோடனைகளுடன்//
நீங்களுமா பிரபா??

மழை
நான் ஜோடனைகளோடு நிற்கவில்லை ;-) ஜோடனை எண்டால் என்ன சோடனை எண்டால் என்ன..


டாலிங் ஹாபர் தண்ணீக்க 'இறக்கியிருக்க' அந்தப் பிள்ளையளின்ட நீச்சல் சீத்துவம் தெரிய வந்திருக்கும்.
எனக்கும் உதுகளோட களத்தில இறங்க ஆசை, விடமாட்டினமே

கானா பிரபா said...

கார்த்திக்

சனிக்கிழமை பெரும்பாலான குடும்பங்களில் வீக் எண்ட் டாக்சி தான் ;-)

செல்லி said...

அட, இப்படி ஒரு போட்டியும் உங்கை, அதுவும் அழகாக நடக்குதா? நமக்கு இதுவரை நாளும் தெரியாமப் போச்சே!
பதிவு, அற்புதம்!

கானா பிரபா said...

வணக்கம் செல்லி

மெல்பனில இருந்து பிறிஸ்பேன் போன உங்களுக்கு சிட்னி விசயம் புதுசு தான். அடுத்த வருசம் முயற்சி பண்ணினால் பார்க்கலாம்

Kanags said...

//ஏனப்பா தமிழாக்களை இங்கே காணவில்லை" என்று அப்போது கூட்டாளி கேட்டார்.
"சனிக்கிழமை எல்லோ, பிள்ளையளை சுவிம்மிங்கிற்கு கொண்டு அலையோணுமெல்லே//

தமிழ் ஸ்கூல், கோயில்(கள்), இதுகளையும் சேருங்கோ:)

கானா பிரபா said...

//தமிழ் ஸ்கூல், கோயில்(கள்), இதுகளையும் சேருங்கோ:)//

:-))

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
என் தம்பி அனுப்பிய படங்களிலும் பார்த்த இடமெல்லாம் நீக்கமற சீன முகம்;;என்ன? சீனாவிலா? எடுத்ததெனக் கேட்டேன்.
சீன வருடப்பிறப்பு அமர்களமாக எல்லா இடங்களிலும் கொண்டாடப் படுகிறது.
கேரளப் படகுப் போட்டி..இப்படி பர்மா;தாய்லாந்து;கம்போடியாவிலும் வசந்தகாலக் கொண்டாட்டமாக நடத்துவாங்க..
நல்ல படங்கள்

கானா பிரபா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் யோகன் அண்ணா