Tuesday, 13 February 2007

சூடாகும் அவுஸ்திரேலியா

காலநிலைச் சமநிலையற்ற தன்மை என்பது இப்போது உலகை அச்சுறுத்தும் ஒரு விடயம் என்பது நீங்கள் அறிந்தது. இச்சீரற்ற தன்மை மற்றைய நாடுகளோடு ஒப்பிடும் போது அவுஸ்திரேலியாவை அதிகம் தாக்கும் என்று புவியியல் சார் வல்லுனர்கள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள்.

இவ்வல்லுனர்களின் கருத்துப்படி இன்னும் 60 வருடங்களில் இந்த மாற்றத்தை நான் உணரமுடியும் என்கிறார்கள். அதாவது மெல்பனில் சராசரி வெப்பநிலை 4 வீதத்தாலும், ஆகிய இடங்களில் 5 வீதத்தாலும், சிட்னியில் 6 வீதத்தாலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கின்றார்கள்.

அத்தோடு வருடம் 2050 இல், உள்ளக ஆற்றுப்படுக்கைகளின் நீர்மட்டம் வீதத்திலிருந்து 25 வீதமாகக் குறையும் என்றும் இதனால் உள்நாட்டு வேளாண்மை பாதிக்கப்படும் அபாயமும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே வெப்ப காலங்களில் எதிர்நோக்கும் காட்டுத் தீ போன்ற சவால்கள் இருக்கும் அதே வேளை இந்த எதிர்வு கூறல்கள் மூலம் நிரந்தர வரட்சி, மற்றும் வெப்ப மாறுதல்களால் வரும் இறப்புக்களின் அதிகரிப்பும் ஏற்படலாம் என்பது கவனிக்க வேண்டியது.

14 comments:

Kanags said...

என்ன இப்படிப் பயப்படுத்திறியள் பிரபா!!

Pot"tea" kadai said...

எங்களுக்கு இன்னும் ஒரு ஆறு மாசத்துக்கு பிரச்சினை கிடையாது.

இரண்டுவாரங்களாக கடும் மழை. 9 வருடங்களுக்கு பின் பர்டெக்கின் ஆறு நிரம்பி வழிகிறது. ஆயர் அணையும் வழிகிறது.

விவசாயிகளுக்கு கொண்டாட்டம்.கரும்பு இவ்வருடம் அமோகமாக இருக்குமென பட்சிகள் கூவுகின்றன.

மற்றபடி தென் துருவத்திற்கு வெகுஅருகாமையில் இருப்பதால் ஓசோன் ஓட்டையில் நமக்கு தான் அதிக சேவை :(

அத்தோடு காட்டுத்தீ, பொது போக்குவரத்தைப் பற்றிய மக்களின் அறிவிலித்தனம் மற்றும் அரசாங்கத்தின் மெத்தனம் அனைத்தையும் ஒருக்கால் பார்த்தால் சில வருடங்களில் ஆஸியின் வெப்பம் அநியாயத்திற்கு எகிற வாய்ப்புள்ளது.

ஆனால் இங்கே ஐயாம் ஃபீலிங் ஹோம்.

கானா பிரபா said...

பிரச்சனையில்லை அண்ணா, 2050 இல நாங்கள் இருப்பமோ தெரியேல்லை ;-)

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

இன்னும் கொஞ்சம் விளக்கியிருக்கலாம் என்டு தோணுது பிரபா.

"காலநிலை மாற்றத்திற்கும் வறட்சிக்கும் சம்பந்தமிருக்கெண்டு இன்னும் நிருபிக்கப் படவில்லை" என்டு பிரதமர் பாராளுமன்றில சொல்லி அடுத்த நாள் "அப்பிடிச் சொன்னது பிழை" என்டு சொன்னது பாத்தனீங்களா? :O))

கானா பிரபா said...

அரசியல்வாதிகள் சொல்லுறதை நம்பாதேங்கோ ;-)
மழை குறைஞ்சு வெப்பநிலையும் கூடினால் வரட்சி தானே
இன்னும் விரிவாக எழுத ஆசை தான்....நேரம்.. காலம்

கஸ்தூரிப்பெண் said...

//இரண்டுவாரங்களாக கடும் மழை. 9 வருடங்களுக்கு பின் பர்டெக்கின் ஆறு நிரம்பி வழிகிறது. ஆயர் அணையும் வழிகிறது.//

எங்களுக்கு கொஞ்சம் தண்ணி அனுப்புவீங்களா? எப்ப பேச்சு வார்த்தை வைச்சுக்கலாம்?

செல்லி said...

நல்லாயிருக்கு பிரபா

Anonymous said...

நாங்க எல்லாம் கொஞ்ச நாளில் B.B.Q தான்..

கானா பிரபா said...

அதுவும் நல்லதுக்குத் தான் ;-)

சயந்தன் said...

அப்படியே அவுஸ்ரேலியாவில் பொங்கிப் பாய்ந்து நுரை கக்கி பிரமாண்டமாய் விழுகின்ற நீர்வீழ்ச்சிகள் பற்றியும் எழுதுங்கள்.

கானா பிரபா said...

ஏன்? கையை விரிச்சுக்கொண்டு படம் எடுக்கவோ?

கொழுவி said...

கானா பிரபா.. அவுஸ்ரேலியாவில் விழும் அருவிகளை மொத்தமுமாய் உள்ளங் கையில் ஏந்தி பிடிக்கலாமாமே.. உண்மையா..?

கானா பிரபா said...

சயந்தன் எண்டவர் தான் இப்படி முயற்சியில இறங்கினவர் கேட்டுச் சொல்லுறன்

Haran said...

வணக்கம்,
கொழுவி... என்ன... நாங்கள் tab water இனை அருவி எண்டு சொல்லுறேலை :P

உலக வெப்ப நிலை உயர்ந்த படியே செல்கிறது, எவ்வளவு தான் அரசு தண்ணீரை அளவாகப் பாவிக்கும் படி கூறினும், எம்மவர்கள் பலர் தண்ணீரினை விரையப் செய்கின்றார்கள்... எனக்கு தண்ணீரினை விரையம் செய்பவர்களைக் கண்டால் கோபம் தான் வரும்...